Subscribe:

செவ்வாய், 25 டிசம்பர், 2012

என் தாயாருக்காக துஆ செய்யுங்கள்...

இன்று டிசம்பர் 26...

என் தாயார் சு.ஹமீதா பீவி அவர்கள் வபாத்தான (மறைந்த) நாள்...

மூன்றாண்டுகள் கடந்துவிட்டது ஆனாலும் என் தாய் இன்றும் என்னுடனேயே இருப்பது போன்ற உணர்வு...

மரணம் என்பது மனிதவாழ்க்கையில் தவிர்க்கமுடியாதது,,, எல்லோரும் ஒருநாள் இறையவனின் அழைப்பை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்... என் தாய் மரணித்ததும் எதார்த்தமான ஒன்றுதான்...

என் குடும்பத்தில் என்னையும் சேர்த்து ஏழுபேர்... நான் ஆறாவதாக பிறந்தவன்... எனக்கு முன்பாக 5 சகோதரிகள்... ஐந்து பெண்களை பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என நமது கிராமபுரங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்... ஆனால் என் தகப்பனார் மர்ஹும் நூ.ச.சுல்தான்மைதீன் அவர்கள் தனது கடுமையான உழைப்பால் எங்களை செல்வசெலிப்புடன் வளர்த்தினார்கள்... அதற்க்கு என் தாயாரும் சிக்கனமான சீரான வரவு செலவுகளுடன் குடும்பம் நடத்தி என் தகப்பானார் அவர்களின் எண்ணங்கள் ஈடேற துணைநின்றார்...

இளையான்குடி கீழமுஸ்லிம் தெருவில் நுழைவிலேயே அமைந்திருக்கிறது எங்கள் வீடு... பிரம்மாண்டமாக எழுந்துநின்று வருவோரை வரவேற்கும்... என் எங்கள் வீடு கட்டிமுடிக்கபட்டபோது நான் பிறந்திருக்கவில்லை... அப்போது எங்கள் தெரு கிழவிகள் என் தாயாரை ஏளனமாக பேசுவார்களாம் "அஞ்சையும் பொட்டையா  பெத்துவஜ்சுகிட்டு எதுக்கு இத்தாம்பெரிய பங்களா" என் தாயார் கண்ணிருடன் அல்லாஹுவிடம் முறையிடுவாராம்...

1973ல் நான் பிறந்தேன் என் தாயும் தந்தையும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லையென எங்கள் தெருவில் வசித்த அப்பாமார்களும் மாமம்மாக்களும் சொல்லக்கேடிருக்கிறேன்... நான் ஆண்பிள்ளையாக பிறக்க வேண்டுமென எண்ணிலடங்கா பிரார்த்தனைகளுடன் வாழ்ந்திருக்கிறார் என் தாய்... ஆம் பிறந்தவுடன் தனது வேண்டுதலை நிறைவேற்ற குளக்கரையில் தேங்கிக்கிடக்கும் பாசியை வழித்து உண்டார் என என் சகோதரிகள் சொல்லியிருக்கிறார்கள்... அதனை ஒருமுறை என் தாயாரே எங்கள் வீட்டிருக்கு வந்திருந்த தலைவர் ஷஹீத் பழனிபாபா அவர்களிடம் சொல்லும்போது கேட்டிருக்கிறேன்...

எனக்கு அடுத்ததாக ஒரு தம்பி... எனக்கு 12 வயதானபோது என் தகப்பனார் அவர்கள் புற்றுநோயால் மரணித்தார்கள்... என் சகோதரிகள் ஐவரையும் நல்ல இடங்களில் மணமுடித்து கொடுத்தபிறகே ஒரு தகப்பனுக்குரிய அனைத்து கடமைகளையும் நிறைவேற்றிய பிறகே என் "அத்தா" காலமானார்கள்... ஆண்பிள்ளை இல்லாத குடும்பம் என்பதால் என் பள்ளிக்கூட பையை பரண்மேல் போட்டுவிட்டு அப்போதே மலேசியாவிற்கு பயணமானேன்... அந்த வயதில் எனக்கு உணவகத்தில் கொடுக்கப்பட்ட வேலை தட்டு கழுவுவது... குவளைகளை கழுவது... கழிப்பறைகளை சுத்தம் செய்வது... மாத சம்பளம் இந்திய ரூபாய் 500
அந்த சொற்ப பணத்திலும் என் தாய் என் தம்பிக்கு வேண்டியதை செய்துவிட்டு என் சகோதரிகளுக்கும் எந்தக்குறையும் இல்லாமல் பார்த்துகொண்டார்...

எல்லா தாய்மார்களும் தங்களது பெண்பிள்ளைகள்  மேல்தான் அதிகமான அன்புகாட்டுவார்கள் என நான் கேள்விபட்டிருக்கிறேன்... ஆனால் என் தாய்க்கு நானும் என் தம்பியும் தான் எல்லாம்... கவலையே என்னவென்று தெரியாமல் எங்களை வளர்த்திட்ட எங்கள் தாய்... மகனை மணக்கோலத்தில் காணவேண்டும் என்கிற ஆவலில் எனது 20வது வயதிலேயே எனக்கு மணமுடித்தார்கள்... அடுத்து என் தம்பிக்கும் திருமணமானது...

என் சகோதரிகள் ஏதோ ஒரு சூழலில் என் தகப்பனார் மிதிவண்டியில் பலகாரவகைகளை தயாரித்து எடுத்துகொண்டு பல மையில்கள் சுற்றி அலைந்து விற்று ஈட்டிய பொருளில் கட்டிய எங்கள் மாளிகையை விற்க வேண்டுமென ஆர்வம் காட்டினார்கள்... இறுதியாக அவர்களின் ஆர்வமமே வென்றது... என் தாயார் மனத்தால் அன்றைக்கே இறந்துவிட்டார்... இறுதி காலங்களில் என் தாயார் என் சகோதரிகள் மற்றும் என் தம்பியுடன்தான் வசித்தார்கள்... நான் தனியாக (சொந்த வீட்டை இழந்துவிட்டோம் என்கிற விரக்தியில்) வசித்தேன்...

ஒரு நாள்... மலேசியாவில் நள்ளிரவு என் அக்கா எனது அலைபேசிக்கு அழைப்புவிடுத்தார் அம்மா உன்னிடம் பேச வேண்டுமாம் என்றார்...

என் அம்மாவிடம் பேசினேன் இபுராஹிம் நல்ல இருக்கியாமா... என் தாயாரின் குரலில் எப்போதும் உள்ள கம்பீரம் இல்லை... அம்மா நான் நல்ல இருக்கேமா நீங்கள் நல்ல இருக்கீங்களா? நல்ல இருக்கேன்மா ஆனா அம்மா இன்னும் ரொம்ப நாளைக்கு இருக்க மாட்டேன்மா... உன்னை பார்க்கணும்போல இருக்கு அம்மா மவுத்தா போறதுக்குள்ள வந்து பார்த்துரும்மா... என்றார்கள்... அம்மா அப்படியெல்லாம் பேசாதீர்கள் அல்லாஹ் உங்களுக்கு எந்த கஷ்டத்தையும் தரமாட்டான்... இன்ஷாஅல்லாஹ் நான் எப்படியும் ஒரு வாரத்தில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வைத்தேன்...

மறுநாள் காலை வழக்கம்போல பரபரப்பான வேலைகளில் நான் மூழ்கி இருந்த வேலை என் மனைவியிடமிருந்து அழைப்பு... ஹலோ என்றேன் என் மனைவியின் குரல் அழுகையாகமட்டுமே கேட்டது என்ன என்றேன்... மாமி (என் அம்மா) இறந்துவிட்டார்கள் என்றால்... என் இதயம் சில நிமிடங்கள் தனது இயக்கத்தை நிறுத்தியது... என்னையறியாமல் என் விழிகளில் கடலின் கொந்தளிப்பு கொப்பளித்து... சில மணிநேரங்களுக்கு முன்பாக என்னிடம் பேசிய என் தாய் இறந்துவிட்டார் என்கீற செய்தியை என்னால் நம்பமுடியவில்லை...

என்னை திடபடுத்திகொண்டு உடனடியாக தாயகம் நோக்கி பயணமானேன்...

என் வருகைக்காக என் சொந்தங்கள் நண்பர்கள் என ஒரு பெரும் கூட்டமே காத்திருந்தது... என்னை கண்டதும் என் சகோதரிகளின் வெடித்துசிதறிய அழுகுரல் என்னை சுக்குநூறாய் சிதரசெய்தது... எப்போதும்  நான் தாயகம் வந்துவிட்டால் வாசலில் வந்து நின்று என்னை ஆரத்தழுவி வரவேற்கும் என் தாய் இப்போது என் சகோதரியின் வீட்டு மத்தியில் கிடத்திவைக்கபட்டு இருந்தார்...

எங்கள் அம்மா அல்லாஹுவின் அழைப்பை ஏற்றுகொண்டார்... இனி நான் செய்யவேண்டியது என் தாயின் மறுமை வாழ்விற்கான துஆக்கள்தான்... ஆனால் என் மனதில் இன்றைக்கும் உருத்திகொண்டிருக்கும் எண்ணம் நான் என் அம்மாவிற்கு செய்யவேண்டிய கடமைகளை முழுமையாக செய்தேனா??? என் அம்மா எங்களுக்காக செய்த தியாகங்கள் சொல்லிமாளாது...

கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் என் தாயார் இந்த உலகவாழ்க்கையை நிறைவு செய்து பயனபட்டார்கள்...

தலைவர் ஷஹீத் பழனிபாபா அவர்கள் என் தாயார் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தார் என் தாயாரும் என் மூத்தமகன் பழனிபாபா தான் என பெருமையாக சொல்வார் தலைவர் பாபா ஒருமுறை என் தாயாரிடம் சொன்னார் நீங்க ஏனம்மா கவலைபடுறீங்க... நீங்க ஒரு நல்ல பிள்ளைக்கு தாய் என்பதைவிட உங்களுக்கு என்ன வேண்டும்... ஆம் என் தாயாரை யாரும் குறைசொல்லமுடியாதபடி நானும் என் கடமையை செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன்... இருப்பினும் நான் என் தாயாரின் மனம் நோகும்படி நடந்திருந்தால் அல்லாஹ் என்னை மன்னிக்க வேண்டி துஆ செய்யுங்கள் என் இனமான உறவுகளே... அதேபோல என் அம்மா அத்தா ஆகியோரின் சுவன வாழ்க்கையை அல்லாஹு பிரகாசமாகிவைத்திட துஆ செய்யுங்கள்...

வேங்கை.சு.செ.இப்ராஹிம்


ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

அத்துணை இன்னல்களுக்கும் தீர்வு அரசியல் அதிகார வென்றெடுப்பே... வேங்கைஇப்ராஹீம் பேச்சு...

வேங்கை சு.செ.இப்ராஹீம் உரையாற்றுகிறார்...

திரண்ட மக்கள் திரளில் ஒரு பகுதி...
செப்டம்பர் 29ம் தேதி தேனி மாவட்டம் கம்பம் நகர இந்திய தேசிய லீக் கட்சியின் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம்
அக்கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சகோ.இப்ராஹீம் உஸ்மானி அவர்கள் தலைமையில் நடைபெற்றது 
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட வேங்கை சு.செ.இப்ராஹீம் அவர்களின் உரையில் இருந்து...

இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்கள் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் மட்டுமல்ல உலககெங்கிலும் பயங்கரவாததிற்கு எதிராக போராடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்... அதற்க்கு சரியான சான்றுதான் அண்மைய அமெரிக்க இணையதள குறும்படம்... ஆம் என் சமுதாய சொந்தங்களே நமது ஒப்பற்ற ஒரே தலைவர் அண்ணல் நபிகள் நாயகத்தை இழிவாக சித்தரித்து அமெரிக்க ஆதரவுடன் படமெடுத்த யூதநாயை கண்டித்து இப்போது நாம் உலகமெங்கும் ஆர்பாட்டங்கள் பேரணிகள் என்று வீரியமாக நடத்தி வருகிறோம்... இதில் நமது தமிழக முஸ்லிம்கள் நெஞ்சை நிமிர்த்திகொள்ளுங்கள் காரணம் உலக வல்லரசான அமெரிக்காவின் துணைதூதரகத்தை உலகிலேயே இயங்கவிடாமல் செய்த பெருமையை சென்னையில் நமது சகோதரர்கள் நமக்கு தந்திருக்கிறார்கள்... 

சமுதாய சொந்தங்களே... இந்த அமெரிக்க படத்தின் மூலமாக முஸ்லிம்களுக்கு எதிரான சர்வதேச பயங்கரவாததிற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் திட்டமிடுகிறது என்பதை நாம் உணரதவறககூடாது... ஆம் செல்வசெழிப்பாக திகழ்ந்த ஈராக் இன்றைக்கு எந்த நிலையில் உள்ளது அங்குள்ள நமது சகோதரிகள் தங்கள் பிள்ளைகளின் உணவு மருத்துவதிற்க்காகாக தங்கள் உடல் உறுப்புகளை விற்று வாழக்கூடிய அவலம் இதனை யார் ஏற்படுத்தியது...? உலகை அச்சுறுத்தக்கூடிய ஆயுதங்களை பாரசீக சிங்கமென ஈராக்கை ஆட்சிபுரிந்த அதிபர் சதாம் ஹுசைன் பதுக்கிவைத்துள்ளார் என்கிற பொய் கதையை புனைந்து உலக பயங்கரவாதி அமேரிக்கா ஈராக்கின் மீது தாக்குதல் நடத்தினான்... அதிபர் சதாம் ஹுசைன் அவர்களின் பல் இடுக்குகளில் கூட ஆயுதங்களை தேடிய அமேரிக்கா முடிவில் உலக முஸ்லிம்கள் அனைவரும் தியாகப்பெருநாள் கொண்டாட்டங்களில் இருந்தபோது சதாம் ஹுசைன் அவர்களை தூக்கிலிட்டு கொலை செய்தான்... ஆம் அவனது நோக்கம் நச்சு ஆயுதங்களை கலைவதல்ல தனக்கு அடிபணிய மறுக்கும் சதாம் ஹுசைனை அழிப்பதே... அதில் வெற்றியும் கண்டான் இன்று அவனது காலனியின் கீழ் ஈராக் செல்வம் கொழித்த அந்த இஸ்லாமிய பூமி இன்று பசியாலும் பஞ்சத்தாலும்... 

செப்டம்பர் பதினொன்று அமெரிக்க இரட்டைகோபுர தாக்குதலை காரணமாக காட்டி ஒசாமா பின் லேடனை பிடிக்க வேண்டும் என்கிற போர்வையில் தாலிபான்களை ஒழிக்க வேண்டுமென்கிற பொய்மையில் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தான்... அந்த சிறிய இஸ்லாமிய தேசத்தை சிதைத்து கைப்பற்றினான்... லிபியா வீரத்தின் விலைநிலமாக திகழ்ந்த கர்னல் கடாபியை ஒரு நாயை அடித்துகொல்வது போல அந்நாட்டின் சொந்த மக்களை கொண்டே கொலை செய்தான்... இன்றைக்கு அவனது அடிமை அரசாங்கம் அங்கு... அடுத்து அவனது இலக்கு சிரியா...ஈரான் என தொடர்கிறது... இந்த அயோக்கியத்தனங்களை போது சமூகம் தட்டிகேட்டுவிடக்கூடாது என்பதினால் உலக முஸ்லிம்களின் மீது பயங்கராவாத முத்திரையை குத்திட அமெரிக்கன் செய்திட்ட  சதிதான் நபிகள் நாயகம் அவர்கள் பற்றிய படம்... 

