மேற்கத்திய ஏகாதிபத்திய உலகத்தால் இஸ்லாமியரும், இஸ்லாமிய அரசுகளும் சோதனைக்கு ஆளாகி உள்ளனர் என்று இஸ்லாமியர் என்னுவது இயற்கையே! மேலை நாட்டவர் இஸ்லாத்தினை வெறுப்புடனும், விநோதமாகவும், பழைமை வாத கொள்கை கொண்டதாகவும் நோக்குகின்றனர். ஆனால் அந்த இஸ்லாம் இல்லாத உலகம் எப்படி இருக்கும் என்று ஒரு தொலை நோக்குப் பார்வையினை மக்களுக்கு சற்று புரிய வைக்கலாம் என எண்ணுகிறேன்.எந்த இஸ்லாத்தினை வெறுக்கிறார்களோ அந்த இஸ்லாம் தான் எந்த மதமும் இல்லாத அளவிற்கு 1400 ஆண்டுகளுக்குள் 150 கோடி மக்களை தன் பால் உலகத்தில் ஈர்த்துள்ளது என்றால் மிகையாகாது. கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டு வரை ரஷ்யாவினை தலைமையிடமாகக் கொண்ட கிழக்கு ஆர்த்தோடக்ஸ் கிறித்துவ மதத்திற்கும், மேற்கத்திய ரோமன் கத்தோலிக கிறித்துவத்திற்கும், இஸ்லாத்திற்கும் ஆட்சி அமைப்பதில் நீண்ட நெடு போர்கள் நடந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. ஆனால் இஸ்லாம் இல்லாவிட்டால் அந்தப் போர்கள் இரண்டு பிரிவு கிறித்துவர்களுக்குமிடையே தான் ஏற்பட்டு இருக்குமென்றும் வரலாற்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.குர் ஆணின் முன்னோடியாக தவ்ராத் மற்றும் இன்ஜில் வேதத்தினை அல்லாஹ் சுபுஹானத்தாலா இறக்கி வைத்தான். அந்த மூன்று பிரிவுகளுக்குமிடையே மத சம்பந்தமான எந்த போர்களும்; நடைபெறவில்லை. ஆனால் யார் ஆட்சி செய்வது என்ற போட்டியில் தான் போர்கள் நடந்தன. முதலில் யூத மதத்திற்கும், கிறித்துவ மதத்திற்கும் என்ன வேறுபாடு என்று பார்க்கலாம்:1) கிறித்துவர்கள் யேசுவை பழைய டெஸ்டாமென்ட்டில் கூறப்பட்டுள்ள இறை தூதர் என்கிறார்கள். ஆனால் யூதர்கள் கிறித்துவர்களை மிகவும் பழைமை வாதி சாமியார்கள் என்று கருதுகிறார்கள்.2) பழைய டெஸ்ட்டாமென்ட்டில் யூதர்களின் தூதர் தனக்கு வந்த வகியினை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று சொல்கிறது. இறை தூதர் மறு பிறவி யேசு எடுப்பது பழைய வேதத்தில் சொல்லவில்லை.3) யேசுவின் சிலுவையில் அறைந்து மரித்த தியாகத்தால் மனித இனம் காக்கப் பட்டது என்ற கிருத்துவ கொள்கையினை யூதர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. நன்னடத்தை மூலமே மனித இனம் காக்கப்படும் என்று யூதர்கள் நம்புகிறார்கள்.4) மொத்தத்தில் யூதர்களின் ஓரிறைக் கொள்கையினை கையிலெடுத்து அதனைக் களங்கப் படுத்தி யூதர்களை பிரித்தாலும் முயற்சியில் கிருத்துவர்கள் ஈடுபடுகிறார்கள் என்று யூதர்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.முஸ்லிம்கள் கோலோட்சிய ஸ்பெயினில் வாழ்ந்த வரலாற்று இடைப்பட்ட காலத்திய(மெடீவல்) பிளாசபர் மெயினோனிடஸ், ‘நாஸரேனியைச் சார்ந்த ஜீசஸ் டோரா(தவ்ரத்) வேதத்தினை திரித்துக் கூறி யூத இனத்தினை அழிக்க முயற்சி செய்தார்’ எனக் கூறியுள்ளார். ஆனால் இஸ்லாம் இரண்டு மதங்களுக்கு இடையே ஒரு நடுநிலைக் கொள்கையுடன் மூஸாவும், மரியம்(அலை) அவர்களுக்குப் பிறந்த ஈசா(அலை) அவர்களும் அல்லாஹ் சுபுஹானத்தாலாவின் இறைத் தூதர்களே என்று புனிதக் குர்ஆன் 19ஆவது அத்தியாத்தில் உறுதியாக சொல்லியுள்ளது. இரு மதத்தினவரையும் வேதத்தின் மக்களாக கருதுகின்றனர்(பீப்பிள ஆப் தி புக்).