அமரர் எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பிறகு தமிழகத்தை ஆட்சி செய்த எந்த முதல்வரும் தொடர்ந்து இரண்டுமுறை வெற்றி பெற இயலவில்லை... அது ஏன்...? ஒவ்வொரு ஐந்தாண்டுகளும் கடந்த 1991 தமிழகம் ஆட்சி மாற்றத்தை
சந்த்திதே வந்துள்ளது... இதோ தற்போது இவ்வாண்டின் மத்தியில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தல் மூலமாக கடந்த ஐந்தாண்டுகள் ஆட்சியில் இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் தலைமையிலான திமுக வீழ்த்தப்பட்டுமீண்டும் செல்வி ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அதிமுக ஆட்சியில் அமர்ந்துள்ளது... திமுக அதிமுக என்று மாறி மாறி ஆட்சியில் அமரும் இவ்விரண்டு பிரதான திராவிட கட்சிகளுமே மக்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற தவறிவிட்டார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை...
மக்கள் மாற்றத்தை மட்டுமல்ல நல்லாட்சியையும் விரும்புகிறார்கள் என்பதை இவ்விரண்டு திராவிட கட்சிகளுமே உணரவில்லை அல்லது உணர மறுக்கிறார்கள்... அல்லது உணராததுபோல நடிக்கிறார்கள்...
அமரர் எம்ஜீஆர் மறைவிற்குப் பிறகு அவரது மனைவியார் மறைந்த ஜானகி அம்மையார் முதல்வரானார்... அவருக்கு பக்கபலமாக நாவலர் நெடுஞ்செழியன் ஆர்.எம்.வீரப்பன், கா.காளிமுத்து போன்றோர் இருந்தனர் அப்போதே அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக மேலவை உறுப்பினராக இருந்துவந்த செல்வி ஜெயலலிதா அதிமுகவை கைப்பற்ற பல முனைப்புகளைகாட்டினார் அப்போது அதிமுகவின் இளைய தலைவர்களாக தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வலையவந்த எஸ்.திருநாவுக்கரசு மற்றும் சாத்தூர் இராமச்சந்திரன் போன்றோர் செல்வி ஜெயலலிதாவை ஆதரித்தனர்...
அதிமுக இரு வேறு பிரிவுகளாக செயல்பட ஆரம்பித்தது. தேர்தல் ஆணையம் அதிமுகவின் வெற்றி சின்னமான "இரட்டை இலை"சின்னத்தை முடக்கிவைத்தது... தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஜா அணி ஜே அணி என இருபிரிவாக போட்டியிட்டது அத்தேர்தலில் ஜானகி அம்மையார் தலைமையிலான அதிமுக ஒரு இடத்தில்கூட வெற்றிபெற இயலாமல் படுதோல்வியடைந்தது... செல்வி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிகண்டு செல்வி ஜெயலலிதாவை மறுக்கமுடியாத அரசியல் தலைமையாக அடையாளப்படுத்தியது... கருணாநிதி அவர்களின் தலைமையிலான திமுக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்தது கலைஞர் கருணாநிதி முதல்வரானார்...
அதன்பிறகு நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலின்போது பிரச்சாரதிற்க்காக தமிழகம் வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.இராஜீவ் காந்தி அவர்கள் படுகொலை செய்யபட்டார் அதன் தொடர்பில் சட்ட ஒழுங்கை காரணமாக கொண்டு திமுக ஆட்சி மத்தியரசால் கலைக்கப்பட்டது... பிறகு நாடாளுமன்ற தேர்தலோடு தமிழகம் சட்டமன்ற தேர்தலையும் சந்திக்ககூடிய சூழ்நிலை ஏற்பட்டது... தமிழகம் முழுமையாக வீசப்பட்ட இராஜீவ் காந்தி அவர்களுக்கான அனுதாப அலையால் செல்வி ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான ஒருங்கிணைந்த அதிமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றியடைந்தது... திமுக வரலாறுகாணாத தோல்வியை தழுவியது...