அப்படத்தை முதலில் ஆங்கில மொழியில் வெளியிட்டது யூதூப் அது அவர்கள் எதிர்பார்த்த அளவில் முஸ்லிம்களிடம் செல்லவில்லை என்பதனால் உடணடியாக அரபு மொழியில் மொழிமாற்றம் செய்து இணையத்தில் உலவவிட்டனர்... அவர்கள் எதிர்பார்த்து போலவே அரபுதேச மக்களிடம் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது அப்படம் தங்கள் தலைவரை இழிவுபடுத்திய அச்செயலை கண்டித்து போராடிவரும் முஸ்லிம்களை போது சமூகத்தளங்களில் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் வேலைகளை அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்று செய்து வருகிறது... பேடித்தனமாக சிறிய இஸ்லாமிய தேசங்களை நாசபடுத்திவரும் அமெரிக்க ஆண்மை இருந்தால் அவனுக்கு எதிராக உலக வல்லரசாக உருவாகிவரும் சீனாவின் மீது தாக்குதல் தொடுக்கவேண்டும்... மாறாக வலிமைகுன்றிய இஸ்லாமிய தேசங்களின் வளங்களை அழிப்பதன் மூலமாக உலக முஸ்லிம்களை ஒழிக்க திட்டமிடுகிறான்... அல்லாஹுவின் பாதையில் பயணிக்கும் இஸ்லாமிய சமுதாயம் இந்த அயோக்கியத்தனங்களை எல்லாம் தவிடு பொடியாக்கும்... 

நமது இந்தியதேசத்தை பொறுத்தவரை சங்கபரிவாரங்கள் மட்டுமே முஸ்லிம்களுக்கு எதிரான நிலையில் இல்லை... அனைத்து அதிகாரவர்க்கமுமே முஸ்லிம்களுக்கு எதிர்நிளைபாட்டில் தான் இருக்கிறார்கள்... கடந்த அய்யாவின் ஆட்சிகாலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அனைத்துமே அம்மாவிற்கு பிடிக்கவில்லை... சுமார் ஆயிரம்கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு சென்னையின் மையப்பகுதியில் கம்பீரமாக காட்சியளிக்கும் தலைமை செயலக கட்டிடம் இப்போது பாம்புகளும் பல்லிகளும் குடியிருக்கும் கூடாரமாகிபோனது ஏன்? அது அய்யாவின் இலட்சியகனவாக கட்டப்பட்டது ஆகையினால் அம்மாவிற்கு பிடிக்கவில்லை இன்று ஆயிரம்கோடி அனாமத்தானது... வரலாற்று சிறப்புமிக்க அறிவுகளஞ்சியமாக உருவானது அண்ணா நூற்றாண்டு விழா நூலகம்... இன்று இல்லை காரணம் அய்யாவினால் உருவாக்கப்பட்டது அம்மாவிற்கு பிடிக்கவில்லை ஆகவே இப்போது நூலகம் இல்லை... ஏழை எளிய மக்களின் சுகாதார சொர்க்கமாக உருவானது கலைஞர் காப்பிட்டு திட்டம் அய்யா உருவாக்கினார் என்பதினால் அம்மாவிற்கு பிடிக்கவில்லை அத்திட்டம் இப்போது நடைமுறையில் இல்லை... ஆக இப்படியாக அய்யா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எதுவுமே அம்மாவுக்கு பிடிக்கவில்லை... அதனால் அய்யாவினால் சிறையிளடைக்கபட்டு பல்லாண்டுகாலமாக வாடும் அப்பாவி முஸ்லிம்கள் அம்மாவினால் விடுவிக்கபடுவார்கள் என முழுமையாக நம்பினோம்... கடந்த வருட நோன்பு பெருநாளைக்கூட நாங்கள் மகிழ்ச்சியாக எதிர்பார்க்கவில்லை மாறாக செப்டம்பர் பதினைந்தைதான் எதிர்பார்த்தோம் ஆனால் ஏமாற்றமடைந்தோம்... ஒரு உண்மை விளங்கியது முஸ்லிம்களின் பிரச்சனை என்றால் அய்யாவானாலும் அம்மாவானாலும் அனைவரின் நிலைபாடும் ஒன்றுதான்... 

இன்று நமது சமூக விடியலுக்காக போராட வீரியமான பல்வேறு அமைப்புகள் உண்டு... ஆம்புலன்ஸ் அர்பணிப்புகள்... இரத்தனதான நிகழ்வுகள்... ஆர்பாட்டங்கள்...பேரணிகள்..பொதுக்கூட்டங்கள்...மாநாடுகள் என களமாடும் சமுதாய அமைப்புகளின் நிலைகளில் நமக்கு மிகுந்த மரியாதை உண்டு... ஆனால் இவற்றால் நாம் எந்த இலக்கை அடைந்துள்ளோம்... சிந்தித்து பாருங்கள்... ஒன்றுமில்லை... இவற்றில் எதுவுமே செய்யாமல் எப்படி மற்ற சமூக மக்களால் சுமூகமாக வாழமுடிகிறது? சிந்தித்து பாருங்கள்... ஆம் அவர்களிடம் உள்ள அரசியல் தெளிவு நம்மிடம் இல்லை... இன்றைக்கு நமது சமூகத்திற்கு தேவை அரசியல் அதிகாரம்... அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதன் மூலமாக மட்டுமே நம்மால் அடுத்த தலைமுறை சமுதாயத்திற்கு விடியலை உருவாக்கிட முடியும்... ஆகவே என் இனமான உறவுகளே... நீங்கள் எந்த அமைப்புகளில் வேண்டுமானாலும் பங்காற்றுங்கள்... எந்த கொடியை வேண்டுமானாலும் தூக்கிபிடியுங்கள்...எந்த கொள்கையில் வேண்டுமானாலும் நிலையாக இருங்கள்... ஆனால் ஒன்றை மட்டும் உங்கள் தலைமைகளிடம் வலியுறுத்துங்கள் ஆம்... எங்களுக்கு அரசியலை கற்றுத்தாருங்கள்... எங்களை அமைப்பாக்குங்கள்...அரசியல் படுத்துங்கள் என்பதை வலியுறுத்துங்கள்... அரசியல் அதிகாரத்தை பெறாதவரை நாம் தீவிரவாதிகளாகத்தான் அதிகாரவர்க்கத்தால் ஊடகங்களால் வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்க்கபடுவோம்... வெங்காய வியாபாரிகள்கூட வெளிநாட்டு உளவாளிகளாக உருவாக்கபடுவோம்... 

தமிழ் தேசத்தில் காங்கிரஸ் அரசை வீழ்த்தி இன்றைக்கு திராவிட ஆட்சி உருவாகிட காரணமாக திகழ்ந்தவர் கண்ணியதலைவர் காயிதே மில்லத் அவர்கள்... அவரைவிடவா ஒரு அரசியல் ஆசான் நமக்கு வேண்டும்? அவரை படித்தாலே நமது சமூகம் அதிகாரத்தை இன்ஷாஅல்லாஹ் வெல்லும்... சமூகப்புரட்சியாளர் ஷஹீத் பழனிபாபா எத்தகைய தூரநோக்கு திட்டத்துடன் அரசியல் களமாடினர்... அதனைவிடவா ஒரு வீரிய திட்டமிடல்  நமக்கு வேண்டும்... அவற்றை படித்தாலே இன்ஷாஅல்லாஹ் நாம் அடுத்த இலக்கை அடைந்துவிட முடியும்... அரசியல்படுவோம்...அமைப்பாய் திரள்வோம்...அதிகாரம் வெல்வோம்... 



புதன், 27 ஜூன், 2012

பழனிபாபா-வாசிக்கபடவேண்டிய வரலாறு...


சமூகப்புரட்சியாளர் ஷஹீத் பழனிபாபா 
பழனிபாபா-வாசிக்கபடவேண்டிய வரலாறு...


பழனிபாபா
எண்பதுகளின் துவக்கத்திலிருந்து தொண்ணூறுகளின் மத்தி வரை ஆளும் வர்கதிர்க்கும் அடக்குமுறையாளர்களுக்கும் தூக்கம் கெடுத்த சிம்மசொப்பனம்...

தனக்கென பெரிய அமைப்பில்லை தனியான அலுவலகமில்லை...  பின்பற்றி வரக்கூடிய தொண்டர்படையில்லை... சொந்த சமுதாயதிற்க்குள்ளும் பெரியளவில் ஆதரவில்லை... எந்தவிதமான அதிகாரபதவியும் இல்லை... ஆனால் மேற்குறிபிட்ட அனைத்தும் இருப்பவர்களால் சாதிக்க முடியாத பலவற்றை சாதித்த தனிமனித இராணுவம்தான் பழனிபாபா... 

கண்ணியதலைவர் காயிதேமில்லத் அவர்களின் மறைவிற்குப் பிறகு தமிழகத்தின் இஸ்லாமிய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளை உரிமைகளை அரசுக்கு கொண்டு செல்லக்கூடிய வீரியமான தலைமை வெற்றிடமாகிபோனபோது... முஸ்லிம்களுக்கு எதிராக சங்கபரிவாரங்கள் தங்களது கட்டுகதைகளை கட்டவிழ்த்துவிட்டபோது தட்டிகேட்க யாருமே இல்லையா என்கிற ஏக்க பொருமல்கள் சமுதாய சாமானிய மக்களிடம் பரவிவந்தபோது தனது வீரியமான வீரமான உரைகளால் தமிழக முஸ்லிம்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு தைரியமூட்டியவர் பழனிபாபா...

நாங்கள் கைபர் போலன்  கணவாய் வழியாக ஆடுமாடுகளை ஒட்டிக்கொண்டு இந்திய தேசத்திற்குள் அத்துமீறி நுழைந்தக்கூட்டமல்ல... இந்த மண்ணின் மைந்தர்கள்... ஆரிய அடிமைதுவதில் இருந்து எம்மக்களை மீட்டெடுக்க இஸ்லாம் என்கிற மார்க்கத்தைத்தான் நாங்கள் இறக்குமதி செய்துகொண்டோம் மாறாக நாங்களே இறக்குமதி செய்யப்பட்ட மக்கள் அல்ல... என வீரியமாக முழங்கி இஸ்லாமியமக்களின் இந்தியபற்றை பறைசாற்றியவர் பழனிபாபா... செல்வசெலிப்பான குடும்பத்தில் பிறந்திட்டபோதும் தன்னை சுற்றி நடக்கும் அநீதிகண்டு வெகுண்டெழுந்து சுகபோக வாழ்க்கையை துறந்தவர் இவற்றுக்கெல்லாம் யார்காரணம்... முஸ்லிம்களுக்கு எதிராக பின்னப்படும் சதிவலைகளுக்கு சொந்தகாரர்கள் யார் என்பதை துல்லியமாக கண்டறிந்து களமாடினர் பழனிபாபா... 

ஆம் பார்ப்பனீயம் மட்டுமே முஸ்லிம்களுக்கு எதிரி ஆரியம் மட்டுமே முஸ்லிம்களை இந்தியநாட்டின் வெகுஜன மக்களிடமிருந்து பிரித்தாலக்கூடிய சூழ்ச்சிகளை முன்னெடுக்கிறது என்பதை பாமரமக்களும் அறியும்வண்ணம் அழகாக தனது பாணியில் எடுத்துரைத்தார்... விளைவு பார்ப்பனர்கள் தவிர்த்து தமிழர்கள் பழனிபாபாவை ஏற்றுகொள்ள துவங்கினார்கள்... தந்தை பெரியார் மீதுகொண்ட பற்றால் அறிஞர் அண்ணாவின் கொள்கைகளில் கொண்ட ஈர்ப்பால் தன்னை அறிவிக்கபடாத திமுக பேச்சாளராகவே ஆரம்பகாலத்தில் அடையாளபடுத்திகொண்டார் பழனிபாபா... கலைஞர் கருணாநிதியின் தலைமைத்துவம் முஸ்லிம்களை கில்லுகீரையாக பயன்படுத்துகிறது என்பதை அறிந்து திமுகவின் துரோகத்தை அன்றே முழங்கி அமரர் எம்ஜிஆரின் அதிமுகவிற்கு ஆதரவானார்... ஆரம்பகாலத்தில் அமரர் எம்ஜிஆரால் பெரிதும் மதிக்கபட்டவர்களில் பழனிபாபா அவர்களுக்கு தனி இடமுண்டு... அமரர் எம்ஜிஆர் அவர்களுக்கு திமுகவினால் ஏற்ப்பட்ட பல சோதனைகளில் இருந்து விடுபட பழனிபாபா உதவினார் என்பது மறைக்கமுடியாத உண்மை... ஒரு கட்டத்தில் அமரர் எம்ஜிஆர் தனது ஆரிய விசுவாசத்தை வெளிக்காட்ட துவங்கினார் சென்னை ஈகா திரையரங்க சாலையில் இந்து முன்னணியின் துவக்கவிழா நடைபெற்றது அப்போது பேசிய அமரர் எம்ஜிஆர் முஸ்லிம்களுக்கு முஸ்லிம் லீக் இருக்கும்போது இந்துக்களுக்கு இந்து முன்னணி அவசியம் என்றார்... அதனை வண்மையாக கண்டித்த பழனிபாபா எம்ஜிஆருடனான தனது உறவை முறித்துகொண்டார்...


தனது நாவன்மையின் மூலமாக அமரர் எம்ஜிஆரின் ஆற்றாமைகளை தமிழக மக்களிடம் தோலுரித்தார்... விளைவு அதிமுகவின் ஆட்சி அடக்குமுறைகளுக்கு பழனிபாபா பலவழிகளிலும் பழிவாங்கப்பட்டார் இருப்பினும் தனது நிலையில் மிக உறுதியாக களமாடினர்... எம்ஜிஆர் அவர்களே பழனிபாபா அவர்களின் செயல்களால் அச்சப்பட்ட காலங்களும் உண்டு... அந்த அச்சங்களின் காரணமாக பலமுறை பழனிபாபா பொய் வழக்குகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் அவருக்கு எதிராக வாய்ப்பூட்டு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன... அரசு அலுவலகங்களுக்குள் பழனிபாபா நுழைய அனுமதி மறுக்கப்பட்டது... எந்த சூழலிலும் தனது போர்க்குணத்தை இழக்காத பழனிபாபா எவருடனும் சமரசமில்லாத வீரத்தால் முஸ்லிம்கள் மட்டுமல்லாது ஏனைய பிற்ப்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகமக்களால் பெரிதும் ஈர்க்கபட்டார்... திமுகவின் துரோகம் அதிமுகவின் நம்பிக்கை மோசடி இவற்றை முறியடிக்க பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுடம் கைகோர்த்தார் அவ்வேளையில் அண்ணல் அம்பேத்கரையும் தந்தை பெரியாரையும் அரசியல் குறியீடாக கொண்டு களமிறங்கிய மருத்துவர் இராமதாஸ் பழனிபாபா அவர்களின் முழுமையான அன்பை பெற்றார்... 

மருத்துவர் இராமதாஸ் அவர்களால் முன் மொழியப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்ப்படுத்தப்பட்ட மக்களின் அரசியல் பழனிபாபா அவர்களை வெகுவாக கவர்ந்தது... வடக்கே வன்னியர்கள்... தெற்க்கே தேவேந்திரர்கள்... பரவிவாழும் முஸ்லிம்கள் இணைந்தால் ஆட்சியையும் அதிகாரத்தையும் நம்மால் கைப்பற்ற முடியும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கொள்கை பிரகடனம் செய்தது பழனிபாபா அவர்களால்தான்... முன்னைவிடவும் வீரியமாக பாமகவின் வளர்ச்சிக்கு களமாடினர் பழனிபாபா பெருவாரியான முஸ்லிம்களும் தலித்துக்களும் பாமகவில் அங்கம்பெற காரணமே பழனிபாபா அவர்களின் எழுச்சிகரமான பரப்புரைகள்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது... 

பழனிபாபா தனது மார்க்கத்தில் தெளிவான நிலைபாடுகொண்டவர் எத்தகைய கடவுள் மறுப்பு கூட்டமானாலும் இஸ்லாத்தின் புனிதத்தன்மையை எடுத்து சொல்ல தயங்கியதில்லை... ஆனால் ஒரு குறுகிய வட்டத்திற்குள் தன்னையும் தனது சமூகத்தையும் அடைததுகொள்ள அவர் விரும்பவில்லை... நாம் வாழக்கூடிய நாட்டில் வெகுஜன மக்களுடன் கலந்து புரிந்துணர்வுடன் அதே  வேளையில் இஸ்லாமிய கோட்பாடுகளில் எவ்விதமான சமரசத்திற்கும் இடமில்லாமல் வாழ அரசியல் பொருளாதாரம் போன்ற துறைகளில் முக்கியத்துவம் பெறக்கூடிய வழிமுறைகளை கற்றுத்தந்தவர் பழனிபாபா... 