முஸ்லிம் அரசர்களால் கைப்பற்றிய நாடுகளின் பிரஜைகளை வாள் கொண்டு வலுக் கட்டாயமாக இஸ்லாத்திற்கு மாற்றியதாக ஒரு தவறான எண்ணம் இருந்து வருகிறது. அதற்கு கீழ்கண்ட முஸ்லிம் அல்லாத அறிஞர்களின் கூற்றினை வைத்து மறுக்கலாம்:1) ‘முஸ்லிம் சொசைட்டீஸ்’ என்ற நூலை எழுதிய புரோபாப்பிடஸ் அதனை மறுத்துக் கூறும் போது, “பலரும் எதிர்பார்ப்பிற்கு எதிராக அரேபிய அரசர்களால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் அனைத்து மக்களையும் இஸ்லாத்திற்கு மாற்றும் திட்டமோ அல்லது அவர்களை அடிமை போல நடத்தும் திட்டமேதுமில்லை’ சொல்கிறார்.2) ‘ஸ்டெடி ஆப் ஹிஸ்ட்ரி’(வரலாற்றுப் பாடம்) என்ற நூலை எழுதிய உலகில் சிறந்த வரலாற்று ஆசிரியர், ‘இஸ்லாமிய மார்க்கத்தினைப் பரப்ப வன்முறையினை பயன்படுத்தினார்கள் என்பதினை முதலில் மறுக்க வேண்டும்’ என்ற ஆனித்தரமாக சொல்லியுள்ளார்.3) அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்பலைக் கழக பேராசிரியர் ரிச்சர்டு பிலியன்ட், ‘இஸ்லாமிய முதல் நூற்றாண்டில் அரேபியர் அல்லாத மக்கள் இஸ்லாமிய மார்க்கத்திற்க மாறியது மிகவும் மெதுவாக இருந்தது. உமயத் இன மன்னன் கி.பி.661ஆம் ஆண்டு வாக்கில் ஆட்சி செய்த போது முஸ்லிம் அல்லாதோர் மதம் மாறியது வெறும் 10 சதவீதம் தான். மக்கள் ஓரிறை கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டே இஸ்லாத்தினைத் தழுவினார்கள். அப்பாஸிட் இன ஆட்சியில் 40 சதவீத மக்களே இஸ்லாத்தினை தழுவியவர்களாக இருந்தார்கள். புனித புத்தகத்தின் மக்கள் என்று கூறப்படும் யூதர்களும், கிறித்துவர்களும் தங்கள் மத கோட்பாடுகளை எந்தவித இடையூறுமின்றி கடைப் பிடித்து வந்தார்கள் என்று நோக்கும் போது இஸ்லாமிய ஆட்சி கட்டாய மத மாற்றத்திற்க எதிரானது என்று காட்டுகிறது’ என்று சொல்லியுள்ளார்.ஆகவே இஸ்லாமியர் ஆட்சி இல்லையென்றால் யார் வல்லவர் என்ற காலத்தில் மற்ற மத மன்னர்கள் அந்த இடங்களை கைப்பற்றி அந்த மன்னர்களின் மதத்திற்கு அவர்களைக் கட்டாய மதமாற்றம் செய்திருப்பார்கள் அல்லவா?ஓட்டமன் சாம்ராஜ்யத்தில் மெஜாரிட்டியான பால்க்கன் பகுதி மக்கள் கிறித்துவ மதத்தினை தழுவியே வந்தார்கள். அப்பாஸிட் கலிபாக்கள் காலத்தில் ஐரோப்பியாவில் ஸ்பெயினிலிருந்து ஆசியாவில் கிழக்குப் பகுதி வரையில் ஆட்சி செய்தார்கள். அந்த, அந்தப் பகுதி பல மத பிரிவுகளைச் சார்ந்த சிந்தனையாளர்கள், மத அறிஞர்கள், அறிவு ஜீவிகள் ஆகியோர்களை இணைத்து பல் வேறு மக்களின் பண்பாடு நாகரீகம், மொழி, கலை, வரலாறுகளை இணைத்து ஆட்சி செய்ததால் இஸ்லாமியர் அல்லாத மக்களை வெகுவாக கவர்நது ஆட்சி செய்ய முடிந்தது. எல்லா மக்களையும் அனைத்து இஸ்லாமியர் ஆட்சி செய்ததால் மக்கள் இஸ்லாமிய ஆட்சி முறையினை விரும்பி ஏற்றுக் கொணடனர்.அப்பாஸிட் கலிபாக்கள் முஸ்லிம் அல்லாத மக்களை கட்டாயமாக இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாற்றினார்கள் என்றால் அந்த அப்பாஸிட் ஆட்சியினை கி.பி. 