மக்களின் மாற்றத்தைவிரும்பிய மனநிலையும் அமரர் இராஜீவ் காந்தி அவர்களின் மரணத்தால் ஏற்பட்ட அனுதாப அலையும் பெரும்பான்மை பலத்துடன் செல்வி ஜெயலலிதாவை முதல்வராக்கியது... ஊழல்... அராஜகம்... பழிவாங்கல்... என்பதற்கான முழு உதாரனங்களும் அம்மையார் ஆட்சியில்தான் மக்களுக்கு முழுமையாக உணர்த்தப்பட்டது... மக்களுக்கான எந்த திட்டங்களும் செயல்படுத்தபடாத நிலையில் அம்மையார் அவர்களின் தோழியின் குடும்பத்தார்களின் பிடியில் தமிழகம் முழுமையாக கொண்டு செல்லப்பட்டது... தோழியின் குடும்பதில் இருந்தே திடீரென ஒரு வளர்ப்புமகன் உதித்தார் உடணடியாக வளர்ப்புமகனுக்கு மறைந்த செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் குடும்பத்தில் இருந்து பெண் பார்த்து இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா ஆகியோரின் திருமணதிற்கு இணையாக திருமணமும் நடத்திவைக்கபட்டது. தமிழகத்தில் இருக்கும் பெரும்பான்மையான நகைகடைகளே தமிழகத்தின் வீதிகளுக்கு வீதி உலா வந்ததுபோல இருந்தது அம்மையார் அவர்களும் அவர்தம் தோழியாரும்
நடந்துவந்தது...
மக்களின் ஒருமித்த வெறுப்புணர்வும் அம்மையாரின் பக்கம் திரும்பியது அது மட்டுமில்லாது அதிமுகவை சார்ந்த அமைச்சர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை கடைபிடித்த அராஜகம் மக்களை ஆட்சி மாற்றத்திற்கான நிலைக்கு தள்ளியது. 1996 ல் தமிழகம் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தது அதற்காகவே காத்திருந்தபோல மக்கள் அதிமுகவை படுதோல்வியடைய செய்து திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார்கள்... அத்தேர்தலில் அதிமுகவின் தலைவியாகிய அம்மையார் தான் போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் மக்களால் வீழ்த்தபட்டார்... அரியணை ஏறிய திமுக கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை கண்டறிந்து முன்னாள் முதல்வரான அம்மையார் ஜெயலலிதா உட்பட ஏறக்குறைய அவரது அமைச்சரவையில் அமைச்சர்களாக பாதையில் இருந்த அனைவருமே கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கபட்டனர்... அம்மையாரின் ஊழல் வழக்கில்
அவர் பயன்படுத்திய நூறு ஜோடி செருப்புகள்கூட சாட்ச்சிக்கு கொண்டுவரப்பட்டது...
பொறுப்பேற்ற திமுக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிக்கைகள் மூலமாக மட்டுமே நடத்திகொண்டிருந்தது. அப்போதைய திமுக ஆட்சியில்தான் பல மேம்பாலங்கள் கட்டப்பட்டது சமத்துவபுர குடியமைப்புகள் கட்டப்பட்டது, உழவர் சந்தை கட்டிடங்கள் கட்டப்பட்டது...இதுதவிர மக்களுக்கான எத்தகைய அடிபடை வசதிகளும் முன்னெடுக்கப்படவில்லை. ஆக திமுக அரசும் மக்களின் வெறுப்பை சம்பாதிக்க வெகுநாட்கள் ஆகவில்லை... வழக்கம்போல திமுகவை சார்ந்தவர்களின் அடாவடித்தனமும் கட்டவில்க்கப்பட்டது. அத்தகைய சூழலை சாதகமாகி கொண்ட எதிர்கட்சிகள் மீண்டும் உயிர்பெற்றன... திமுக ஆட்சியில் நடந்துள்ள ஊழல்களை மக்கள் ஏய்ப்பு நிகழ்வுகளை மக்களுக்கு தெரியபடுத்தின... திமுக ஆட்சியில் போடப்பட்டு நடைமுறைபடுத்தபட்ட அனைத்து திட்டங்களுமே சிமென்ட்டை அடிபடையாக கொண்டு செயல்படுதபட்டவை என்பதை மக்கள் கவனிக்க துவங்கினார்கள்...அதில் நிகழ்ந்துள்ள ஊழலை மக்கள் உணர்ந்தார்கள் மீண்டுமொரு ஆட்சி மாற்றத்திற்கான மனநிலைக்கு மக்கள் இயல்பாகவே வந்தார்கள்...