சமஷ்கிருத மொழியின் முகமூடியில் பார்ப்பனர் இல்லாத மக்கள் எப்படியெல்லாம் கீழ்த்தரமாக நடத்தபடுகிறார்கள் பிராமணர்களால் பிறப்பால் வளர்ப்பால் அசிங்கபடுத்தபடுகிறார்கள் என்பதையெல்லாம் பட்டியலிட்டு பகிரங்கபடுத்தியவர் பழனிபாபா என்பது மறைக்கப்பட்ட உண்மை... தாழ்த்தப்பட்ட சமூகமக்களின் விடுதலைக்காக அவர்களது மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாமல் செயல்பட்ட பழனிபாபா அவர்களால் ஈர்க்கபட்டுதான் ஜான்பாண்டியன் பசுபதி பாண்டியன் போன்றோரெல்லாம் பாமகவில் இணைந்தார்கள்... வழக்கபடியே பாமகவும் பழனிபாபா அவர்களுக்கு இல்லை இல்லை முஸ்லிம்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைத்தது எப்போதும் இல்லாத வகையில் பழனிபாபா கவலைகொண்டார் காரணம் பாமகவை திமுக அதிமுகவைவிட அதிகமாக நம்பினார் பாமக நேரடியாகவே இந்துத்துவ சக்திகளுடன் நட்புகொண்டது பழனிபாபா அவர்களை கவலைக்குள்ளாகியது... 

மாற்று அரசியலை சிந்திக்கவேண்டிய கட்டாயத்திற்கு பழனிபாபா பாமகவினால் கொண்டுசெல்லப்பட்டார் அதற்க்கு தற்போதைய சாட்சியங்கள் நிறைய உண்டு... தேவைபட்டால் வெளிபடுத்துவோம்... தலித் மக்கள் ஆதிக்க சக்திகளால் தாழ்த்தபட்டார்கள் முஸ்லிம்கள் ஆதிக்க சக்திகளின் அச்சுறுத்தலால் தங்களை தாங்களே தாழ்த்திகொண்டார்கள்... ஆக தாழ்த்தப்பட்டவர்களும்... தாழ்த்திகொண்டவர்களும் ஒருங்கிணைந்தால் மட்டுமே இத்தகைய துரோகங்களை வென்றெடுக்க முடியும்... என்கிற தெளிவான மனநிலைக்கு பழனிபாபா வந்தார்... 

முஸ்லிம்களின் மிகப்பெரிய கட்டமைப்பான முஹல்லாஹ் ஜமாத்துக்களை கூட்டமைப்பாக உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுத்தார். அதே வேளையில் ஜான்பாண்டியன் பசுபதி பாண்டியன் போன்றவர்கள் மூலமாக தலித் மக்களை ஒருங்கிணைக்கவும் செயல்திட்டங்களை வகுத்தார்... ஒவ்வொரு ஊருக்கும் தானே தனிமனிதனாக சென்றார் முஸ்லிம்களின் முஹல்லாஹ் ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்தார் தனது திட்டங்களை சொன்னார்... ஏற்றுகொண்டார்கள் இணைந்து களமாட தயாரானார்கள்... தலித் மக்களை சந்தித்தார் இழிநிலை நீங்க சிறப்பான செயல்திட்டங்களை சொன்னார் தலித் மக்கள் பழனிபாபா அவர்களின் பின்னால் அணிவகுக்க தயாரானார்கள்... தேர்தல் அரசியலை புறக்கணித்து தீவிரமாக மக்கள் விடுதலைக்காக களமாடிய திருமாவளவன் பழனிபாபா அவர்களின் கவனத்தை ஈர்த்தார் அவரையும் அழைத்து ஆலோசனைகளை மேற்கொண்டார்... வெண்ணை திரட்டு வந்தது ஆனால் பழனிபாபா என்கிற தாளி சமூகவிரோதிகளால் உடைக்கப்பட்டது.... 

ஆம்... ஒடுக்கப்பட்டோரும் ஒதுக்கபட்டோரும் ஒருங்கிணைத்து அதிகாரத்தை வென்றெடுப்போம் என்கிற சமூகப்புரட்சியாளர் பழனிபாபா அவர்களின் கோஷம் ஆதிக்க சக்திகளின் உறக்கத்தை கெடுத்தது... பழனிபாபா என்கிற மாமனிதன் தனிமனித போராளி படுகொலைசெய்யபட்டார்... சுமார் 238 வழக்குகள் 136 கைதுகள் 124 சிறைகள் இவற்றை எல்லாம் கடந்து மக்களின் உரிமைகளுக்காக கடைசி நிமிடம் வரை குரல்கொடுத்த ஒருமாவீரன் கொடாளிகளால் குடல்சரிக்கபட்டு கொல்லப்பட்டார்... தடா வழக்குகளில் சிறைபடுத்தபடாமலேயே வழக்கை தவிடுபொடியாக்கிய வரலாறு பழனிபாபா என்கிற ஆளுமையற்ற அதிகாரமற்ற ஒரு தனிமனிதனால் மட்டுமே சாத்தியமானது... காரணம் பழனிபாபா என்றால் சத்தியம் உண்மை நேர்மை..
.
பழனிபாபா என்கிற தனிமனிதனை ஒழித்துவிட்டால் சாதியம் தழைதோங்குவதற்கான தடை அகற்றப்பட்டுவிடும்... முஸ்லிம்கள் முடங்கிவிடுவார்கள்... என்று மனப்பால் குடித்த கயவர்கள் இன்றைக்கு கலங்கிபோய் நிற்கிறார்கள்... காரணம் ஒரு பழனிபாபா வை கொலைசெய்தார்கள்.... ஆனால் அவர் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பழனிபாபாக்கள் முளைத்து வந்துவிட்டார்கள்... 

படைத்தவனை மட்டுமே வணங்கு... படைப்புகளை வணங்காதே... எல்லாமும் கடவுள் என்று நீ சொல்கிறாய்...எல்லாமும் கடவுளுடையது என்று நான் சொல்கிறேன்... இப்போது என் உண்மைகளை நீ உணராவிட்டாலும்... நாளை உணர்வாய்... என்று உரக்க சொன்ன பழனிபாபா அவர்களின் வார்த்தைகள்தான் இன்றைக்கு முஸ்லிம் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்களின் ஜீவ முழக்கம்... இனத்தால் திராவிடர்கள்... மொழியால் தமிழர்கள்... தேசத்தால் இந்தியர்கள்... ஏற்றுக்கொண்ட மார்க்கத்தால் மட்டுமே நாங்கள் முஸ்லிமகள்... இது பழனிபாபா அவர்களின் கொள்கை பிரகடனம்... ஏற்க்கமறுப்பது அறீவீனம்... 

மனிதனை மனிதனாக மாற்ற முயற்சித்த தனத்தை பெரியாரை அடிமைவிலங்கை உடைக்க அரும்பாடுபட்ட அண்ணல் அம்பேத்கரை வாசித்த தமிழர்கள் பழனிபாபா என்கிற வரலாறையும் வாசிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.... 


வேங்கை.சு.செ.இப்ராஹீம் 

செவ்வாய், 12 ஜூன், 2012

சமூக தீமைகளின் உறைவிடம்...

காவல்துறையின் கட்டுபாட்டுடன் வரிசையில் நின்று வாழ்கையை விலைகொடுத்து வீணாகும் அப்பாவி குடிமகன்கள் 



இஸ்லாம் மனிதனை மனிதனாக வாழ வழி சொல்கிறது... உலகத்தின் எந்தவகையான துயரங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் இஸ்லாத்தில் தீர்வுகள் உண்டு... ஏற்றத்தாழ்வு இல்லாத மனிதகுலத்தை சமைத்திடவே உலக முஸ்லிம்களின் ஒப்பற்ற ஒரே தலைவர் எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் உலகிற்கு அனுப்பபட்டார்கள்... 

ஆம்... இஸ்லாம் உலகத்தின் அழகிய முன்மாதிரி... முஸ்லிம்கள் உலக மக்களுக்கு முன்னோடி... சகிப்புதன்மையும் சகோதரத்துவமும் இங்கிருந்துதான் ஆரம்பம் ஆகிறது... ஒழுக்கம் ஒழுங்குமுறையான குடும்பம் இதுதான் மனிதனை மகத்தானவனாக்கும்... 

இன்றைக்கு முஸ்லிம்களிடையே புரையோடிப் போயிருந்த பல சமூக சீர்கேடுகளை இஸ்லாமிய அமைப்புகள் தொடர் பரப்புரைகள் மூலமாக சீர்படுத்தி இருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல... இஸ்லாமியை அமைப்புகள் தர்பியா என்கிற தன்னொழுக்க பயிற்சி முகாம்களின் வாயிலாக தங்களது தொண்டர்களை  சமூகசீர் கேடுகளில் அதாவது வட்டி,வரதட்சணை,மது,சூது, விபச்சாரம் போன்றவற்றில் இருந்து மீட்டிருக்கிறார்கள்... 

ஆனால்... இன்றைக்கும் நாம் செய்யத்தவறிய மிகப்பெரிய ஒரு விசயம் இருக்கிறது... சமூக தீமைகளின் உறைவிடமாக திகழும் மது... இன்றைக்கு பல முஸ்லிம் இளைஞர்களையும் சீரழித்து வருகிறது... பல ஊர்களில் டாஸ்மாக் கடைகளின் அன்றாட வாடிக்கையாளர்களில் அதிகமானோர் முஸ்லிம்கள் என்றால் நமக்கு அதிர்ச்சி ஏற்ப்படாமல் இருக்குமா...? ஒரு சமூக தீமைக்கு எதிர்கால தலைமுறையே பலியாகி வருகிறது அதனை நாம் கண்டும் காணாமல் இருப்பது மிகப்பெரிய குற்றமல்லவா... இப்பெரிய தீமையில் இருந்து முஸ்லிம்களை மீட்பது போலவே மற்ற சமூகத்து இளைஞர்களையும் மீட்க்க வேண்டியது நமது கடமை... 

இந்த உலகின் பல நாடுகளில் தங்களது மக்களின் பின்னடைவுக்கும் குடும்பவியல் சீரழிவிற்க்கும்  காரணமான மதுவை அரசே மக்களுக்கு விநியோகம் செய்கிறது... அதற்க்கு தமிழகமும் விதிவிளக்கல்ல... அரசின் வருவாய்க்கு மக்கள் மடிவது எப்படி நியாயமாகும்... அப்படிப்பட்ட வருவாயை ஏற்ப்படுத்தி அரசு எவருக்கு நன்மை செய்யபோகிறது... ஒரு நாட்டில் கல்விக்கூடங்கள் அதிகரித்தால் கல்வியாளர்கள் அதிகரிப்பார்கள்... அந்நாடு பொருளாதாரத்திலும்  பல்வேறு துறைகளிலும் முன்னேறும் ஆனால் மாறாக சாராயக்கடைகள் வீதிக்கு வீதி திறக்கபட்டால் குடிகாரர்கள்தானே அதிகரிப்பார்கள்... அத்தகையை குடிகாரகளால் நாட்டுக்கு என்ன நன்மை...? 

அண்மையில் அய்யா தமிழருவி மணியன் அவர்களின் தலைமையிலான  காந்திய மக்கள் இயக்கம்   
மது  ஒழிப்பு மாநாடு ஒன்றை சிறப்பாக நடத்தினார்கள்... அரசுக்கு மது ஒழிப்பால் ஏற்ப்படக்கூடிய பொருளாதார இழப்பை சரி செய்வதற்கான விளக்க அறிக்கையையும் சமர்ப்பித்தார்கள்... இவற்றால் மட்டும் இதுபோன்ற மாநாடுகள் மற்றும் பொதுக் கூட்டங்களால் மட்டும் இந்த சமூக தீமையை நாம் ஒழித்துவிட முடியுமா நிச்சயமாக முடியாது... 

அரசு எந்த காலத்திலும் மதுக்கடைகளை முடக்காது... ஆக அரசை இந்த விவகாரத்தில் எவர் ஆட்சியில் இருந்தாலும் மக்களுக்கு ஆதரவான நிலைக்கு வர செய்ய இயலாது... எத்துனை குடும்பங்கள் சீரழிந்து இந்த மதுவால் சின்னாபின்னமாகி போகிறது... குடும்பத்தை வழிநடத்தக்கூடிய குடும்பத்தலைவன் குடிகாரனாக இருந்தால் அந்த குடும்பமே சீரழிகிறதே... இது மிகப்பெரிய கொடுமையல்லவா... 

பல ஊர்களில் பள்ளிகள் வழிபாட்டு தளங்கள் இவற்றுக்கு அருகில் மதுக்கடைகள்... இப்படியான மதுகடைகளை அகற்றி வேறொரு இடத்தில் நிறுவவேண்டும் என்றுதான் நம்மால் போராட்டம் நடத்த முடிகிறது அரசும் அகற்றி வேறு இடத்தில் கடைகளை திறக்கிறது... காரணம் அரசுக்கு மதுகடைகளை மாற்று இடங்களுக்கு கொண்டு செல்வதால் எந்தவிதமான இழப்பும் இல்லை... ஏனெனில் எத்தனை மைல்களுக்கு அப்பால் மதுகடைகள் இருந்தாலும் சென்று வாங்கி அருந்தி மகிழ நமது குடிமகன்கள் தயார்... 

இதனை தடுக்க வேண்டும் அதற்க்கு என்ன வழி...? மக்களை இந்த சமூகதீமை அரக்கனிடம் இருந்து மீட்க்க வேண்டும் அதற்க்கு என்ன வழி...? இந்த பூனைக்கு யார் மணி கட்டுவது? 

ஆம் இதற்க்கு முஸ்லிம்கள் தான் முன்முயற்சி எடுக்க வேண்டும்... இஸ்லாமிய இயக்கங்கள்தான் இதற்க்கான பணிகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்... ஒரு தீமையை நாம் களையெடுக்க வேண்டுமானால் அதற்க்கான ஆணிவேரை முதலில் பிடுங்கி ஏறிய வேண்டும்... மதுக்கடைகளை பொறுத்தவரை யார் அதற்க்கான ஆணிவேர் அப்பாவிகளான அடித்தட்டு மக்கள் அவர்களுக்கு முதலில் இந்த தீமையின் கொடுமையை விளங்க செய்ய வேண்டும்... குடிகாரர்கள் குறைந்துவிட்டால் மதுகடைகள் குறைந்துவிடும்... மதுகடைகள் குறைந்துவிட்டால் அரசு பொருளாதார மீட்ப்பிற்க்கு வேறு வழிகளை தேடியாக வேண்டும் அப்படி மாற்று தளங்கள் உருவாகும் பொது முழுமையாக மதுவிலக்கு அறிமுகமாகும்... 

ஆக எப்படி குடிக்கு அடிமையாகிவிட்டவனை மாற்றுவது... வெறும் பொதுக்கூட்டங்கள்,துண்டு பிரசுரங்கள் பயிற்சி முகாம்கள் இவற்றால் மட்டும் இது சாத்தியமாகாது... மாறாக இப்போது எப்படி ஒவ்வொரு ஊர்களிலும் இஸ்லாமிய அமைப்புகள் தங்களுக்கான பள்ளிவாசல்களை கட்டி தொழுது வருகிறார்களோ... அதேபோல இனி ஒவ்வொரு ஊரிலும் போதைப் புழங்கிகள் மறுவாழ்வு இல்லங்களை திறக்க வேண்டும்... நல்ல சிறப்பான மனோதத்துவ நிபுணர்களை கொண்டு தொடர்ந்து குடிக்கு அடிமையாகி வாழ்க்கையை சூனியமாக்கி கொண்டுள்ள அனைத்து தரப்பினரையும் கண்டறிந்தது அவர்களுக்கு கவுன்சிலிங் என்கிற தன்முனைப்பை தந்தாள் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இழந்த மகிழ்ச்சியை மீண்டும் பெரும்... இந்த மது பெரியவர்களை மட்டுமில்லாது இப்போது மாணவர்களையும் ஏன் இன்னும் சொல்லபோனால் இளம் பெண்களையும் கூட விட்டுவைக்கவில்லை... குடிப்பது என்பது இப்போது ஒரு "பேஷன்" ஆகிவருகிறது இந்தநிலை நீடித்தால் எதிர்கால தலைமுறை முற்றிலுமாக சீரழிந்துவிடும்... அதனை தடுக்க வேண்டியது அனைவரின் கடமை...