1300 ஆம் நூற்றாண்டில் சூறையாடிய மங்கோலிய ஆட்சிக்குப் பின்னர் சிரியா மக்கள் பழையபடி ஏன் கிறித்துவ மதத்திற்கோ அல்லது ஈரானிய மக்கள் முன்பிருந்த சொராஸ்ட்டிரிய மதத்திற்கோ மாறவில்லை என்ற கேள்வி எழாமலில்லை என்று வரலாற்று ஆசிரியர்கள் கேள்வி கேட்காமலில்லையே!! அதன் பின்பு ஐரோப்பிய அரசுகளின் காலனி ஆதிக்கத்திலும், அமெரிக்கா-ரஷ்யா பனிப்போரிலும், இரண்டு உலகப் போருக்குப் பின்னரும் இஸ்லாமிய மக்கள் எரியும் சாம்பலிலிருந்து புனித புத்தகத்தின் மக்கள் என்கிற யூத மதத்தினையும், ஈரானின் சொராஸ்ட்டிரய மதத்தினையும், சீனாவின் கன்பூசியானிஸம், புத்தமதம், ஹிந்து மதத்தினை விடவும் ஆர்த்தெழுந்து கிளம்பிய பீனிக்ஸ் பறவையாக 150 கோடி மக்களாக இன்று உலகெங்கும் இருக்கின்றனரே! புpன் எப்படி வந்தது அவ்வளவு பெரிய மக்கள் தொகை இஸ்லாமிய மார்க்கத்திற்கு?கலிபா உமர்(ரலி)அவர்கள் படை ஜெரூசலத்தினைக் கி.பி.637ஆம் ஆண்டில் கைப்பற்றிய பின்னர் உமர் அவர்களே நேரடியாக அங்கே வருகை தந்தார்கள். அப்போது இஸ்லாமிய படைகள் கட்டுக்; கோப்பாக கடமை, கண்ணியம் காத்து எந்தவித கொலை, கொள்ளை, சூறையாடுதலில் ஈடுபடவில்லை. உமர் அவர்கள் ஜெரூசலத்தின் கிறித்துவ தலைமைக் குருக்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில், ‘தேவாலயம் இடிப்பதோ, அதனைக் கைப்பற்றுவதோ கூடாது, அல்லது தேவாலயப் பொருட்கள் சூறையாடக்கூடாது, அங்குள்ள மக்களை கட்டாய மதமாற்றம் செய்ய கொடுமை செய்யக்கூடாது’ என்பதாகும்.அது மட்டுமா? ரோமானியர் ஆட்சியின் கீழ் பாழடிக்கப்பட்ட யூதர்கள் ஆலயம், இஸ்லாய மார்க்கத்திற்கும் புனித சின்னமாக இருப்பதால் அந்த ஆலயம் சீரமைக்கப்பட்டு 500 ஆண்டுகளுக்குப் பின்பு முதல்தடவையாக யூதர்கள் வழிபட உமர் அவர்கள் மத சகிப்புத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்கள் என்றும் வரலாறு கூறுகின்றது.அதற்கு நேர்மாறாக இஸ்லாமியரியடமிருந்து ஜெரூசலத்தினைக் கைப்பற்றப் புறப்பட்ட கிறித்துவ சிலுவைப் படையினர் செய்த அட்டூழியங்கள் சொல்ல வார்த்தையில்லையே என்றே கூறலாம். சுpல மாதங்களுக்கு முன்பு ஒரு சகோதரர் சிலுவைப் போராட்டங்கள் பற்றி தான் தெரிந்து கொள்ள யாரும் விளக்குவார்களா என்று சமுதாய வெப்பில் கேட்டிருந்தார். ஆகவே அனைத்து சகோதரர்களும் தெரிந்து கொள்வது இந்தத்தருணத்தின் சரியாக இருக்கும் என நம்புகிறேன். ரோமப் போப்பாண்டவர் இரண்டாம் அர்பன் கி.பி. 1095 உத்திரவிற்கிணங்க ஜெரூசலத்தின கைப்பற்றியபோது முஸ்லிம் படைகளுடன் யூதர்களும் கிறித்துவர்களுக்கு எதிராக போரிட்டார்கள் என்றால் முஸ்லிம்கள் எந்தளவிற்கு வேற்று மதத்தினரை பெருந்தன்மையுடன் நடத்தினார்கள் என்பது கீழ்க்கண்ட சம்பவங்கள் மூலம் புலனாகவும் என நம்புகிறேன்.ஜெரூசலத்தினை 1099ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ந்தேதி கைப்பற்றி அங்கிருந்த ஆண், பெண், குழந்தைகள், முதியோர் என்று பாராது 60,000 பேர்களை கொன்று குவித்தனர். கத்தோலிக்க என்சைக்கிலோ பீடியாவில்(அகராதி), ‘கிறித்துவர்கள் ஜெரூசலத்தில் எல்லாப் பக்கத்pலிருந்தும் நுழைந்து அங்குள்ள மக்களை வயது வித்தியாசமில்லாது கொன்றனர்’ என்று சொல்கிறது.