2001 ல் சட்டப்பேரவை தேர்தல் மக்கள் மாற்றி வாக்களித்தார்கள் திமுக வீட்டுக்கு அனுப்பப்பட்டு மீண்டும் அதிமுக அரியணை ஏறியது... இயல்பாகவே பழிவாங்கல் நடவடிக்கைகளை பெரிதும் விரும்பும் ஜெயலலிதா அம்மையார் தன்னையும் தனது சகாக்களையும் சிறைவைத்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்து சிறையிலடைத்தார்... அப்போதைய
அதிமுக ஆட்சியிலும் மக்கள் நல பணிகள் எதுவுமே நிறைவேற்ற படவில்லை என்பதுதான் கவலைக்குறியது... இடையில் கடந்த ஆட்சியாளர்களால் அம்மையார் மீது போடப்பட்ட டான்சி வழக்கிற்காக சிலகாலம் முதல்வர் பதவியை துறந்தார் ஓ.பன்னீர் செல்வம் பொம்மை முதல்வரானார்.. ஆறுமாத காலத்திற்கு பிறகு மீண்டும் அம்மையாரே மீண்டும் முதல்வரானார்... ஆட்சிகள் மாறினாலும் மக்களின் நிலையில் எவ்விதமான மாதரமும் நிகழ்ந்துவிடவில்லை... அதே ஊழல்... அதே அராஜகம்... ஆடு,மாட்டு,கோழி பலியிட தடை சிறுபான்மை மக்களை அச்சுறுத்துவதர்க்காக மதமாற்ற தடை சட்டம், அரசு ஊழியர்களின் உரிமைகளை பறித்த எஸ்மா டெஸ்மா போன்ற அடக்குமுறைகள் தமிழுணர்வாலர்களின் மீது போடப்பட்ட பொடா சட்டம் இதுபோன்ற மக்கள் விரோதபோக்கை மட்டுமே அதிமுக ஆட்சி நிகழ்த்தியது... மீண்டுமொரு ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பினார்கள்...
2006 ல் சட்டப்பேரவை தேர்தல் அதிமுக ஆட்சியை அகற்றியது சிறுபான்மையரசாக காங்கிரஸ்,பாமக,விசிக போன்ற கட்சிகளின் ஆதரவுடன் கலைஞர் கருணாநிதி மீண்டும் முதல்வராக்கப்பட்டார்... வரலாறு காணாத இலவசங்கள் வாரி இறைக்கப்பட்டது மக்களின் கவனத்தை இலவசங்களின்பால் திருப்பிவிட்டு ஊழல் வரலாற்றை திமுக விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடர்ந்தது... காவல்நிலையங்கள் திமுகவினரின் கட்டபஞ்சாயத்து கூடங்கலானது... மக்களின் சராசரியான இயல்பு வாழ்க்கை திமுக ரௌடிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டது... சாயாக்குடிக்க சல்லிகாசு இல்லாமல் இருந்த கிளை நிர்வாகிகளமுதல் கவுன்சிலர்கள் வரை ஸ்கார்பியோக்களில் வலம்வந்தார்கள்... ஊழல்களுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல உலக நாடுகளே ஆச்சரியப்படும் வகையில் திமுகவின் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக பதவியில் இருந்த ஆ.ராசா 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைகற்றை ஒதுக்கீடு ஊழலில் கைது செய்யப்பட்டு இன்றுவரை ஜாமீனுக்காக போராடி வருகிறார்... இதுவரை இலைமறைக்காயாக இருந்து வந்த திமுகவின் குடும்ப அரசியல் இந்த ஆட்சிகாலத்தில் வெளிபடையானது... அனைத்துதுறைகளிலும் திமுகவின் கலைஞர் கருணாநிதியின் குடும்பம் கால்பதித்தது... பல தொழில் நிறுவனங்கள் இதனால் மிகப்பெரிய சரிவை சந்தித்தது... அத்துடன் மட்டுமில்லாது ஈழத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது மத்திய அரசில் அங்கம் வகித்தும் தமிழர்களின் உயிரை பற்றி கவலைகொள்ளாத திமுக ஆட்சியை மக்கள் ரசிக்கவில்லை... கிராமப்புற காப்பிகடைகளில் இருந்து நகர்புற கணிணித் துறைவரை கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் பெரியளவில் தாக்கத்தை விதைத்தது... அதன் விளைவு...