இஸ்லாமிய இயக்கங்கள் இந்த விவகாரத்தை முன்னிலை படுத்தினால் அனைத்துதரப்பு மக்களின் அன்பும் மரியாதையும் கிடைக்கும்... இதுவும் ஒருவகை தாவா தானே...

சமூகதீமைகளின் உறைவிடமான மது அரக்கனை அழிக்க முன்வருவார்களா...? 

எதிர்பார்ப்புடனும்... சமூக பொறுப்புடனும்...
வேங்கை.சு.செ.இப்ராஹீம் 

வியாழன், 7 ஜூன், 2012

சிறைகளின் செங்கற்கள்... உமர்கயான்.சே

உமர்கயான் .சே 






சிறைகளின்
செங்கற்க்களில்


மனித உரிமைகளும்
பூசிமெழுகப்பட்டவையே.....


பூட்டிய கம்பிகளுக்குள்
புதைக்கப்பட்ட உனர்வுகள்


பாரா "ஊசார்"
காவலர்களின் ஓசை
இருட்டைக் கிழித்து வரும்.....

மனித கழிவுகளை
மனிதன் அகற்றக்கூடாது
காகிதச் சட்டங்கள்,.....

இங்கே எங்களின்
விடிவே..!
மூத்திர சட்டியின்
முகத்தில்தான்.....!

விடிவுக்கு இங்கே
விடியல் இல்லை
விதிகளுக்கிங்கே இடமில்லை...
வருடங்கள்
வறட்சியாய் போகும்...

தண்டனைக்கு பின்தான்
விசாரனைகள்.....
குருகிய இடத்தில்
கூனியாய் சட்டங்கள்...

செவ்வாய் கிழமைகள்
மனு[ஆ]நீதிநாள்
மனுக்கள் இங்கே குப்பையில்

துரையிடம் என்னட..?
"ரிப்போர்ட்"
கொடுவாள் மீசைகளின்
கொடுமைகள்....

எல்லா நாட்களிலும்
எங்கள் விடுதலையை
எதிர்ப்பார்த்த ஏக்கங்கள்....

நரகம் எப்படி இருக்கும்..?
சிறைச் சாலையின்
மதில்களுக்குள்
ஒருமுறை வந்துபாருங்கள்..

எங்களுக்கு
வசந்தங்கள்
வசப்படவில்லை...

வசந்தங்கள்
வழி விடும்

சிறைகதவுகள்
தெறிக்கும்
மக்கள் புரட்சியில்...

உமர்கயான்.சே




திங்கள், 4 ஜூன், 2012

பிறந்த நாள் கொண்டாடும் பெரியவரே...



பிறந்த நாள் கொண்டாடும் பெரியவரே...நீர் 
பிறந்தது ஏனோ எங்களுக்கு புரியலையே... 

காலம்போன காலத்துல சக்கரவண்டி உபயோகத்துல...
கோலாகல கொண்டாட்டம் தேவைதானா...

தமிழனுக்கு டிவி கொடுத்து ஒத்தரூபாய்க்கு அரிசிகொடுத்து
தானமா நிலம்கொடுத்து அட ஓசியில வீடும் கட்டிகொடுத்து...

ஓட்டுவாங்க முடியலையே பெரியவரே... அதன்
உள்ளர்த்தம் உணர்ந்தீறா பெரியவரே...

தாய்மொழிக்கு செம்மொழியாய் பெருமை சேர்த்து
கனிமொழியையும் கவிதைபாட வச்சு பெருமைப்பட்டு...

கருஞ்சட்டை பெரியாரின் கைபிடித்து காஞ்சியாரை அப்படியே காப்பியடித்து
எம்ஜிஆரை கழகத்தைவிட்டு கழட்டிவிட்டு... ஏமாளி தொண்டனை வயிற்றில் அடித்துவிட்டு...

கட்டுமரமாய் நானிருப்பேன் என கதைவிட்டு...
நட்டநடு ரோட்டில் தமிழனை நிறுத்திவிட்டு...

ஒய்யாரமாய் கோட்டையிலே இன்னும் கொடிநாட்டலாம்
மன்பால் குடித்த மஞ்சள் துண்டு முனிவரே...

தொப்புள்கொடி உறவெல்லாம் தூரத்திலே துடிதுடித்து மாண்டபோது பெரியவரே...
மயக்கதிலா நீர் இருந்தீர் பெரியவரே... மகளை சிறைக்கதவு மூடியதும்

துடித்து கண்ணீர் வடித்த பெரியவரே... நடித்து மக்களை ஏமாற்றிய கலைஞரே...
மத்திய சிறைகளில் உம்மால் இடஒதுக்கீடு பெற்ற என் சகோதரனை என்றாவது-

எண்ணியதுண்டா பெரியவரே... அவர்களின் துன்பம் இன்று உம்மை சுட்டெரிக்கிறதே
சுயமரியாதை இழந்துவிட்டு அரைவேக்காடாய் ஆகிவிட்ட பெரியவரே...

இன்னும் எத்துனை ஆண்டுகள் வேண்டுமானாலும் வாழுங்கள் பெரியவரே...
ஆனால் இனியொருமுறை தமிழனாய் மட்டும் பிறககாதீர் பெரியவரே...

தமிழர்களின் மனசாட்சியாய்...
வேங்கை.சு.செ.இப்ராஹீம்

திங்கள், 14 மே, 2012

அன்பு தம்பி ஆஜம் அவர்களுக்கு...

அன்பு தம்பி ஆஜமிர்க்கு இனிய ஸலாதுடனும் துஆக்களுடனும்... உன் அண்ணன் வேங்கை எழுதுகிறேன்... நலமா என்றுகூட உன்னை கேட்கமுடியாத கையறுபட்ட நிலையில்தான் இக்கடிதத்தை தொடர்கிறேன்...

உனக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை... கருவில் உன்னை காத்து வளர்த்திட்ட அன்னை...இன்று கல்லறையில்... நீயோ... விடை தெரியாத சிறை கொட்டடியில்... இழப்புகளை மட்டுமே தொடரும் உன் இதயம்...எத்துனை வலியோடிருக்கும்... 

சகோதரா... நீசத்தியத்திற்க்காக சிறைபட்டாய்... சதிவலையில் பிணைக்கப்பட்டாய்...உன்னைப்போல எத்தனை ஆஜம்கள்... தாய் ஜீனத்தம்மாள்போல எத்துனை தாய்மார்கள்... நினைக்கையில் எங்கள் இதயம் வலிக்கிறது... 

கலங்காதே சகோதரா... இறையவன் எடுத்துகொண்டது அவனுக்கு உறியதைதானே...இன்று தாய் ஜீனத்தம்மாள்... இறையவன் நாடினால் நாளை நாமும்கூட... இழப்புகளை ஏற்கும் மனம் எவருக்கும் கிடையாது...இருப்பினும் ஏற்றுதானே ஆகவேண்டும்... 

ஆனால்...சத்தியமாய்... உரைக்கிறேன்...சத்தமிட்டு உரைக்கிறேன்... என் இறையவன் மீது நான் கொண்ட ஈமானின் வலிமையுடன் உரைக்கிறேன்... உன்னைப்போல உள்ளே வாடும் உன்னைப்போல இழப்புகளால் வாடும்... சகோதரனின் விடியல் வெகுதூரமில்லை... சாத்தியமாகும் வரை எதுவுமே பாரமில்லை... 

அநியாயம் செய்தவனெல்லாம் இன்று அதிகாரவர்க்கமாய் இருக்கும்போது... மக்களை சுரண்டியவனெல்லாம் இன்று சுகபோகமாய் இருக்கும்போது பாவமறியாத உன்னை போன்ற ஆஜம்கள் மட்டுமே ஏன் சிறையில் வாடவேண்டும்... சிறைபட்டாய்...தகப்பனை இழந்தாய்... வாழ்கையின் இனிமையை இழந்தாய்... இதோ இன்று ஈன்ற அன்னையை இழந்தாய்... 

இழப்பு..இழப்பு...இழப்பு...எத்துனை இழப்புகள்... இதனை நினைக்கும்போது எங்கள் இதயங்களில் எரிமலை பிழம்புகள்... இறையவன் நாட்டத்தால் இன்று நாடே உனக்கான விடுதலை முழக்கத்துடன் களமாடுகிறது... எமக்குள் நம்பிக்கை உரம்கூடுகிறது... 

சத்தியம் சத்தியமாய் சாகாது... சத்தியம் சத்தியமாய் சாகாது... சத்தியம் நிச்சயமாய் வென்றே தீரும்...
சிறையில் உண்னுள் எரியும் நெருப்பு இன்று எங்களை சுடுகிறது... உண்ணும் உணவும் பருகும் நீரும்கூட கேள்விகளை கேட்கிறது... காரணம் நானும் ஒரு தாய்க்கு மகன்தானே... நானும் மனைவிக்கு கணவன்தானே... நானும் பிள்ளைகளின் தகப்பன்தானே... உன்நிலையில் நானிருந்தால் ...

ஆம் இந்த கேள்விதான் எம்மை சுட்டெரிக்கிறது... ஆளுவோருக்கும் மனித மனம்தானே அதனால்தான் அந்த நம்பிக்கையில்தான் உன்னிலையினை உரக்க சொல்கிறோம்... தமிழ் உறவுகளின் 
உணமையான உணர்வுகளுடன் இணைந்து சொல்கிறோம்... 

சகோதரா... உன் கண்ணீர்தான் இறுதியானதாக இருக்க வேண்டும்... இனி ஒரு ஆஜம் கண்ணீர்விடக்கூடாது... உன்னை மீட்பது எமது கடமை... அதற்காக உன்னிடம் நாங்கள் கேட்பது அதற்காக உன்னிடம் நாங்கள் எதிர்பார்ப்பது... அல்லாஹுவிடம் எங்களின் வீரியம் குன்றாத காரியமாற்றிட துஆ... நாளை மறுமை நாளில் மஹ்ஷரில் நாம் இணைந்து நிற்கும்போது எமக்காக சுவனகதவுகள் திறக்க வேண்டும் என்கிற துஆ... 

இறையவன் நாடினால்... இம்மையில் உன்னை மகிழ்ச்சியுடன் சந்திப்பேன்...இல்லையெனில்மறுமையில் உனக்காக வாதிட்ட மனநிறைவுடன் சந்திப்பேன்... 

உன் விடியலின் வெளிச்சத்தை தேடி உன் சகோதரன் மீண்டும் இனிய ஸலாத்துடன்... 
வேங்கை.சு.செ.இப்ராஹீம் 


ஞாயிறு, 13 மே, 2012

சங்கைமிகு சமுதாய சொந்தங்களே...



கண்ணியமும் சங்கையுமிகு சமுதாய சொந்தங்களே...
அனைவர் மீதும் ஏக இறையவனின் சாந்தியும் சமாதானமும் பொழியபடட்டுமாக...

தமிழகத்தில் பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான  அப்பாவி முஸ்லிம்கள் 
சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுவது அனைவரும் அறிந்ததே...
இவர்களில் பலர் கடுமையான நோய்களுக்கு ஆளாகி வேதனைபட்டுவருவது மிக மிக வருததறிக்குறியது. சிறைத்துறை குறைந்தபட்ச மனிதாபிமானத்தையும் இவர்களுக்கு வழங்க மறுக்கிறது. பெரும் பொருளாதார சிரமங்களுக்கிடையே இவர்களுக்கான வழக்குகள் வாதிடப்பட்டு நீதிக்காக காத்திருக்கும் இம்மக்களுக்காக இவர்களின் அவல நிலையை அரசுக்கு எடுத்து சொல்லும் முகமாக "இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்" மாநிலம் தழுவிய ஒற்றைக்கொரிக்கை தொடர் பொதுக்கூட்டங்களை நடத்தி வருவதும் நீங்கள் அறிந்ததே. 

சிறைபட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களுக்காக இஸ்லாமிய இயக்கங்கள் மட்டுமே வாதிட்டால் அது ஒரு சார்புநிலையாக அறியப்படும் ஆகவே இந்த அநீதி மாற்று சமூக மக்களாலும் கவனிக்கப்பட வேண்டும் மாற்று சமூக மக்களாலும் பேசப்பட்ட வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் இக்கூட்டங்கள் பல்வேறு தரப்பினரையும் அத்துடன் சிறைவாசிகளின் விடுதலைக்காக தொடர்ந்து போராடிவரும் இஸ்லாமிய அமைப்புகளையும் ஒரே போது மேடையில் விடுதலைக்கான முழக்கங்களை எழுப்பிட செய்துவருகிறது இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்.

முதலில் திருப்பூர் அடுத்து கோவை என மக்களை அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணமாக திரட்டியது இன்றைக்கு பலராலும் குறிப்பாக தமிழ் தேசிய தளத்தில் முக்கிய வாதக்கருவாக சிறைவாசிகளின் விடுதலை முன்னெடுக்கபடுகிறது. அதற்க்கான உதாரணம்தான் ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் வரும் மே 27 அன்று காஞ்சி மக்கள் மன்றத்தின் கிளை துவக்க விழா  சிறைவாசிகள் விடுதலைக்கான கவன ஈர்ப்பு பொதுக்கூட்டமாக நடைபெறவுள்ளது. 

அதற்கும் முன்னதாக வரும் மே 19 அன்று திருச்சியில் நடைபெறவுள்ள விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாட்டில் முன்னாள் மத்திய அமைச்சரும் லோக்ஜன சக்தி கட்சி தலைவருமான தோழர் ராம் விலாஸ் பாஸ்வான் அவர்கள் முன்னிலையில் சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்படவுள்ளது. மே 20 அன்று சென்னை மெரீனா கடற்கரையில் மே பதினேழு இயக்கம் நடத்தும் இலங்கை இன அழிப்பை நினைவுகூரும் நிகழ்விலும் இக்கோரிக்கை முன் மொழியபடவுள்ளது...

இவை எப்படி சாத்தியமானது ஆம் நமது சமூக மக்களின் எழுச்சியும் சிறைவாசிகளின் விடுதலை விசயத்தில் மக்கள் காட்டிடும்  ஆர்வமும் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் அமைத்துவரும் பொது மேடையும்தான் காரணம்.  இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் சிறைவாசிகளின் நிலையை வெகுஜன மக்களும் பேசினால்தான் ஒரு விடியல் பிறக்கும் என எண்ணியது ஊடகங்கள் மற்றும் அதிகாரவர்க்கம் மேற்கொண்ட பிரச்சாரங்கள் அனைத்து சிறைவாசிகளையுமே தீவிரவாதிகளாக மதவாதிகளாகதான் மாற்று சமூக மக்களை அறிய செய்திருந்தது. அந்த முடைநாற்ற பிரச்சாரங்கள் இந்து முறியடிக்கப்பட்டுள்ளது. அரசியல் கலவாது அமைப்புகள் சாராது இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் முயற்சித்த இம்முயற்சி அல்லாஹுவின் அளப்பரிய கருணையினால் மாபெரும் வெற்றிகளை குவித்து வருகிறது. இருப்பினும்  மக்களை திரட்டுவது பொதுக்கூட்டங்கள் நடத்துவது மட்டும் நமது வெற்றியல்ல என்றைக்கு சிறையில் வாடிடும் அப்பாவிகள் விடுதலையடைகிறார்களோ அதுதான் அன்றைக்குத்தான் நமது முழுமையான வெற்றி... 