குருசேடில் பங்குபெற்ற, சார்ட்டரைச் சார்ந்த ஒரு கிறித்துவ வீரர், புல்ச்சர் எழுதிய கடிதத்தில், ‘நீங்கள் ஜெரூசலத்தில் கிறித்துவ படைகள் நுழையும் சமயத்தில் இருந்திருந்தால் உங்களுடைய கனுக்காலளவிற்க அங்குள்ள மக்களின் ரத்தம் தோய்ந்திருக்கும்’என்கிறார். இஸ்லாமியர் கி.பி.637ஆம் ஆண்டில் ஜெரூசலத்தில் வெற்றியுடன் நுழைந்து, போர்க் கைதிகளை மதித்து, வேற்று மதத்தினரையும் கண்ணியத்துடன் நடத்தினார்கள் என்று விளங்கவில்லையா? ஆனால் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும், லிபியாவிலும் மேற்கத்திய படைகள் குண்டு மாரி பொழிந்த போது அப்பாவி மக்கள் கொல்லப்படவில்லையா? 31.3.2011ந்தேதி ஆப்கான் ஜனாதிபதி கர்சாய் கூட வெறுத்துப்போய் கீழ்வாறு கூறியிருப்பதாக செய்திகள் சொல்கின்றன.“கடந்த மூன்று வருடங்களில் அமெரிக்கா கூட்டுப் படையினர் அப்பாவி மக்களை காட்டுமிரான்டித்தனமாக கொல்கிறது”. அவர் சொன்னது கண்கெட்டதும் சூரிய நமஸ்காரம் செய்வது போல உங்களுக்குத் தோனவில்லையா?இரண்டாம் சிலுவை யுத்தத்தில் இஸ்லாமிய கமாண்டர், சலாவுதீன் முஸ்லிம் படைகளை ஒன்று திரட்டி ஆக்ரோசமாக போரிட்டு ஜெரூசலத்தினை மீட்டார். அப்போது கூட கிறித்துவ தேவாலயத்திற்கோ அல்லது கிறித்துவ மக்களுக்கோ எந்தவித சேதமோ, உயிரிழைப்போ இல்லையே! ஆனால் ஈராக் போரில் புனிதமாக கருதும் கர்பலா கூட குண்டு வீச்சிலிருந்து தப்பபில்லையே அது ஏன்?அதன் பின்பு மூன்றாம் ஜெரூசலத்தினைக் கைப்பற்ற கிறித்துவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. அங்கே போகும் வழியில் இங்கிலாந்து அரசர் ரிச்சர்டு பைசான்டியன் சாம்ராஜ்யத்திருந்த ஏக்கர் என்ற இடத்தினை முற்றுகையிட்டது. அங்கிருந்த முஸ்லிம்களைப் பார்த்து , ‘நீங்கள் சரணடைந்தால் உங்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும்’ என்றார். அந்த ஏமாற்றுப் பேச்சினைக் கேட்டு முஸ்லிம்கள் சரணடைந்தார்கள். ஆனால் அந்த ரத்த பசி கொண்ட ரிச்சர்டின் படையினர் அனைத்து முஸ்லிம்களையும் கொன்று குவித்தனர். அதன் பின்பு ஜெரூசல முற்றுகையினை முஸ்லிம்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். இருந்தாலும் முஸ்லிம் கமாண்டர் பெரிய மனதுடன் ஜெரூசலத்தில் கிறித்துவர்கள் புனித யாத்திரை செல்ல அனுமதியளித்தார்.நான்காவது சிலுவை யுத்தத்தில் கிறித்துவர்களின் கோபம் கிரேக்க தேசத்தின் பைசான்டின் ஆட்சியாளர்கள் மீது திரும்பி அவர்களின் தலைநகரான கான்ஸ்ட்டான்நோபிளை சூறையாடினார்கள். அந்த யுத்தம் தான் கிழக்கே உள்ள கிரேக்க ஆர்த்தோடக்ஸ் கிறித்துவர்களுக்கும், மேற்கே உள்ள ரோமன் கத்தோலிக்க கிறித்துவர்களுக்கும் குரோதத்தின ஏற்படுத்தியதின மூலம் கண்ணியமான முஸ்லிம்களுக்கு வெற்றியினைத் தேடித்தந்தது. 