இதோ தமிழகத்தில் மீண்டுமொரு ஆட்சி மாற்றம்...!!!? கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக படுதோல்வியடைந்து முடிவுரை எழுதபட்டுவிட்டதாக தேர்தலுக்கு ஆறுமாத காலம் முன்புவரை பேசப்பட்ட அதிமுக எவரும் எதிர்பார்க்காத வகையில் அசுரபலத்துடன் வெற்றிகண்டது... திமுக மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டது... மக்களின் தேவைகளை உடணடியாக நிறைவேற்றுவேன்...இனி மக்கள் நிம்மதியாக வாழலாம் என அரியணை அமர்ந்ததும் செய்தி வெளியிட்ட அம்மையார் வழக்கமாக தனது பழிவாங்கும் நடவடிக்கைகளை துவங்கிவிட்டார்.. தவறு இளைத்தவர்கள் தண்டனை பெறவேண்டும் தண்டிக்கப்படவேண்டும்... இதில் மாற்றுக்கருத்தில்லை... அதே வேளையில் மக்களுக்கான திட்டங்களும் முடக்கபடுவது அதிமுக ஆட்சியின் ஆரம்பமே மக்களை வருத்தத்தில் தள்ளியுள்ளது என்பதை மறுக்க இயலாது... சமசீர் கல்வி திட்டத்தை தடுத்து சுமார் இரண்டுமாதகாலம் மாணவர்களின் கல்வி பாழடைந்தது.... சிறப்பான முறையில் ஏழைகளுக்கு நம்பிக்கையூட்டிய கலைஞர் காப்பீட்டு திட்டம் நிறுத்தபட்டவிட்டது... இப்படியாக சொல்லிகொண்டே போகும் வகையில்தான் மக்கள் மாற்றத்தை விரும்பி ஏற்றுக்கொண்ட அதிமுகவின் ஆட்சியையும் நடந்துவருகிறது...
ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு பிறகும் மக்கள் தங்களுக்கான நல்லாட்சியை தருவார்கள் என்கிற நம்பிக்கையில் திமுக மற்றும் அதிமுகவை அவர்களின் கடந்தகால ஊழல்களையும் அராஜகங்களையும் மறந்து மன்னித்து ஆட்சியில் அமரவைக்கிறார்கள்... மக்களின் எதிர்பார்ப்பு நாட்டில் பாலாரும் தேனாறும் ஓடவேண்டும் என்பதல்ல குறைந்தபட்சம் காவிரி ஆறாவது ஓடவேண்டும் என்பதுதான்..
அப்பாவி தமிழ் மக்களின் அறியாமைகளை பயன்படுத்திக்கொண்டு அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை தங்களின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள்... ஒவ்வொரு தேர்தலின்போதும் தங்களை ஒழுக்கசீலர்களாக காட்டிக்கொள்ளும் இவர்கள் ஆட்சியில் அமர்ந்தவுடன் ஊழல்களுக்கான அடுத்தகட்ட நகர்வுகளையும் பழிவாங்கல் நடவடிக்கைகளையும் மட்டுமே முன்னெடுக்கிறார்கள் தவிர எவருக்கும் தங்களுக்கு மீண்டுமொரு வாய்ப்பை தந்துள்ள மக்களுக்கு உழைக்கவேண்டும் என்கிற எண்ணமில்லை...