சமுதாய சொந்தங்களே... இதோ மற்றவர்கள் சிறைவாசிகளின் விடுதலைக்காக போராட களம்கண்டுவிட்டார்கள் அதற்காக துவங்கியவர்கள் முடங்கிவிடக்கூடாது. ஆகையினால்தான் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் தொடர்ந்து கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இதுவரை நடத்துள்ள திருப்பூர் கோவை ஆகிய பொதுக்கூட்டங்களுக்கு இயக்கத்தின் நிர்வாகிகள் எவரிடமும் பணம் வசூலிக்கவில்லை அவர்களாகவே சொந்த பணத்தை வைத்துதான் நிகழ்வுகளை நடத்தினார்கள்...  இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் உமர்கயான் மரியாதைக்குறிய வகையில் வழக்கறிஞர் தொழில் செய்து வருபவர் பொருளாதாரத்தில் பெரிய ஜாம்புவாநெல்லாம் இல்லை. அதேபோல்தான் தோழர் நாசதீன் அண்ணன் வீரர் அப்துல்லாஹ் தம்பி சதீஸ் போன்றவர்களும் இப்படிப்பட்ட பொருளாதார இக்கட்டான சூழலில் தொடர் பொதுக்கூட்டங்களையும் விட்டுவிட முடியாத கட்டாயம் இவர்களுக்கு உண்டு. 

மேற் சொல்லப்பட்ட கூட்டங்களுக்கு அடுத்து மேலப்பாளையம்,இராமநாதபுரம்,திருச்சி என நமது செயல் திட்டம் நீண்ட பட்டியலாக இருக்கிறது சிறைவாசிகளின் விடுதலைக்காக நாம் அல்லாஹுவின் உதவியுடன் எத்தகைய தியாகங்களையும் செய்திட தயாராக இருக்கிறோம்.ஆனால் பெரும் சவாலாக முன்னிற்கும் பொருளாதாரத்திற்கு என்ன செய்வது? 

அன்பு சொந்தங்களே... நான் என் சிறிய வயது முதல் பல்வேறு அமைப்புகளில் பயணித்தவன் இருப்பினும் ஒரு போதும் நான் யாரிடமும் பண வசூலுக்காக சென்று நின்றதில்லை என் சக்திக்கு தக்கவாறு உதவிகளை செய்துவிட்டு இருந்துவிடுவேன். வறுமையின் காரணமாக மருத்துவ உதவிகள் வேண்டுவோருக்கு என் நண்பர்கள் மூலமாக உதவி கிடக்க முயற்சித்து இருக்கிறேன்.

 ஆனால் இன்று முதன்  முறையாக உங்களிடம் நமது சமுதாய சொந்தங்களின் விடுதலைக்காக உதவி கேட்கிறேன். பொருளாதார சிரமத்தால் இப்போராட்டம்  தடைபட்டுவிடுமோ என்கிற அச்சம் என்னை மட்டுமல்லாது தம்பி உமர்கயான் போன்றவர்களுக்கும் வந்துவிட்டத்தை என்னால் உணர முடிகிறது. தொடர் கூட்டங்களுக்கு திட்டமிட்டபோதே நாம் ஒரு விசயத்தில் தெளிவாக இருந்தோம் யாரிடமும் குறிப்பாக சிறைவாசிகள் சம்மந்தபட்டவர்களிடம் இருந்து ஒரு ரூபாய் கூட பெறக்கூடாது என்பதில் இதுவரை அல்லாஹு அந்த திட்டத்தில் இருந்து அம்மை அடிபிரள செய்யவில்லை.இனி மேலும் இந்த கண்ணியத்தை நீட்டித்து தர வேண்டும். 

சாதாரணமாக மிக எளிமையாக ஒரு பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமானாலும் குறைந்தபட்சம் ரூபாய் 50 செலவாகிறது இந்நிலையில் நாம் செல்ல வேண்டிய தூரங்கள் இன்னும் அதிகமாக இருக்கிறது இப்போராட்டம் எவரையும் முன்னிலைபடுத்தவோ எந்த இயக்கத்தையும் வளர்க்கவோ இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. முழுக்க முழுக்க அப்பாவிகளின் விடுதலை மட்டுமே ஒரே குறிக்கோள்.ஆகவே மனிதநேய சமுதாய சொந்தங்களே சிறைபட்டுள்ள நமது சொந்தங்களை மீட்க்க உங்களிடம் உரிமையுடன் உதவிகோருகிறேன். உங்களால் தரப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் உரிய கணக்குகள் ஆதாரங்களுடன் காண்பிக்கப்படும். அல்லாஹ் கண்காணிக்கிறான் என்கிற அச்சத்துடன் அவை செலவிடப்படும். சமுதாயத்திற்காக நன்மைக்காக அளவில்லாமல் உதவிடும் நீங்கள் வாழ்க்கையை தேடிக்கொண்டிருக்கும் நமது சொந்தங்களின் விடியலுக்காகவும் உதவிடுவீர்கள் என நம்புகிறேன். 

அல்லாஹுவிர்க்காக உதவிடுங்கள் அல்லாஹ் ஈருலகிலும் நமக்கான வெற்றிகளை தருவான்... 

உங்களின் பங்களிப்பை இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்க நிர்வாகிகளை 0091-9944112879, 0091-9944713816 ஆகிய அலைபேசிகளில் தொடர்புகொண்டு பதிவிடவும்...

உண்மையுடனும்...உணர்வுடனும்....உரிமையுடனும்... உங்களின் உதவிக்காக 
என்றும் உங்கள் சகோதரன்  
வேங்கை.சு.செ.இப்ராஹீம் 

புதன், 9 மே, 2012

சகோதரர் சுவைர் மீரான் அவர்களுக்கு...

அன்பிற்கினிய சமுதாய சொந்தங்களுக்கு இனிய ஸலாம்... துஆ...

நான் கீற்று இணையதளத்தில் எழுதி இருந்த "பள்ளிவாசல் இடிப்பும்... ராஜபக்சேவின் கொழுப்பும்"
என்கிற கட்டுரைக்கு மறுப்பளித்து ஜப்னா முஸ்லிம் {www.jefnamuslim.com} என்கிற இணையத்தின் 
வழியாக சகோதரர் சுவைர் மீரான் என்பவர் பதிவிட்டு இருக்கிறார்,,, அவரது பதிவில் 
புலிகள் இயக்கம் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திய இழப்ப்புகள் என்கிற பெயரில் என்னை கடுமையான 
வார்த்தைகளால் தாக்கி எழுதி இருக்கிறார்... 

தாக்கப்பட்டது இறைவனின் இல்லம்... ஒரு முஸ்லிமாக உலகில் எங்கு முஸ்லிம்களுக்கு அநீதி இலைக்கபட்டாளும் எம்மை போன்றோரின் இதயம் கனப்பது இயற்க்கை... அந்த அடிப்படையில் 
இலங்கையில் சிறுபான்மை இனமாக வாழக்கூடிய எம்மக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாவும் 
வாழவேண்டுமென நினைப்பது தவாறான செயலாக இருக்க முடியாது... தம்புள்ள பள்ளிவாசல் 
தாக்குதல் சம்பவத்திற்கு தமிழகத்தில் கண்டங்களை பதிவு செய்த அனைவரையும் நீலிக்கண்ணீர் 
வடிக்கும் முதலைகள் என்கிறார் சகோதரர்... தமிழகத்தில் இருக்கக்கூடிய இஸ்லாமிய இயக்கங்கள் 
ஆரம்பகாலங்களில் எத்துனை அடக்குமுறைகளை சந்தித்து அரசுகளின் பொய் வழக்குகளை சந்தித்து
சிறைவாசங்களை சந்தித்து இன்றைக்கு சமுதாய உரிமைகளுக்கு சட்டம் இயற்றப்படும் அவைகளிலும் தடம் பதித்துள்ளார்கள் என்பது எல்லாம் தெரிந்த கட்டுரையாளருக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை... அப்படிப்பட்ட போராளிகளை இவர் நீலிகண்ணீர் வடிக்கும் முதலைகள் என்கிறார்... 

நான் பெயர்தாங்கி முஸ்லிமா இல்லை பெயருக்குறிய முஸ்லிமா என்பதை பற்றிய ஆராச்சியிலும் ஈடுபட்டுள்ளார்... மகிழ்ச்சி... 

சகோதரா... உங்கள் நாட்டு அதிபரின் உருவபொம்மை எரிக்கபட்டதும் கொடி எரிக்கப்பட்டதும் உங்களுக்கு வருத்தமளிக்களாம் ஆனால் இடிக்கப்பட்டது நமது இறையவனின் இல்லம் அந்த சம்பவத்திற்கு முன்னாள் நீங்கள் குறிபிட்டுள்ள சம்பவங்கள் எமக்கு பெரிதாக தெரியவில்லை... 

புலிகளை ஒழிக்கிறோம் என்கிற பெயரில் அங்குள்ள தமிழர்களை முழுமையாக கொண்டோலித்த கொடுமை வேறு யாருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான் எம்மை போன்றவர்களின் விருப்பம்... 
உங்களுடைய வார்த்தைகளுக்கு முழுமையாக எம்மால் பதில் அழிக்க முடியும் ஆனால் அதில் எம் சமூகத்தின் மரியாதை அடங்கியுள்ளது... நீங்கள் எப்படி ஒரு நாட்டில் சிறுபான்மைகளாக வாழ்கிறீர்களோ அதேபோல்தான் நாங்களும் இந்திய நாட்டில் சிறுபன்மைகளாக வாழ்கிறோம் எண்ணூறு ஆண்டுகாலம் இந்நாட்டை ஆண்ட எம்மக்கள் இன்றைக்கும் அடிப்படை உரிமைகளுக்காக போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்... இந்நிலை எமது அண்டையில்  வாழக்கூடியவர்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான் எமது நோக்கம்... பழையவற்ற தோண்டிக் கொண்டிருந்தால் பலன் எதுவும் கிடைக்கபோவதில்லை... 

மேலும் சகோதரர் சுவைர் மீரான் என்னை புலிகளின் ஆதரவாளன் இல்லை இல்லை புலிகளின் இயக்கத்தை சார்ந்தவனாகவே அடையாளபடுத்திட முனைந்துள்ளார்... சகோதரா... நாங்கள் வாதிடுவது வாழ்க்கையை இழந்துவிட்ட தமிழ் மக்களுக்காக புலிகளுக்காக அல்ல என்பதை இதை போன்று இன்னும் ஆயிரமாயிரம் கட்டுரைகள் வெளியிட்டாலும் உங்களால் மறைக்கமுடியாது... 

நான் எனது கட்டுரையில் பல பொய்களை சொல்லியிருக்கிறேன் எனகுறிபிடும் சகோதரர் எனது கட்டுரையின் முழுமையான வடிவத்தை முழுதுமாக படிக்காமல் அவசரகோலத்தில் பதில் கொடுத்துள்ளார்... அதைபற்றிய கவலைகள் எமக்கில்லை... காரணம் இதை போன்று எவ்வளவோ விமர்சனங்களை கண்டவர்கள் நாங்கள்... 

இறுதியாக சகோதரருக்கு நான் சொல்லிகொள்வது தமிழகத்தில் நாங்கள் தமிழ் உறவுகளுடன் இணைந்து களமாடககூடிய இனிமையான காலமிது அதன்மூலமாக தமிழ் மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வலிமையான உறவை மேம்படுத்திட முனையும் எம்மை எந்த சக்திகளாலும் முடக்கிவிட முடியாது... உண்மையான நேர்மையான அனைத்து காரியங்களுக்கும் அல்லாஹு நிச்சயமாக வெற்றியை தருவான்... 

வஸ்ஸலாம் 
துஆக்களுடன்...
வேங்கை.சு.செ.இப்ராஹீம் 


திங்கள், 2 ஏப்ரல், 2012

சிறைவாசிகள் விடுதலைக்கான தொடர் கூட்டங்களும்... நோக்கங்களும்...


அன்பிற்கினிய உறவுகளே... அனைவர் மீதும் ஏக இறையவனின் சாந்தியும் சமாதானமும் பொழியபடட்டுமாக....

கோவை உள்ளிட்ட தமிழக சிறைகளில் பல்லாண்டுகாலமாக நீதிக்குப்புறம்பாக சிறைவைக்கப்பட்டுள்ள
முஸ்லிம்கள் உட்பட மற்ற சமூக அப்பாவி சிறைவாசிகளையும் அரசியல் சிறைவாசிகளையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா
பிறந்தநாளில் விடுதலை செய்திட கோரிக்கைவிடுத்து அரசின் கவனத்தை சிறைவாசிகளின் பக்கம் ஈர்க்கும் முகமாக
தொடர்பொதுக்கூட்டங்கள் கருத்தரங்கங்கள் பேரணிகள் என ஜனநாயக வழியில் போராட முனைந்துள்ளோம்...

முஸ்லிம் சிறைவாசிகள் என்றாளே அவர்கள் தீவிரவாதிகள் குண்டுவைத்தவர்கள் கொலைகாரர்கள்
இப்படியாக பல்வேறு அடைமொழிகளை வைத்து மற்ற சமூக மக்களின் அனுதாபத்தையோ கருணையையோ
சிறைவாசிகள் பெறமுடியாத வண்ணமாக ஆதிக்க வெறிபிடித்த ஊடகங்களும் மத வெறி பிடித்த அதிகாரிகளும்
பொய் செய்திகளை வெகுஜன மக்களிடம் விதைத்துள்ளார்கள்... அந்த பொய் பிரச்சாரத்தை முறியடித்து
அதவரே இளைக்காத அப்பாவிகள் பல்லாண்டுகாலமாக எவ்வாறு சிறைகளில் வாடிவருகிறார்கள்...
அவர்களை இருந்தும் இழந்துள்ள அவர்களின் குடும்பத்தார் எவ்வளவு வேதனைகளை அனுபவித்து வருகிறார்கள்
என்பதை எல்லாம் மனித நேயம் கொண்ட மக்களுக்கு விளங்க செய்திட வேண்டியே இப்பிரச்சனையை நாம்
பொதுவான தமிழ் தளத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்...

அதன் துவக்கம்தான் கடந்த மார்ச் 30 தேதி திருப்பூரில் மிக எழுச்சியுடன் நடந்தேறியது...ஒரு குறுகிய வட்டத்தில்
பயணித்தே பழகபட்ட இஸ்லாமிய சமூகம் முதன் முறையாக இஸ்லாமிய இயக்க பிரதிநிதிகளுடன் இன்றைய
காலகட்டத்தில் பல்வேறு மக்கள் போராட்டங்களை முன்னின்று நடத்தி வரும் அய்யா கொளத்தூர் மணி தோழர் தியாகு
அய்யா பேராசிரியர் தீரன் போன்றவர்கள் எழுப்பிய விடுதலை முழக்கங்களை வியப்புடன் பார்த்தார்கள்...முஸ்லிம்கள்
அல்லாத மக்கள் திருப்பூர் முழக்கத்தின் அடிப்படையை ஆராய துவங்கினார்கள்... நமது நோக்கத்தின் உண்மைநிலையையும்
சிறைவாசிகளின் விடுதலையின் முக்கியத்துவததையும் இன்றைக்கு முஸ்லிம்களைவிட அதிகமாக மற்ற சமூக
தளங்கள் விவாதித்து வருகின்றன...

ஆம்
இதைதான் நாங்கள் எதிர்நோக்கினோம்... சிறைவாசிகளின் விடுதலை என்பது ஒரு சமுதாயம் சார்ந்த பிரச்சனையல்ல
இது மனிதநேயம் சார்ந்த விசயம் என்பதைத்தான் வெகுஜன மக்களுக்கு கொண்டு செல்ல முற்பட்டோம்...அதிலே அல்லாஹ்
மகத்தான வெற்றியை தந்துள்ளான்...

இன்றைக்கு சிறைவாசிகளின் விடுதலைக்கான போராட்டங்களை எங்கள் பகுதியில் நடத்துகிறோம் என பல்வேறு பகுதிகளில்
இருந்தும் முதல் நிகழ்வை வெற்றிகரமாக ஒருங்கிணைத்த சகோதரர் உமர்கயானுக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்தவண்ணமாக
இருக்கிறது... அடுத்த ஆகஸ்ட்டு மாதம் வரை நாம் திட்டமிட்டுள்ளபடி இப்போராட்டங்களை தமிழகத்தில் நிகழ்த்திட
எல்லாவகைகளிலும் மனிதநேய கதவுகள் திறக்கப்பட்டுள்ளது...