2001ஆம் ஆண்டு போப் ஜான்பால் ருமேனியா நாட்டிற்கு வருகை தந்தபோது நான்காம் சிலுவை யுத்தத்தில் கிரேக்க நாட்டின் கான்ஸ்ட்டாண்டினநோபிலில் செய்த அட்டூழியங்களுக்கு வருத்தம் தெரிவித்தார் என்பதிலிருந்து கிறித்துவர்கள் எவ்வளவு கொடுமையில் மற்ற சமூகத்தினரிடம் ஈடுபட்டிருப்பார்கள் என்று புரியவில்லையா? ஆகவே தான் இஸ்லாம் இல்லையென்றால் மேற்கத்திய ரோமன் கல்தோலிக கிறித்துவர்களுக்கும், கிழக்கே இருக்கும் ஆர்த்தோடக்ஸ் கிறித்துவர்களுக்கும் போர்கள் ஏற்பட்டு பல நாசவேலைகளில் ஈடுபட்டிருப்பார்கள் என்பது உலக வரலாறாக தெரியவில்லையா?2008ஆம் ஆண்டு நடந்த அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் ஒரு முஸ்லிம் தகப்பனாருக்கு மகனாராக பிறந்தார் ஓபாமா என்பதிற்காக குடியரசு கட்சியின் வேட்பாளரான ஜான் மெக்கெய்ன் ஆதரவு பாதிரியார் ராட் பாஸ்லே, ‘கிறிஸ்டோபர் கொலம்பஸ் 1492 ஆம் ஆண்டு தன் உலகப் பயணத்தினை பல நாடுகளை கண்டறிய புறப்பட்டார் என்பதோடு முஸ்லிம்கள் இருக்கும் இடங்களைக் கணடறிந்து அவர்களை தோற்கடிக்கவே தனது பயணத்தினை மேற்கொண்டார்’ என சொன்னது எவ்வளவு பெரிய குரோத மனப்பான்மை முஸ்லிம்கள் மீது அவர் மனதில் இருந்தது என்பது தெரிகிறதல்லவா?ஐரோப்பிய முஸ்லிம்களும் மதசார்பற்ற நிலையும்: பிரான்ஸ் நாட்டிலே கடுமையான மத சார்பற்ற கொள்கையினை கடைப்பிடிப்பதால் பெரிய மைனாரிட்டியாக வாழும் முஸ்லிம்களுடன் மோதல் ஏற்படுகின்றது. உதாரணத்திற்கு தனது அங்க அவையங்களை மறைக்கவும், அன்னிய ஆண்களின் கழுகுப் பார்வையிலிருந்து தங்களைப் பாது காக்கவும் தான் ஹிஜாபினை பெண்கள் அணிகிறார். ஆனால் அதனை அணியக்கூடாது என்ற சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்ன நியாயம்? அதனை எல்லா பிரான்ஸ் மக்களும் ஆதரிக்கிறார்களா என்றால் இல்லையே! அங்குள்ள தலைமை கிறித்துவ குரு(கார்டினல்) ஜீன் லூயிஸ் சொல்லும்போது, பலமொழி, இனம், நாகரீகம், பண்பாடு என்று வாழும் உலகத்தில் தனது இறைவனின் கட்டளைக்கு இடம் கொடுத்து அதனை முஸ்லிம்கள் செயலாற்றி வருகிறார்கள். அதனில் ஏன் தலையிட வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். அது போல டேனிஸ் நாட்டு கேலி சித்திரக்காரர் ஒருவர் ரஸூலல்லா பற்றி ஒரு கேலி சித்திரம் வெளியிட்டதால் இஸ்லாமிய உலகில் கொந்தளிப்பு ஏற்பட்டது நினைவிருக்கும். அதற்கு மதசார்பற்ற மற்ற டேனிஸ் மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனரல்லவா? ஆகவே இஸ்லாத்தினை சிலர் எதிர்ப்பதின் மூலம் இஸ்லாத்தின் முக்கியத்தினை அவர்களும் உணர்ந்திருக்கிறார்கள் என்பதினைத் தானே இது எடுத்துக் காட்டுகிறது.ரஷ்யாவில் மிகப்பெரிய மைனாரிட்டியாக இஸ்லாமியர் உள்ளனர். அவர்கள் அனைவரும் கி.பி. பதிமூன்றாம் ஆண்டில் படையெடுத்த துருக்கிய இனத்தவரின் வாரிசுகள். கம்யூனிஸ புரட்சிக்குப் பின்னர் இஸ்லாமியருக்கு ஒரு சோதனை காலமாக மாறியது. கம்யூனிஸ முக்கிய தலைவரான முஸ்லிம் மார்க்கத்தினைச் சார்ந்த சுல்த்தான் கலிவி முஸ்லிம்கள் கம்யூனிஸ்ட் என்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்த முயன்றார். ஆனால் அப்போதிருந்து சர்வாதிகாரி ஸ்டாலின் அதனை எற்காது முஸ்லிம்களுக்கு கம்யூனி;ட் கட்சியிலும், அரசிலும் முக்கிய பங்கு கொடுப்பது நின்று விட்டது. அதன் தொடர்கதை தான் புடின் ஆட்சி பீடத்தில் ஏறியதும் சுயாட்சி உரிமை கேட்ட செசன்யா முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடந்தது. ரஷ்யா ஒரு முக்கிய வீட்டோ உரிமை கொண்ட ஐ.