அதிமுக ஆட்சிகாலத்தில் ஊழல் புரிந்தவர்களாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் திமுக ஆட்சிக்கு வந்ததும் கட்சிதாவி மீண்டும் பதவி சுகம் அனுபவிக்கிறார்கள்... எப்படியாகினும் மக்கள் பழையவற்றை மறந்து மீண்டும் மீண்டும் நம்மைதான் தேர்வு செய்வார்கள் என்கிற மமதை இவர்களிடம் புரையோடி உள்ளது... ஆக ஆட்சி மாற்றங்களால் மக்களுக்கு எந்தவிதமான நன்மைகளும் ஏற்படபோவதில்லை என்கிற உண்மை நிலையை கடந்த இருபதாண்டுகால திமுக அதிமுக இரு கட்சிகளின் ஆட்சிகளின் மூலமாக
மக்கள் இனியாவது உணர வேண்டும்... ஆம் ஆட்சி மாற்றங்கள் ஒருபோதும் மக்களின் நிலையை மாறா செய்யாது மாறாக மக்கள் முன்னெடுக்க வேண்டியது "அரசியல் மாற்றம்" ஆம் அரசியலில் மாற்றம் ஏற்பட்டால்தான் அனைத்திலும் மாற்றம் ஏற்படும்...
இதுவரை மாறி மாறி மக்களை சுரண்டி வரும் அதிமுக திமுக இரண்டு கட்சிகளுமே தமிழக மக்களால் ஒதுக்கப்பட்ட வேண்டும்... மாற்றாக புதியவர்களின் அரசியல் தலைமை தமிழகத்தில் ஏற்பட்டாக வேண்டும்... நமது தமிழகத்திலேயே எததனையோ நல்ல சிறப்பான அரசியல் தலைமைகள் உண்டு அத்தகைய தலைமைகள் ஆதிக்க சக்திகளாலும் அதிகாரவர்கத்தினாலும் சாதிகளாலும் பொருளாதாரத்தாலும் அடக்குமுறைகளாலும் ஒதுக்கிவைக்கபட்டுல்லார்கள்... அவர்களை அடையாளம் காணவேண்டியது மக்களின் கடமை... சாமானிய மக்கள் நினைத்தால் மட்டுமே இத்தகைய மாற்றங்கள் சாத்தியமாகும்... நீங்கள் கேட்கலாம் சாமானியர்களால் எப்படி அதிகாரத்தில் உள்ளவர்களை மாற்றமுடியும் என்று... ஏன் முடியாது திருவாரூரில் இருந்து சென்னைக்கு பயணிக்க பயணசீட்டே வாங்க முடியாத நிலையில் இருந்த கலைஞர் கருணாநிதியால் எப்படி இன்று ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராகவும்
உலக கோடீஸ்வரர்களில் ஒருவராகவும் வரமுடிந்தது.... இதே சாமானிய மக்கள் அளித்த வாக்குகளாள்தானே... ஒரு சாதாரண நடிகையாக தனது வாழ்க்கையை துவங்கிய இன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களால் எப்படி இந்த நிலையை அடைய முடிந்தது இதே சாமானிய மக்கள் வாரிவழங்கிய வாக்குகளாள்தானே...
ஆக சாமானியர்கலாள்தான் கடந்தகால மாற்றங்கள் நடந்துள்ளது அந்த மாற்றம் மீண்டும் நடக்க வேண்டும் தமிழக மக்கள் மாற்று அரசியலை கட்டமைக்க நல்லவர்களை நாடாள செய்ய முன்வரவேண்டும்... அரசியல் மாற்றம் ஒன்றே அத்துணை பிரச்சனைகளுக்கும் நிவாரணம் என்பத தமிழ் சமூகம் உணரவேண்டும்...
2 கருத்துகள்:
Nalla idukaithaan
Eththani peerukku idhu poi serum?
Valathala paarppavarkal, muka noolil moozhkiyavargal than parththu padiththu
Aduththa paguthikku poi viduvoom.
Makkal mattiyil eppadi kondu poi Intha karuththai serppadhu?
வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.
தினமலம்(ர்?) திருகுதாள திருவிளையாடல் தோலுரிக்கப்படுகிறது! தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக ஊளையிடும் தினமலர்.”ஆர்.எஸ்.எஸ். “ ன் ஊதுகுழலாக பார்ப்பன வன்மத்துடன் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக பகிரங்கமாக செயல்படும் ஆரிய வந்தேறி தினமல கூட்டம்.
.
கருத்துரையிடுக