இறையவன் நாடினால் இம்மாத இறுதிக்குள் கோவையில் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது... இம்முயற்ச்சிகளுக்கு
உந்துதல் சக்தியாக இருந்து அக்கறையுடன் முதல்நிகழ்வின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்துவந்த
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் கோவை நிகழ்வில்
கலந்துகொண்டு விடுதலை முழக்கமிடுவார்...

இந்த தருணத்தில் சில கசப்பான நிகழ்வுகளையும் அனைவரின் பார்வைக்கு சமர்பிக்க வேண்டிய கட்டாயம்
ஏற்பட்டுள்ளது... காரணம் எமது நோக்கம் சுய எதிர்பார்ப்பில்லாத தூயநோக்கம் சிறைவாசிகளின் விடியலை
காணவேண்டும் என்பதை தவிர எமக்கு வேறு எண்ணங்கள் இல்லை... பொருளாதார தேவைகள் இல்லாத மனிதர்களே
இருக்கமுடியாது...அதற்க்கான வழியாக சிறைவாசிகளின் விடுதலையை நாங்கள் பயன்படுத்த முற்பட்டால்
அதனைவிட அருவருக்கத்தக்க நிலை வேறெதுவும் இருக்கமுடியாது... இன்றைக்கு முதல் நிகழ்வை நிகழ்த்திய
சகோ.உமர்கயான் அந்நிகழ்வை நடத்திட எவ்வளவு சிரமங்களை எதிர்கொண்டார் என்பது எங்களுக்குத்தான் தெரியும்...
இருப்பினும் அந்த சிரமங்கள் அனைத்துமே சிறைவாசிகளின் குடும்பத்தினரின் நம்பிக்கைக்கு முன்னாள்
அவர்களின் துஆக்களுக்கு முன்னாள் எங்களுக்கு பெரிதாக தெரியவில்லை... ஆகையினால்தான் அடுத்த நிகழ்வை பற்றி
அதற்க்கான பணிகளை துவங்குவது பற்றி சகோ.உமர்கயான் விவாதிக்க துவங்கிவிட்டார்...

இம்முயற்சிகளை தடுக்க சிலர் திட்டமிட்டுள்ளார்கள்... சூழ்சிகளை முயற்சிக்கிறார்கள்... சூழ்ச்சிகாரனுகெல்லாம்
மிகப்பெரிய சூழ்ச்சிகாரன் அல்லாஹ் நாங்கள் அவனிடமே சூழ்சிகளை முறியடிக்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டோம்...

இம்முயற்சிகள் எம்மை முன்னிலை படுத்திகொள்ளவோ அல்லது சகோ.உமர்கயான் அவர்களின் அமைப்பை
முன்ன்லை படுத்திகொள்ளவோ அல்ல... எம்மை போன்றோர் சமுதாய அமைப்புகளின் ஒருங்கிணைப்பை
விரும்புகிறவர்கள்... சிதறிக்கிடக்கும் நமது வலிமையை ஒருமுகபடுத்தி சமூகம் இழந்துள்ள அனைத்தையும்
மீட்டெடுக்க வேண்டும் என்கிற நிலையில் தீவிரமாக பயணிப்பவர்கள்...இப்போது நீங்கள் கேட்கலாம் அப்படியானால்
எதற்கு "இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்" மக்கள் பிரச்னையை பொது தளத்திற்கு இட்டுசெல்ல
ஒரு அறிமுகம் வேண்டும் அதற்காகத்தான் இந்த இயக்கம்...

அநீதியாக சிறைபட்ட பலரை விடுவிக்க சட்டரீதியாக சமூகரீதியாக களம்கண்டவர் சமூகப்புரட்சியாளர் ஷஹீத் பழனிபாபா
தனக்கு எதிராக அடக்குமுறைகள் கட்டவில்க்கபட்டபோதும் அவற்றை துணிவுடன் எதிர்கொண்டு தனிமனிதனாக
வென்றுகாட்டியவர் தலைவர் பாபா அவர் நிகழ்திகாட்டிய செயல்கள்தான் எங்களின் செயல்திட்டம்... சிறைபட்ட
அப்பாவிகளை மீட்க்க தலைவர் பாபா எவ்வாறெல்லாம் முயற்சிப்பார் என்பதை அருகில் இருந்து கண்டவர்கள் நாங்கள்...

இறுதியாக உரக்க சொல்கிறோம்... உணர்வுடன் சொல்கிறோம்... உறுதியாக சொல்கிறோம்... இம்முயற்சிகளில்
எங்கள் நோக்கம்...ஒரே வரிதான் "மறுமை வாழ்க்கையின் வெற்றி"

எத்துனை தடைகள் வந்தாலும் அவற்றை தகர்த்தெறியும் ஆற்றலை அல்லாஹ் எமக்குதருவான்... அந்த
நம்பிக்கையின் அடிப்படையில் இத்தகைய தடைகள் எல்லாம் எமது கால் செருப்புகளுக்கு சமம்...

சனி, 24 மார்ச், 2012

மார்ச் 30 மாற்றம் தருமா...?



இலங்கை அரசு புலிகளுக்கு எதிராக நடத்திய போரில் அப்பாவி தமிழ் மக்களை கொடுரமாக கொன்றுகுவித்த
ஆவணங்களை உலகிற்கு சேனல் நான்கு வெளிச்சம் போட்டுகாட்டியதன் விளைவு இன்றைக்கு ஐ.நா.வின்
போற்குற்ற்சாட்டுக்கு இலங்கை ஆளாகி உள்ளது... இலங்கை எதிரான ஐ.நா.தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா...
எதிர்க்குமா... என்கிற பரபரப்பான கேள்வி நாட்டின் பாமர தமிழனையும் பாராளுமன்ற அவை நடவடிக்கைகளை
உற்றுநோக்க செய்தது... என்றைக்கும் இல்லாத அதிசயமாக தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஐ.நா.தீர்மானத்தை
இந்தியா ஆதரிக்க வேண்டுமென பாராளுமன்றத்திலும் வெளியிலும் குரல் எழுப்பியதன் விளைவு இந்தியா
இலங்கைக்கு எதிரான ஐ.நா.தீர்மானத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியது...

இதற்கிடையே கடந்த ஏழு மாதகாலமாக ஒரே இடத்தில் கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்புதெரிவிக்கும்
இடிந்தகரை மக்களின் ஜீவ உரிமை போராட்டம் ஒரு புறம்... ஊடகங்களும் மக்களும் கொஞ்சம் இளைப்பாற
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தல்... ஏற்க்கனவே அனைவரும் எதிர்பார்த்தபடியே
அதிமுக வெற்றிகன்டாலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிமுக தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து
கட்சிகளையும் வைப்புதொகையை இலக்கசெயதது அனைவரையுமே மலைக்க செய்துள்ளது...

தேர்தல் முடிந்த கையுடன் தமிழகத்தின் அமைச்சரவையை முதல்வர் கூட்டினார் அக்கூட்டத்தில் கூடங்குளம்
அணுமின் நிலையத்தை திறக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார்... இன்றைக்கு அணு உலையால தமிழகமே
கொந்தளித்துகொண்டிருக்கிறது...

இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில் பல்லாண்டுகாலமாக நீதி மறுக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து
எதிர்கால நினைவுகளை மறந்து சிறைபட்டுள்ள அப்பாவி முஸ்லிம் கைதிகள் மற்றும் பத்தாண்டுகாலதிற்க்கும்
மேலாக சிறைபட்டுள்ள சிறைபட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் எதிர்வரும் அண்ணா பிறந்தநாளில்
விடிவிக்ககோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் தொடர்போராட்டத்தை மனித உரிமை அமைப்புகள் முன்னெடுத்துள்ளன..

கடந்த பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கோவை சிறைச்சாலைகளில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு
முடங்கியுள்ள அப்பாவிகள் அவர்களின் சிறைவாசத்தால் சராசரியான வாழ்க்கை முறையை இழந்துவிட்ட அவர்களின்
குடும்பத்தார்.. மகனை இழந்தவர்கள்... கணவனை இழந்த மனிவிகள்... தகப்பனை இழந்த பிள்ளைகள்...இப்படியாக
வாழ்க்கையே சூனியமாகிவிட்ட பரிதாப்த்திற்க்குரிய மக்களின் இழந்த மகிழ்ச்சியை மீட்கவேண்டிய மனித நேய அவசியம்...

கூடங்குளம் நிகழ்விற்கு சற்றும் சளைக்காத வகையில் இன்றைக்கு சிறைவாசிகள் மீட்ப்பும் வெகுஜன மக்களின்
கவனத்தை ஈர்த்துள்ளது...

பொதுவாக பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறைபட்டிருக்கும் சிறைவாசிகளின் நன்னடத்தை அவர்களின் வழக்கின் நிலை இவற்றை
கவனத்தில் கொண்டு ஒவ்வொரு வருடமும் முன்னாள் முதல்வர் அமரர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான
செப்டம்பர் 15 ம் தேதி சம்மந்தப்பட்ட சிறைவாசிகளை விடுதலை செய்யும் முறை தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது...
கடந்த திமுக ஆட்சியிலும் இம்முறை நடைமுறை படுத்தப்பட்டது... மதுரையில் வேட்டிகொள்ளப்பட்ட கவுன்சிலர்
தோழர் லீலாவதி அவர்களின் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த கொலைகுற்றவாளிகள்கூட இம்முறையில்
விடுவிக்கப்பட்டார்கள்... ஆனால் ஒரு முஸ்லிம் சிறைவாசிகூட விடுவிக்கப்படவில்லை... ஏன் இந்த பாரபட்சம் என்பதுதான்
நமது கேள்வி...

இன்றைக்கும் சிறையி வாடும் முஸ்லிம்களில் ஒருவர்கூடவா விடுதலைக்கு தகுதி பெறவில்லை... ஒருவர்கூடவா
நன்னடத்தை தகுதி பெறவில்லை...? மற்ற மாநிலங்களில் தாமதிக்கப்பட்ட தீர்ப்பை கணக்கிகொண்டே கைதிகளுக்கு
முன் விடுதலை நடைமுறையில் இருக்கும்போது தமிழகம் மட்டும் ஏன் அதனை கடைபிடிக்க மறுக்கிறது...

இதுவரை கோவை சிறைவாசிகளின் பிரச்னையை முஸ்லிம்களுக்குள் மட்டுமே முஸ்லிம்கள் விவாதித்து
வந்தார்கள்... ஊடகங்களின் கவனத்தை பெறுவதற்கு முஸ்லிம் சிறைவாசிகளின் பிரச்னை தவறிவிட்டது
முஸ்லிம்கள் என்கிற வட்டத்துக்குள்ளேயே இவ்விவகாரம் அடைக்கபட்டுவிட்டதால் இது ஒரு சமூக பிரச்சனையாகவே
இதுவரை அடையாளமகானபட்டது... ஆனால் உண்மை அதுவல்ல இது ஒரு சமூகம் சார்ந்த பிரச்சனையல்ல...
அப்பட்டமான மனித உரிமை மீறல்... என்பதை உலகிற்கு உணர்த்தும் காலம் கனிந்துவிட்டது... ஆகையினால்தான்
கோவை சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கைதிகளின் பிரச்சனையை விவாதத்தை இன்றைக்கு பொதுதளத்திற்கு
கொண்டு செல்ல முனைந்துள்ளது முற்ப்போக்கான சிந்தனைகளை கொண்ட இசுலாமிய இளைஞர்குழு...

சிறைகதவுகளுக்கு பின்னால் சிதைந்து போயுள்ள அப்பாவிகளின் வாழ்க்கையை மீட்க்க வேண்டிய பொறுப்பு
ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு என்பதை தமிழ்மண்ணில் தமிழுனர்வாளர்களை கொண்டும் மனித உரிமை
போராளிகளை கொண்டும் நாம் அரசின் கண்ணியமான கவனத்திற்கு கொண்டு செல்லபோகிறோம்...

இஸ்லாமிய அமைப்புகளின் இதுவரையிலான சிறைவாசிகள் மீட்ப்பு நடவடிக்களை நாம் குறைந்து மதிப்பிடவில்லை...
அவர்களின் வீரியத்தை நாம் குறைகூறவில்லை... ஆனால் போராட்டமுறை மாறவேண்டும் என்பதுதான் நமது
முழக்கம்...

இதோ இன்றைக்கு முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட மற்ற சிறைவாசிகளின் விடுதலைக்காக தமிழ் தேசியவாதிகளும்
மனித உரிமை போராளிகளும் போராட தயாராகிவிட்டனர்... ஊடகங்கள் தங்களது பார்வையை சிறைவாசிகளின் பக்கம்
திருப்பியுள்ளன...

மார்ச் 30 முதல் ஆகஸ்டு இறுதிவரை இக்கவன ஈர்ப்பு போராட்டம் தமிழ் தளத்தில் கொண்டு செல்லப்படும்...
இப்போராட்டம் பலவாறாக பரிமாணம் பெரும்... இது எந்த தனிநபரையோ அமைப்பையோ அரசியலையோ
முன்னிலை படுத்தும் வேலையல்ல... முழுக்க முழுக்க மனிதம் இன்னும் மாயந்துவிடவில்லை... என்பதை
உலகிற்கு உணர்த்தும் நிகழ்வு...

மனித உரிமை போராளிகளே... தமிழுனர்வாளர்களே... நடுநிலை தவறாத தமிழ் மக்களே...
விடியலின் வெளிச்சம் என்றைக்காவது ஒருநாள் எங்கள் குடிசைக்குள்ளும் ஒளிராத என்கிற ஏக்கத்தோடும்
துக்கத்தோடும் நிம்மதி என்பதையே நிரந்தரமாக தொலைத்துவிட்ட மக்களின் மகிழ்ச்சியை மீட்க்க
அணிதிரள்வோம்... மாற்றம் நிச்சயமாக மக்களால் ஏற்படுத்தகூடியதே... அதனை சாத்தியமாக்கிட சமதளத்தில்
பயணிக்க தயாராகுவோம்...

மக்கள் எழுச்சியால் மார்ச் 30 மாற்றத்தை ஏற்படுத்தும்... இந்த மாபெரும் மக்கள் போராட்டம்
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு திருப்பூரில்
முதல் களம் காண்கிறது... சட்டப்போராளி வழக்கறிஞர் செ.ஜே.உமர்கயான் அவர்களின் அதீத முயற்சியால்
பேச்சளவில் பேசப்பட்ட நிகழ்வுகள் செயல்வடிவம் பெற்று அடுத்த இலக்கை நோக்கி நகர துவங்கியுள்ளது...
மாநிலமெங்கும் உள்ள இசுலாமிய இளைஞர்களே... உங்கள் பகுதிமக்களுக்கு இந்நிகழ்வு பற்றிய செய்தியை
அறியத்தாருங்கள்... மற்ற சமூக மக்களுக்கும் இவ்விவகாரத்தில் உள்ள உண்மைகளை எடுத்து சொல்லுங்கள்...
நமது வலிமையான கட்டமைப்பான முஹல்லாஹ் ஜமாத்துகளின் கவனத்திற்கும் இவற்றை கொண்டு செல்லுங்கள்
போராடகளத்திற்கு மக்களை திரட்டுங்கள்...

இது அரசுக்கு எதிரான புரட்சியல்ல... மனிதநேயம் கொண்ட மக்களின் உணர்ச்சி... இது அரசுக்கு எதிரான கிளர்ச்சியல்ல...
மக்களின் எழுச்சி....

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

அந்த 24 மணி நேரம்....



மலேசியாவிற்கு பண்ணாட்டு பகுத்தறிவு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திருமா அவர்கள்

வருகைதரும் செய்தி தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் மூலமாக அறியபெற்றேன்...




இதனை நான் இங்குள்ள நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டவுடன் நான் எதிர்ப்பார்க்காத வண்ணமாக அண்ணன் திருமா அவர்களை சபாவிற்க்கு அழையுங்கள் அவரை சந்திக்க அவரது உரையை நேரடியாக

செவிமடுக்க இங்குள்ள தமிழ் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என சொன்னார்கள்... நானும் அண்ணன் திருமா அவர்களை நேரில் சந்தித்து பல வருடங்கள் ஆகிவிட்டது ஆகவே என் மனதிலும் ஆர்வம் மேலோங்கியது.


உடணடியாக அண்ணன் திருமா அவர்களை தோழர் இராஜேந்திரன் அவர்களின் அலைபேசி வாயிலாக தொடர்புகொண்டுவிபரத்தை சொன்னேன்... அண்ணன் அவர்கள் தான் பிப்ரவரி ஒன்றாம் திகதியே தமிழகம் வந்தாக வேண்டும் ஜனவரி 31 தேதி வரை கோலாலம்பூரில் நிகழ்சிகள் இருப்பதை சொன்னார்... இருப்பினும் சில மணிநேரங்களில் தொடர்புகொள்வதாக சொல்லி அலைபேசியை துண்டித்தார்... நான் ஏமாற்றத்துடன் இருந்தபோது அண்ணனிடம் இருந்து அழைப்பு வந்தது என்னிடம் அண்ணன் அவர்கள் வேங்கை நான் அவசியம் வருகிறேன் நான் தமிழகம் திரும்வேண்டிய நாளை இரண்டாம் திகதியாக மாற்றியுள்ளேன் என்றார் நான் மகிழ்வுடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளுக்கு ஆலோசனை வழங்க துவங்கினேன்...


சரியாக பிரவரி ஒன்றாம் நாள் காலை சுமார் 9.30. மணியளவில் கோத்தாகினபாலு உள்நாட்டு விமான நிலையத்திற்கு தோழர்கள் அப்துல்லத்தீப் தோழர் முஸ்தபா போன்ற ஏராளமாநோருடன் வந்து அண்ணன் திருமா அவர்களின் வருகைக்காக காத்திருந்தோம்... என்னுடன் அண்ணனை வரவேற்க வந்திருந்த அனைவரும்னே தமிழக தொடர்பில் பெரியஅளவில் ஈர்ப்பில்லாதவர்கள்தான்இருப்பினும் அண்ணன் அவர்களை வரவேற்க அவர்கள் காட்டிய ஆர்வம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது...


சரியாக காலை மணி சுமார் 9.55 க்கு விமானம் தரை இறங்கியது... மனதிற்குள் இனம்புரியாத உணர்வுகள் ஒரு மக்கள் தலைவனை எந்நேரமும் ஆயிரக்கணக்கான மக்களுடனே பயணிக்கும் ஒரு தலைவனை சுமார் ஏழாண்டுகளுக்குப் பிறகு சந்திக்க போகிறோம் என்கிற எதிர்ப்பார்ப்பு...


முதலில் என் கண்ணில் பட்டவர் தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவரையும் தொடர்ந்து தோழர் அப்துல்லாஹ் பிறகு அண்ணன் முகமது யூசுப் இவர்கள் அனைவருமே என்னை நோக்கி கையசைத்த வண்ணமாக வந்தனர் அவர்களுக்கு பின்னால் எந்த விதமான பகட்டும் இல்லாமல் பந்தாவும் இல்லாமல் என் அண்ணன் திருமா வந்தார்... நான் ஒரு நிமிடம் திகைத்தே போனேன்...காரணம் அவ்வாறாக அண்ணன் திருமா அவர்களை அந்த இடத்தில் நான் எதிர்பார்க்கவில்லை...!!!


மத்திய மாநில அரசுகளை தனது வீரியமான செயல்களால் உரைவீச்சால் உண்டு இல்லை என ஆக்கும் அண்ணன் திருமா இவ்வளவு எளிமையாக இனிமையாக வருவார் என உண்மையாகவே நான் எதிர்ப்பார்க்கவில்லை...


நான் தமிழக தலைவர்கள் பலருடனும் நெருக்கமாக பழகி இருக்கிறேன் ஆனால் அண்ணன் திருமா அவர்களை சந்தித்தபோது என் குடும்பத்தில் ஒருவரை சந்திப்பதாகவே உணர்ந்தேன்.... நலம் விசாரிப்புகள் முடிந்து அண்ணன் அவர்களையும் தோழர்களையும் அழைத்துகொண்டு விமானநிலையம் அருகில் இருக்கும் தோழர் ஒருவரின் உணவகத்திற்கு சென்று சிற்றுண்டிகளை முடித்தோம்...


என் அருகில் அமர்ந்திருந்த அண்ணன் திருமா சில நாட்களுக்கு முன்பாக அவர் கலந்துகொண்ட தலைவர் ஷஹீத் பழனிபாபா அவர்களின் நினைவேந்தல் நாள் நிகழ்சிகள் பற்றி கேட்டார் அது சம்மந்தமாக தமிழக ஏடுகளில் வெளியான செய்திகளை சொன்னேன்அன்றை தினம் அண்ணன் அவர்களின் பேச்சு ஏற்ப்படுத்தியுள்ள அதிர்வுகளை சொன்னேன் அமைதியாக கேட்டுகொண்டார்...


இடையிடையே எதார்த்தமான நண்பர்கள் போல என்னையும் தோழர் ஷாநவாஸ் மற்றும் அப்துல்லாஹவையும் கேலியாக பேசியும் அண்ணன் அந்த இடத்தை கலகலப்பாக்கினார்...


என் பெயருக்கு முன்னாள் ஒட்டியுள்ள "வேங்கை"க்கான விளக்கத்தை தோழர் ஷாநவாஸ் அண்ணன் திருமா அவர்களிடம் சொல்லியபோது

அண்ணன் அவர்கள் வியப்பாக என்னை பார்த்தார்... தலைவர் பாபா அவர்களை பற்றிய நினைவுகள் அவ்விடத்தையுமே ஆக்கிரமித்தது...


அதன் பிறகு அண்ணன் திருமா உட்பட்ட அனைவரையும் அன்பு தோழர் அப்துல்லத்தீப் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இல்லத்திற்கு சென்றோம்

இடைவிடாத பயணங்கள் மற்றும் நிகழ்சிகளால் சற்று சோவாக காணப்பட்ட அண்ணன் திருமா மற்றும் தோழர்களிடம் அன்றை நிகழ்சிகளை பற்றி சொல்லிவிட்டு ஓய்வெடுக்க சொன்னேன்... அனைவரும் சற்று அயர்ந்தனர்...


நானும் தோழர் அப்துல்லத்தீப் மற்றும் நூர்முஹமது போண்டவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதித்து முழுமைபடுத்தினோம்...


அன்றைய மதியம் உணவுக்குப்பிறகு இங்குள்ள முக்கிய சமுதாய பிரமுகர்களுடன் கலந்துரையாடல் அண்ணன் திருமா அவர்கள் தங்கி இருந்த இல்லத்திலேயே ஏற்பாடாகி இருந்தது நிகழ்ச்சிக்கு சில மணி நேரம் முன்பாகவே நான் அமர்ந்திருந்த வரவேற்ப்பு அறைக்கு அண்ணன் வந்தார் நான் ஏன் அண்ணா இன்னும் கொஞ்ச நேரம் உறங்கி இருக்கலாமே என கேட்டேன்போதிய ஓய்வு கிடைத்து விட்டதாக அண்ணன் சொன்னார் அதன் பிறகு அண்ணன் அவர்களின் வெகு அருகாமையில் அமர்ந்துபல்வேறு விளக்கங்கள் பெறக்கூடிய வாய்ப்பு எனக்கு கிட்டியது...


பிரமுகர்கள் வரவில் உணவு பரிமாறப்பட்டது அண்ணன் சைவ உணவுதான் உண்பார் என்பதால் அவருக்கென தோழர் ஜமால் அவர்கள் வீட்டில் சமைத்து எடுத்து வந்திருந்தார்... நான் அண்ணன் அவர்களின் அருகில் அமர்ந்து உணவருந்தினேன்.... உணவு சற்று அதிகமாக இருந்ததால் என்னால் முடிக்க முடியவில்லை பகுதி உணவுடன் நான் கை கழுவ எழுந்தேன் அண்ணன் திருமா அவர்கள் உணவை இப்படி விரயம் செய்யாதீர்கள் இந்த உணவு கிடைக்காமல்தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாடுகிறார்கள் உட்கார்ந்து உணவை முடியுங்கள்என உரிமையுடன் சொன்னார்... "இதைத்தானே இஸ்லாமும் சொல்கிறது" நான் வழுகட்டாயமாக உண்டு முடித்தேன்...


அதன் பிறகு வந்திருந்த பிரமுகர்களுடன் ஆரோக்கியமான விசயங்கள் குறித்து கலந்துரையாடினார் அண்ணன்அவர்களின் அரசியல் பொதுத்தளம் சமூகம் சார்ந்த பக்குவபட்ட கேள்விகளுக்கும் சில பக்குவமில்லாத கேள்விகளுக்கும் அமைதியாக பொறுமையாக அண்ணன் திருமா அவர்கள் விளக்கமளித்தது அவர் மீது எனக்கிருந்த அன்பையும் மரியாதையும்

இரட்டிப்பாகியது... தமிழக அரசியல் கூடங்குளம் அணுமின்நிலையம் போன்ற பல நிலைகள் குறித்து அண்ணன் விளக்கமாக சொன்னார் அதில் வியப்பான சில உண்மைகளும் இருந்ததை உணர்ந்தேன்... மகிழ்ந்தேன்...


அன்று மாலை "இன்றைய தமிழினம்" கருத்தரங்கம் சிறப்பாக நடந்தேறியது அங்கு வந்திருந்த பெரும்பாலான மக்கள் அண்ணன் அவர்களின் பேச்சை ஆர்வமாக செவிமடுத்தது ஆச்சரியமாக இருந்தது நானும் முதன் முறையாக அண்ணன் அவர்களின் அரசியல் கலப்பில்லாத பேச்சை கேட்டேன்... நிகழ்ச்சி நூறு சதவிகிதம் வெற்றி என்கிற நிறைவை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின்

சிரிப்பில் என்னால் உணர முடிந்தது... நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் அண்ணன் திருமா அவர்களுடன் புகைபடம் எடுத்துகொள்ள மிகுந்த ஆர்வம் காட்டினர் அனைவருடனும் அண்ணன் அவர்கள் முகமலர்ச்சியுடன் படம் பிடித்துகொண்டார்...


அன்றிரவு அண்ணன் திருமா அண்ணன் யூசுப் அன்பு தோழர்கள் ஆளூர் ஷாநவாஸ் அப்துல்லாஹ் ஆகியோருடனே நானும் தங்கினேன் அதிகாலையில் எழுந்து அண்ணன் அவர்களுக்காக காலை உணவு தயாரிக்க எனது உணவகத்திற்கு சென்றேன் எனது உணவகத்தில் காலை உணவை முடித்துகொண்டு அங்கிருந்தே விமானநிலையம் செல்வதாக ஏற்பாடு...


சரியாக பிப்ரவரி காலை 8.40 மணிக்கு அண்ணன் உள்ளிட்ட தோழர்களுடன் தோழர் அப்துல்லத்தீப் எனது உணவகம் வந்தார் உணவகத்தில் உணவருந்திகொண்டிருந்த தமிழர்கள் அண்ணன் அவர்களை அடையாளம் கண்டுகொண்டு அவருடன் கைகுலுக்கி மகிழ்ந்தார்கள்... நான் தயாரித்த உணவை சுவைத்து உண்ட அண்ணன் அவர்கள் என்னை பாராட்டினார்கள் தோழர் ஆளூர் ஷாநவாஸ் வேங்கை நீங்க புரோட்டா போடுவதை நான் பார்க்கணும் என்றார் அண்ணன் திருமா அவர்களும் ஆமாம் போடுங்க பார்க்கணும் என்றார் நான் புரோட்டா போட்டேன் அண்ணன் சிரித்துக்கொண்டே ரசித்தார்...


பயண நேரம் நெருங்கி விட்டதால் புறப்பட்ட தயாராகினார்கள் தோழர் அப்துல்லத்தீப் அண்ணன் மற்றும் தோழர்களை அழைத்துகொண்டு

விமானம்நிலையம் நோக்கி பயணித்தார் நான் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்தேன்... அப்போது சரியாக மணி காலை 9.௦30 விமானநிலையத்தில் அண்ணன் என்னுடன் ஒரு உடன்பிறந்த சகோதரனை போல சில அறிவுரைகளை வழங்கினார் சிறப்பான அருமையான மக்கள் இவற்றை சந்திக்க நீங்களே காரணம் என அகமகிழ்ந்து அண்ணன் என்னை வாழ்த்தினார் உங்களுடன் இன்னும் சில நாட்கள் தங்க முடியாமல் போனதுதான் வருத்தம் என்றார்... ஆம் எனக்கும் எனக்கு மட்டுமல்ல அண்ணனை முதன்முறையாக

பார்த்து பழகியவர்களுக்கும் அந்த வருத்தம் ஏற்ப்பட்டதை அவர்களே பிறகு என்னுடன் பகிர்ந்துகொண்டார்கள்...


சரியாக காலை மணி 9.55. விமான நிலைய ஒலிபெருக்கி இறுதி அழைப்பை விடுத்தது... அண்ணன் என்னை ஆரத்தழுவி விடைபெற்றார்நானும் கையசைத்து விடைகொடுத்தேன்...அண்ணன் அவர்களின் தலை மறையும் வரை அவர் சென்ற பாதையை பார்த்துகொண்டிருந்தேன்...

அப்போதுதான் கவனித்தேன் எனது விழிகளின் ஓரத்தில் ஈரம்... சரியாக 24 மணிநேரம் அண்ணன் திருமா அண்ணன் யூசுப் அன்பு தோழர் ஆளூர் ஷாநவாஸ் அன்பு தோழர் அப்துல்லாஹ் ஆகியோருடன் பயணித்த அனுபவம் புதுமையல்ல... பெருமையல்ல...உணவுபூர்வமான ஒருங்கிணைப்பின் அடித்தளம்...


இப்போதும் ஏன் செவிகளில் சிறுத்தைகளின் கொள்கைபாடல் ஒலிக்கிறது....

"தாயை போன்றவர் எங்கள் தலைவன் திருமா... இவரைப்போல வேறெதுவும் வருமா" ஆம் உண்மையான வரிகள்....






வியாழன், 2 பிப்ரவரி, 2012

எழுச்சித்தலைவர் திருமா அவர்களை முதல்வராக்குவோம்.... வேங்கைஇப்ராஹீம் பேச்சு...

மலேசியாவில் கடந்த ஜனவரி 29,30.31 ஆகிய நாட்களில் தமிழர் தன்மான இயக்கம்ஏற்பாடு செய்திருந்த பண்ணாட்டு பகுத்தறிவு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சிதலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மலேசியா வந்திருந்தார்.

தகவலரிந்து மலேசியாவின் தீவு மாநிலமான சபா வாழ் தமிழின மக்கள் திருமா அவர்களை தங்கள் மாநிலத்திற்கு வருமாறும் தாங்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்வில் உரையாற்றுமாறும் அழைப்புவிடுத்தனர்.அழைப்பினை ஏற்றுக்கொண்ட திருமா அவர்கள் சபா மாநிலத்திற்கு கடந்த பிப்ரவரி 1 ம் தேதி வருகை புரிந்தார்.

அன்று மாலை சபா இந்தியர் சங்க கட்டிட விழா மண்டபத்தில் நடைபெற்ற
"இன்றையதமிழினம்" என்கிற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு எழுச்சியுரையாற்றினார்.

அக்கருத்தரங்கில் கலந்துகொண்டு அறிமுகவுரையாற்றிய வேங்கைஇப்ராஹீம் பேசியதாவது....

அன்பிற்கினிய சபா வாழ் இனிய தமிழின மக்களே... நமது மலேசிய திருநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு கட்சிகளையும் சார்ந்த தலைவர்கள் எழுத்தாளர்கள், கவிஞர்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வருகை புரிந்துள்ளனர் ஆனால் இன்றைக்கு நாங்கள் உங்களுக்கு அறிமுகம் செய்யவிற்பவர் இவற்றை எல்லாம் உள்ளடக்கிய ஒரு பயங்கரவாதி...! ஒரு தீவிரவாதி...! ஒரு வன்முறையாளர்...!

ஆம் என்ன என் தமிழினமே அதிர்ச்சியாக இருக்கிறதா...? இதில் அதிர்ச்சிக்கு எதுவும் இல்லை ஏனெனில் இந்த உலகம் புரட்சியாளர்களையும் மக்களுக்காக வீரியமாக ஆதிக்க சக்திகளை எதிர்த்து போராடக்கூடியவர்களையும் இப்படிதானே வகை படுத்துகிறது...

உதாரணமா
இந்திய திருநாட்டின் விடுதலைக்கான போராட்டத்தில் தலைமை
ஏற்று வழிநடத்திய தேசபிதா அண்ணல் காந்தியடிகளை அன்றைக்கு ஆங்கிலேயன் பயங்கரவாதியாகதான் பார்த்தான்தனது கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராடிய நெல்சன் மண்டேலா அவர்களை தீவிரவாதியாகஅடையாளபடுத்திதான்இருபதாண்டுகளுக்கும் மேலாக சிறையிலடைத்தனர். ஈராக்கிய மக்களின் உரிமைகளை விட்டுகொடுக்காத மாவீரன் சதாம் ஹுசைனை அமெரிக்க ஏகாதிபத்தியம் இப்படியாக வகைபடுத்திதான் தூக்கிலிட்டு படுகொலை செய்தது.


ஆக அந்த வகையில் உலகின் எந்த மூலையிலும் தமிழனுக்கு ஒரு ஆபத்தென்றால் புயலாக களம்புகும் அண்ணன் திருமா அவர்களும் பயங்கரவாதிதான் தீவிரவாதிதான் வன்முறையாலர்தான் என்பதிலே நாங்கள்
பெருமையோடு அறிமுகம் செய்கிறோம்...

ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் வாழ்வுரிமைக்காக போராடிவரும் அண்ணன் திருமா இந்த வருடம் தனது ஐம்பதாவது வயதை நிறைவு செய்யவிற்க்கிறார். தனது கடந்த முப்பதாண்டுகால பொதுவாழ்க்கையில் தனக்கென அவர் எதையும் சேர்க்கவில்லை தனிமனித வாழ்க்கைக்கு தேவையான எதையுமே அவர் விரும்பவில்லை அண்ணன் திருமா அவர்கள்இந்த விஷயத்தை இந்த மேடையில் நான் உங்களுடன் பகிர்ந்துகொள்வதை விரும்புவார்களா மாட்டார்களா என எனக்கு தெரியவில்லை.இருப்பினும் அண்ணன் அவர்களின் அன்பு தம்பி என்கிற முறையில் எனக்குள்ள உரிமையின் அடிப்படையில் சொல்கிறேன்ஐம்பது வயதை நெருங்கிவிட்ட அண்ணன் இன்னும் திருமணம்கூட செய்துகொள்ளாமல் ஒரு நாளில் 24 மணி நேரத்தில்
சுமார் 20 மணிநேரம் மக்களுக்காக உழைக்கிறார்... அப்படிப்பட்ட மகத்தான மக்கள் போராளியைதான் இன்றைக்கு நாம் நமது சபா மாநிலத்திற்கு அழைத்து பெருமைபட்டிருக்கிறோம்...

அமைப்பற்ற மக்களை அமைப்பாக்கினார் அரசியல் வழிகாட்டினார் எத்துனை பெரிய தோல்விகளையும் தைரியத்துடன் எதிர்கொள்ளும் வல்லமை அவருக்குண்டு... எத்துனை பெரிய வெற்றிகளையும் இலகுவாக ஏற்றுகொள்ளும் பக்குவமும் அவருக்குண்டு... ஆதாயத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட தமிழக அரசியலில் மக்களின் ஜீவாதாரத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயக்கம் கட்டியவர் அண்ணன் திருமா...

கடந்த 1994 ம் ஜூலை மாதம் 7 என் தலைவர் ஷஹீத் பழனிபாபா அவர்களுடன் எனது பிறந்த பூமியான இளையான்குடியில்முதல் மேடை ஏறியபோது எத்தகைய மகிழ்வும் பெருமையும் என் மனதில் விதைந்ததோ அதேபோல உணர்வை அண்ணன் திருமா அவர்களுடன் நான் பங்கேற்றுள்ள இந்த சிறப்புவாய்ந்த முதல் மேடையிலும் நான் பெறுகிறேன்...

இங்கு உரையாற்றிய நண்பர்கள் சொன்னார்கள் தமிழ் உலகின் பல்வேறுபகுதிகளும் அழிந்துவருகிறதுதமிழினம் அழிக்கபட்டு வருகிறது... தமிழர்களின் கலாச்சாரம் ஒழிக்கப்பட்டு வருகிறது என்றெல்லாம் ஆதங்கபட்டார்கள் உண்மைதான் மறுக்கவில்லை ஆனால் எங்கு வேண்டுமானாலும் என்னவேண்டுமானாலும் தமிழனுக்கு தமிழ் மொழிக்கு
தீங்கு ஏற்ப்படலாம் தமிழ்நாட்டில் தாய் தமிழகத்தில் தமிழையும் தமிழனையும் தமிழனின் கலாச்சாரத்தையும் எந்த கொம்பனாலும் அசைத்துவிட முடியாது காரணம் என் தாய்தமிழ் மண்ணில்தானே என் அண்ணன் திருமா இருக்கிறார்... எந்த மூலையில் தமிழினம் பாதிக்கப்பட்டாலும் உடணடியாக உணர்வோடு எந்தவிதமான ஆதாய நோக்கமும் இல்லாமல் களம்காணும்
என் அண்ணன் திருமா அவர்கள் வாழக்கூடிய தாய்தமிழ் பூமியில் தமிழையும் தமிழனையும் எவன் அழிக்க நினைத்தாலும் அவன் அழிக்கபடுவான்....

என் அண்ணன் திருமா அவர்களே... இதுநாள் வரையிலும் எந்த தமிழக அரசியல்தலைவனையும் அழைத்து அழகுபார்க்காத என் சபா வாழ் தமிழினம் உங்களை அழைத்து இன்றைக்கு வரலாற்று சிறப்புமிக்க இந்த கருத்தரங்கை
நிகழ்த்திகொண்டிருக்கிறது என்றால் இங்குள்ள என் தமிழ் மக்களிடம் சாதி இல்லை மதம் இல்லை முரண்பாடு இல்லை மனித குளத்தில் ஏற்றத்தாழ்வு இல்லை... என் தலைவர் பாபா அவர்கள் அடிக்கடி சொல்வதைபோல நாங்கள் அனைவருமே இனத்தால் திராவிடர்கள் வம்சாவளியால் இந்தியர்கள் மொழியால் தமிழர்கள் ஏற்றுக்கொண்ட வழிமுறைகளில்தான் மாறுபட்டவர்கள்... இன்றைக்கு இந்த அரங்கம் எதிர்பார்த்தயும்விட நிறைந்துள்ளது என்றால் காரணம் எங்களிடம் எம் மக்களிடம் எஞ்சியிருப்பது தமிழன் என்கிற ஒற்றைவரிதான் என்பதை பெருமையுடன் அறியத்தருகிறேன்...

இப்படியான சிறப்புவாய்ந்த இந்த உள்ளரங்கில் நின்று நான் சொல்கிறேன் இன்றைக்கு சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக விசிகவின்
தலைவராக வருகை தந்துள்ள நீங்கள் அடுத்து மீண்டும் இதே சபா மாநிலத்திற்கு வரவேண்டும் எங்களை எல்லாம் சந்தித்து தமிழுனர்வை ஊட்டவேண்டும் ஆனால் சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக அல்ல... விசிகவின் தலைவராக மட்டுமல்ல... தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரவேண்டும் இதை என் ஏக இறையவனிடம் இருகரமேந்தி பிரார்த்திக்கிறேன்...

நீங்கள் தமிழினத்தின் தலைமைபீட பொறுப்பை ஏற்க்கும்போதுதான் உலக தமிழினம் ஒன்றுபடும் உரிமைகள் காக்கப்படும்கச்சதீவு மீட்கப்படும் தனித் தமிழீழமும் மலரும்...

இந்த வார்த்தைகளை மேடையளங்காரதிர்க்காக நான் சொல்லவில்லை உணர்வோடு உண்மையோடு சொல்கிறேன்அதற்காக புலம் பெயர்ந்துவாழும் எம்மை போன்ற தமிழர்கள் சிறுத்தைகளுக்கு என்றைக்குமே ஆதரவாக இருப்போம்என உறுதிகூருகிறேன்... என பேசினார்

வெள்ளி, 13 ஜனவரி, 2012

பசுபதி பாண்டியன்


பசுபதி பாண்டியன் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்ல தமிழகமே
ஒரு காலத்தில் உச்சரிக்க அஞ்சிய மாவீரனின் பெயர்... அடக்குமுறைகளுக்கு
எதிராக களம்கண்ட சமூகபோராளி தலித் சமூக மக்களின் வாழ்வாதாரம்
கேலிக்குறியதாக ஆதிக்க வெறியர்களால் ஆக்கப்பட்டபோது அஞ்சாமல் களமிறங்கிய
போராளி...

இன்றைக்கு
நம்மிடையே இல்லை... இயற்க்கை அவரை மரணிக்க செய்திருந்தால்
எம்மை போன்றோர் இப்படி கவலையும் கண்ணீரும் கடும்சினமும் கொண்டிருக்க வேண்டி வந்திருக்காது...
திட்டமிட்டு சதிபுனைந்து அந்த மாவீரன் தனித்திருந்த நேரத்தில் பேடித்தனமாக கொல்லபட்டிருக்கிறார்...
காரணமானவர்கள் இன்னும் கவலை இல்லாமல் நாட்டுக்குள் நடமாடி வருகிறார்கள். அரசின் காவல்துறை
நீதியான நடவடிக்கை எடுக்கும் என்கிற நம்பிக்கை இல்லையெனினும் சந்தர்ப்பம்கொடுத்து
காத்திருக்கிறது ஒரு சமூகம்...

அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்களை வீர உணர்வுடன் நினைவுகூறுகிறேன்...

1990 களின் துவக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக
அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்கள் வீரியமாக களமாடி வந்தார்... அப்போது அவருடன்
நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்குகிடைத்தது... ஒரு முறை தலைவர் சமூகப்புரட்சியாளர்
ஷஹீத் பழனிபாபா அவர்களை சந்திப்பதற்காக பொள்ளாச்சி சென்றிருந்தேன். தலைவர் பாபா
கொல்லப்பட்ட அதே தோழர் பசவராஜ் அவர்களின் இல்லம் அது... நான் அங்கு சென்றபோது
தலைவர் பாபா அவர்கள் ஒருவருடன் உரிமையுடன் அதாவது வாடா போடா என விளித்து
உரையாடிகொண்டிருந்தார்... நானும் எனது நண்பர்களும் தலைவர் பாபா அவர்களின் அறைக்குள்
சென்றவுடன் என்னை பாபா அவர்களுடன் உரையாடிகொண்டிருந்த நபருக்கு அறிமுகம் செய்துவைத்தார்...

நான் அவர் யார் என அறியாமல் குழப்பத்தில் விழித்தேன் புரிந்துகொண்ட தலைவர் பாபா இவரை தெரிகிறதா
எனக்கேட்டார் நான் தெரியவில்லையே பாபா என்றேன்... இவர்தான் பசுபதி பாண்டியன் என தலைவர் பாபா
அவர்கள் சொன்னபோது என்னையும் அறியாமல் ஒருவிதமான நடுக்கம் என்னுள் தோன்றியது ஏனெனில்
அக்காலகட்டத்தில் ஊடகங்களில் ஒரு தீவிரவாதியாக சித்தரிக்கபட்டவர் அண்ணன் பசுபதி பாண்டியன் ஆனால்
என்னுள் தோன்றிய நடுக்கம் அண்ணன் பசுபதி அவர்கள் என்னுடன் கைகுலுக்கி உரையாட துவங்கியவுடன்
பல ஆண்டுகால நட்பாக அன்பை உருவாக்கியது... ஆம் அவ்வளவு இனிமையாக பழககூடியவர் அண்ணன்
பசுபதி பாண்டியன்...

அதன் பிறகு எனக்கும் அண்ணன் பசுபதி பாண்டியன் அவருகளுக்குமான நட்பு அன்பின் எல்லைகளை கடந்து
விரிந்தது... நான் அண்ணன் பசுபதி அவர்களுடன் உரையாடும்போதெல்லாம் சொல்வேன் அண்ணா உங்களுக்கு
பயம் என்பதே கிடையாதா...? என அதற்க்கு அவர் சொல்வார் வேங்கை அச்சம் கொண்டவனுக்கு அன்றாடம்
சாவு அச்சத்தை வென்றவனுக்கு என்றாவது ஒருநாள் சாவு இதை எனக்கு சொன்னவர் நமது தலைவர் பாபா ஆம்
நான் பாபா சொல்லியதுபோல என்றாவது ஒருநாள் சாக விரும்புகிறேன்... அதனால் எனக்கு அச்சம் என்கிற உணர்வே இல்லை...
என்பார்... ஆம் அச்சம் என்பதை அறியாத அந்த மாவீரன் இன்று கொல்லப்பட்டுவிட்டார் ஒரு வீர சாணக்கியன்
சாகடிக்கபட்டுவிட்டார்...

ஒருமுறை அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்கள் மதுரை வந்திருந்தபோது எதார்த்தமாக சந்திக்க முடிந்தது
அப்போது என்னுடைய அன்பிற்கும் நட்பிற்கும் உரிய தோழர் முன்னாள் வந்தவாசி தொகுதி சட்டப்பேரவை
உறுப்பினரும் தற்போதைய மக்கள் விடுதலை கட்சியின் தலைவருமான வழக்கறிஞர் க.முருகவேல் ராசன்
அவர்களை சந்திப்பதற்காக அண்ணன் பசுபதி வந்திருந்தார் அப்போது தோழர் முருகவேல்ராசன் வேங்கை வீட்டு
பிரியாணி சிறப்பாக இருக்குமென அண்ணன் பசுபதி அவர்களிடம் சொன்னார் அப்படியா வேங்கை எனக்கெல்லாம்
பிரியாணி செய்துதரமாட்டீர்களா...? என வேடிக்கையாக கேட்டார் அண்ணனுக்கு இல்லாததா இப்பவே வாருங்கள்
உடணடியாக அம்மாவிடம் சொல்லி பிரியாணி தயாரிக்க சொல்கிறேன் என்றேன் அவர் ஏதோ விளையாட்டாக
கேட்பதாக நினைத்த எனக்கு இன்ப அதிர்ச்சி உடனே வாருங்கள் உங்கள் இளையான்குடிக்கு போவோம் என புறப்பட்டுவிட்டார்

நானும் உடணடியாக என் தாயாரை தொடர்புகொண்டு விவரத்தை சொன்னேன் அழைத்துவரும்படி சொன்னார்
என் அன்பு தாயார்... மதுரையில் இருந்து அண்ணன் பசுபதி அவர்களின் வாகனத்திலேயே இளையான்குடி வந்து சேர்ந்தோம்
அன்று இரவு என் வீட்டிலேயே அண்ணன் தங்கினார் அப்போது அந்த இரவு முழுவது அண்ணன் அவர்களுடன்
உரையாடிகொண்டிருந்ததை இப்போதும் நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது... இன்றைக்கு அண்ணன் பசுபதி பாண்டியன்
அவர்கள் நம்மிடையே இல்லை என் குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்டதாகவே வருந்துகிறேன்...

அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்களின் துணைவியார் சகோதரி ஜெசிந்தா அவர்களும் என் மீது நல்ல அன்புகொண்டவர்
சில ஆண்டுகளுக்கு முன்பாக சகோதரி ஜெசிந்தா அவர்கள் கொல்லப்பட்டதில் இருந்து அண்ணன் பசுபதி பாண்டியன்
அவர்களுடனான நட்பை சூழ்நிலைகள் காரணமாக தொடரமுடியவில்லை இனியும் தொடர முடியாது என்பதை
நினைக்கும்போது இருதயத்தை ஈட்டிமுனைகள் குத்திகிலிப்பதை உணருகிறேன்... விழிகளில் உப்புவண்டிகளின்
ஊர்வலம் வருவதை தடுக்க முனைகிறேன்...

வேங்கை.சு.செ.இப்ராஹீம்