நா உறுப்பினர். ஈராக் அந்த நாட்டுடன் ராணுவ ஒப்பந்தமும் செய்திருந்தது. ஆனால் ஐ.நா. சபையில் ஈராக் மீது தடைகொண்டு வரும்போதோ அல்லது லிபியா மீது தடைகொண்டு வந்து அமெரிக்கா-மேற்கத்திய நாடுகள் நடவடிக்கை எடுக்கும் போதோ ஏன் அந்த வீட்டோ பவரை சீனாவுடன் சேர்ந்து உபயோகித்து தடுக்கவில்லையே ஏன் என்று முஸ்லிம்கள் மனதில் எழாமலில்லையே!! வெள்ளம் தலைக்கு மேலே போன பின்பு இப்போதுதான் ரஷ்யாவின் வெளி விவகார மந்திரி செர்கு லாரன்ஸ் லிபியாவின் உள் விவகாரத்தினை அந்த நாட்டு மக்கள் தான தீர்த்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக வெளிநாட்டவர் தலையிடுவது சரியல்ல என்று ஒப்புக்குச் சப்பைக் கட்டியுள்ளார். ஆகவே இஸ்லாமியர் உலகில் யார் உண்மையானர் இப்போதாவது தெரிந்து கொண்டால் நல்லது தானே! இஸ்லாமும்-இந்தியாவும்: 1) முஸ்லிம்கள் வியாபாரிகளாக இந்திhவின் தெற்குப் பகுதியில் குடியேறினார்கள். கி.பி. 612ஆம் ஆண்டு ரஸூலல்லா உயிருடன் இருக்கும் போது கேரளாவில் கொடுங்களூரில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. அது இன்றும் அடையாளச் சின்னமாக உள்ளது.2) வுட இந்தியாவில் மத்திய ஆசியாவிலிருந்து படையெடுத்து வந்தவர்கள் குடியேறினார்கள்.அவ்வாறு வந்த முஸ்லிம்கள் இஸ்லாமிய நாகரீகத்தினை, ஹிந்து நாகரீகத்துடள் இணைத்து ஒரு பெரிய சாம்ராஜ்யத்தினை ஏற்படுத்தினார்கள் என்ற பெருமை நிலைத்து இருக்கிறதல்லவா? ஆனால் சுதந்திர போராட்ட காலங்களில் தலைவர்களிடையே ஏற்பட்ட கருத்து பேறுபாடினை அறிந்த ஆங்கிலேய அரசு தனது பிரித்தாலும் கொள்கையின் மூலம் தூபம் போட்டு இந்தியாவின் துணை கண்டம் இரண்டு நாடாக 1947ஆம் ஆண்டு பிரிந்தது.இஸ்லாமியர் இந்தியாவில் காலடி எடுத்து வைக்காவிடில் இணைந்த முகலாய கலாட்சாரம் வெளி உலகிற்குத் தெரிந்திராது. உதாரணத்திற்கு உலகில் ஏழு அதிசயங்களில் முதலாவதான தாஜ் மஹால் உலக கட்டிடக்கலைக்கு அரிய பொக்கிஷமாக உருவாகியிருக்காது..புல மன்னர்கள், குரு நில மன்னர்கள், ஜமீன்கள், சமஸ்தானங்கள் ஆகிய இந்திய அரசியல் அமைப்பில் பிரிந்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மாண்டதினை தடுத்து ஒரு முகலாய சாம்ராஜ்யம் அக்பர் காலத்தில் அமைந்திருக்காது.அரேபிய, பாரசீக, துருக்கி, ஹிந்துஸ்தானியினை இணைத்து இந்தியாவில் ஒரு புது மொழியான உருது மொழி உருவாகியிராது.புல உயர் ஜாதியினரால் ஒதுக்கப்பட்டு, கீழ்த்தரமாக சமுதாயத்தில் நடத்தப்பட்ட தலித்களுக்கு சமத்துவம், சகோதர உரிமை வழங்கியது இஸ்லாம் தானே. அதனால் தான் இன்று கூட இந்தியாவில் இஸ்லாமியர் ஆட்சியில்லாவிட்டாலும் தலித் மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தினை தழுவுகிறார்கள். இந்தியாவின் வானசாஸ்திரம், கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்குதல் போன்ற கணித கலையினை உலக மக்களுக்கு இஸ்லாம் எடுத்துச் சொல்லவில்லையா? ஆகவே இஸ்லாம் தான் இந்தியாவிற்கு வெளி உலகில் பெரிய அளவு முகவரியினைக் காட்டியுள்ளது என்பதினை யாரும் மறுக்க முடியாது.இஸ்லாமும்-சீனாவும்: சீனாவில் இன்;;று 14 சதவீத பெரிய மைனாரிட்டி சமூகமாக இஸ்லாமியர் வாழ்கின்றனர். கலிபா உமர்(ரலி அவர்கள் காலத்தில், ‘சீனம் சென்றும் சேர்க்க நல்லறிவை’ என்ற ரஸூலல்லாவின் வாக்குப்படி சீனாவில் இஸ்லாம் காலடி வைத்தது. அப்போது சீனாவினை ஆட்சி செய்த தேங்க் இன மன்னர் கேன்டன் என்ற இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்ட அனுமதியளித்தார். அந்தப்பள்ளி இன்றும் உள்ளது. இஸ்லாமிய மார்க்கம் சீனாவின் கன்பூசிய ஓரிறைக் கொள்கைக்கு ஒத்துப்போனதால் இஸ்லாமியர்களுக்கென்று தனி குடியமைப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். ஆகவே அரேபிய, பாரசீக மக்கள் பெரும் அளவில் அந்த குடியிருப்பிற்கு வந்தார்கள். அவர்களை ஹூய் இனத்தவர் என அழைக்கப்பட்டார்கள். அவர்கள் சீன கலாட்சாரத்துடன் இஸ்லாமிய கோட்பாடுகளுடன் நடந்து கொண்டனர். ஆகவே அவர்களை சீனர்கள் ஆதரவுடன் நடத்தினார்கள். மற்றவர்கள் மேற்குப் பகுதியில் வசிக்கும் விகூர் இனத்தவர். அவர்கள் பூர்வீகம் துருக்கியாகும். அவர்கள் சீனக் கலாட்சாரத்தில் சேராமல் தனி பண்பாடுகளுடன் நடந்து கொண்டனர். ஆகவே சீனர்கள் அவர்களை எப்போதுமே சந்தேகக் கண்ணுடன் நோக்கினார்கள். இஸ்லாமியர் கப்பல் வணிகக்கலையில் சிறந்து விளங்கியதால் அவர்கள் மூலம் தங்கள் பொருட்களை மேலை நாடுகளுக்கு அனுப்பவும், வெளிநாடுகளிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்யவும் கற்றுக் கொண்டார்கள். 13ஆம் நூற்றாண்டில் சாங் இன ஆட்சியில் துறைமுக டைரக்டர் ஜெனரலாக ஒரு முஸ்லிம் இருந்திருக்கிறார். தங்கள் பொருட்களை உள்ளூர் மார்க்கெட்டிலேயே வாணிபம் செய்த சீனர்கள் இஸ்லாமியர் உதவியால் வெளி நாடுகளில் தங்கள் வர்த்தக உறவை ஏற்படுத்தினார்கள். அது மட்டுமல்ல, சீனாவில் அறிவுப் புரட்சியினை ஏற்படுத்தியதே இஸ்லாமியர் என்கிறது வரலாறு. சீன மொழியில் இஸ்லாமிய படைப்புகள் ஏற்பட்டன. சீன மொழியில் முதன் முதலில் யூசுப் மா டிக்ஸின் என்ற சீனர் அரேபிய மொழியிலிருந்து திருக்குர்ஆனை மொழி பெயர்த்தார். அறுவறுப்பான ஜந்துக்களை உணவாக உண்ட சீனர்களுக்க ஹலால் உணவினை உண்ணும் பழக்கத்தினை கற்றுத்தந்தனர். நான் 1979ஆம் ஆண்டு என் தந்தையினை மலேசியாவில் காண செல்லும் வழியில் சிங்கப்பூர் சென்றேன். அங்கே ஒரு சீன ஹோட்டலில் நாம் விஷ ஜந்து எனச் சொல்லும் நட்டுவாக்கிளி என்ற கருந்தேல்களை கூண்டுக்குள் வைத்திருந்தனர். சிங்கப்பூரில் வாழ்ந்த எனது கல்லூரி தோழன் சாலி மரைக்கானிடம் அது எதற்காக வைத்திருக்கிறார்கள் என்றேன். அவன் சீனர்கள் அவைகளை விரும்பி சாப்பிடுவதாகச் சொன்னார். அவைகளை தமிழ்நாடுக்காரர்கள் கொண்டு வந்து விற்பதாகவும் சொன்னார். ஆனால் 2001ஆம் ஆண்டு நான் அமெரிக்காவில் உள்ள சன்னிவேலுக்குச் செல்லும்போது அங்கே ஒரு சீன ஹோட்டலுக்கு எனது மருமகன் கூட்டிச்சென்றார். அங்கே என்ன ஆச்சரியம் காபாத்துல்லா சரீபு, மதினா படங்கள், ஆயத்துல் குர்சி, அல்ஹம்து சூரா ஆகியவை பெரிய அளவில் மாட்டப்பட்டு ஹலால் உணவு என்றும் எழுதப்பட்டிருந்தது. அந்த ஹோட்டலில் வேலை பார்ப்பவர் அத்தனை பேர்களம் சீன முஸ்லிம்களே. அந்த ஹோட்டலில் அமெரிக்கர்களும் விரும்பி வந்து சாப்பிடுகிறார்கள். இது எதனைக் காட்டுகிறது என்றால் இஸ்லாம் உணவில் ஒரு புரட்சி ஏற்படுத்தி ஹலால்-ஹராம் என்ற வேறுபாடுகளையும் சீன மக்களுக்குப் போதித்து அவர்களை மனிதர்களாக ஆக்கியுள்ளது ஆச்சரியம்தானே!இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்காவின் கை ஓங்கியது. அதன் விளைவுதான் உலகில் பல கோடியிலிருந்த யூதர்களைக் கொண்டு வந்து பாலஸ்தீனர் நாட்டில் குடியேற்றி தினமும் அங்கே இஸ்லாமியர் மத்தியில் பதட்டம் எற்படுகிறது. இஸ்ரேயிலில் யூதர்கள் குடியேற்றியதிற்கு கூட்டுப்படை நாடுகள் சொன்ன காரணம் என்ன தெரியுமா? யூதர்கள் ‘ஹாலோகாஸ்ட்டில்’ பாதிக்கப்பட்டவர்கள் என்று அனுதாபம் காட்டியது. ஆனால் யூதர்களை இஸ்லாமியரா வேட்டையாடினார்கள் இல்லையே! ஐரோப்பிய ஜெர்மானிய ஹிட்லர் தானே வேட்டையாடியதாக கூறப்பட்டது. ஆகவே அங்கு சென்று அவர்களை குடியமர்த்தியிருக்கலாமே என்று உலக இஸ்லாமியரும், தினந்தோறும் அப்பாவி பாலஸ்தீனர் படும்பாட்டை பார்த்த நடுநிலையாளர்களும் கேட்காமலில்லைN!ய!இஸ்லாமியர் இல்லையென்றால் உலகில் பல்வேறு மத, இன போராளிகளுடன் அமெரிக்காக் கூட்டுப்படை போர் தொடுக்க நேர்ந்திருக்கும். ஏனென்றால் தனக்கு பிடிக்காத அரசுகளை பணமும், பொருளும், ஆயுதமும் கொடுத்து கவிழ்ப்பதும், அதையும் மீறிப் போனால் மக்களைக் காக்கிறேன், ஜனநாயகத்தினை நிலை நிறுத்துகிறேன் என்ற போர்வையில்; தனது ஆயுத பலத்தினை காட்டுவதுமாக இருக்கிறது. அதற்கு உதாரணங்களை வருடங்கள்-பாதிக்கப்பட்ட நாடுகள் வாரியாக கீழே பார்க்கலாம்:கோரியா(1950)இரான்(1953)குவாட்டமாலா(1954)காஸ்டா ரிகா(1955)சிரியா(1957)இந்தோனேசியா(1958)டோமனிக் ரெபப்ளிக்(1960)பெரு(1960)ஈக்குவாடர்(1960)காங்கோ(1960)வியட்நாம்(1961-1973)கீயூபா(1961)பிரேசில்(1964)சிலி(1972)அங்கோலா(1975)நிராகுவே(1980)லெபனான்(1982)கிரேடனடா(1983)பனாமா(1989)ஈராக்(1991)(2003)சோமாலி(1993)போஸ்னியா(1994)கொசாவா(1999)ஆப்கானிஸ்தான்(2001) கடைசியாக லிபியா(2011).மேற்கோள் காட்டிய பட்டியல்படி இஸ்லாமியர் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகள் அமெரிக்கா ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது விளங்குகிறது தானே. சுமிப காலங்களில் இஸ்லாமியர் மனதில் மிகந்த கசப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆகவே அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் கடந்த கால இஸ்லாமிய ஆட்சியின் சகிப்புத்தன்னை, மற்றவர்களை மதிக்கும் குணம், மக்களை மாக்களாக கருதாது சகோதர்களாக கருதும் மனப்பான்மை, சாந்தி, சமாதானம் போன்று நடந்து கொண்டு போருக்கும், ஆட்சிகளைக் கவிழ்க்கும் முயற்சிகளுக்கும், தனிமனித உரிமை மீறலுக்கும் செலவிடும் பணத்தினை தங்கள் நாடுகளுக்கும், இல்லாத நாடுகளின் கல்வி, சுகாதாரம், சுற்றுப்புற சூழல், வேலைவாய்ப்பு, தொழிற்சாலை, குடிதண்ணீர், ரோடு வசதிபோன்றவைகளுக்கு செலவிட்டால் எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு நல் வாழ்வினைக் கொடுப்பதோடு அனைத்து தேச மக்களும் வாயார வாழ்த்துவார்கள் என்றால் சரிதானே சொந்தங்களே!
நன்றி:www.ilaiyangudi.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக