Subscribe:

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

சீமானும்... மோடியும்...









இயக்குனர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...


தாயக விடுதலை போராட்டத்தில் நசுக்கப்பட்டு முள்வேலி முகாம்களில்


சித்திரவதைக்குள்ளாகி வரும் நமது தமிழீழ சொந்தங்களின் உரிமைக்கு மறுமலர்ச்சிக்கு உரக்க குரல்கொடுத்து பரிசாக இரண்டு தேசபாதுகாப்பு சட்ட சிறைகளை பெற்றவர்... குறுகிய காலத்தில் தமிழக மக்களின் குறிப்பாக இளைஞர்களின் அபிமானத்தை பெற்றவர்.சீமான் வருகைக்கு பிறகு தமிழ் தேசிய அரசியல் முழக்கம் புத்துயிர் பெற்றது என்பதை மறுக்க இயலாது.



மாற்றத்தை விரும்பிய மக்களும் தமிழுனர்வாளர்களும் சீமானை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்றார்கள்... அவரது வீரியமிக்க உரைகள் உணர்வற்றவனையும் உசுப்பேத்தியது. அவர் செல்கிற இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவரைசுற்றி எப்போதுமே உணர்வுமிக்க இளையர் பட்டாளம் அணிவகுத்தது.



பகுத்தறிவை தமிழனுக்கு போதித்த தந்தை பெரியாரின் பேரன் நான் என சீமான் முழங்கியதை தமிழ் சமூகம் ரசித்தது. தமிழர்கள் சீமானிடம் ஒரு மாற்று அரசியலை எதிர்பார்த்தார்கள் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சீமானின் அரசியலுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் ஏற்பட்டது.


சீமானின் நாம் தமிழர் கட்சி புதிய எழுச்சியை ஏற்படுத்தும் என நடுநிலையாளர்கள் காத்திருந்தனர்.ஆனால் சீமான் ஈழதமிழர்களுக்கு துரோகம் விளைத்த காங்கிரசையும் அதனுடன் கூட்டணிகொண்டுள்ளதிமுகவையும் கருவறுக்க அதிமுக கூட்டணிக்கு ஆதரவு நிலையென அறிவித்தார். அப்போதே தமிழுனர்வாளர்களும் மாற்றத்தை விரும்பிய மக்களும் சீமானின் இந்த அரசியல் சறுக்கலை கண்டு கவலைகொண்டனர். திமுகவிற்கு மாற்றாக அதிமுக என்கிற சீமானின் கோஷம் மக்களிடம் பெரும் விவாதத்தையே விதைத்தது.



வலியபோய் சீமான் அதிமுக அணிக்கு ஆதரவு என அறிவித்தும் அதிமுக அவரை சீண்டவில்லை என்பது ஊர் அறியாத ரகசியமல்ல... சீமான் அதிமுக ஆதரவு நிலையெடுக்க மிகப்பெரிய தூண்டுகோலாக இருந்த மதிமுக அதிமுகவின் தலைமையால் உதாசீனபடுத்தப்பட்டது. மதிமுக தேர்தலில் போட்டியிடும் நிலையையே தவிர்க்க வேண்டியதாகிவிட்டது. உடணடியாக சீமான் சொன்னார் நாங்கள் அதிமுகவிற்கு ஒட்டுகேட்கபோவதில்லை திமுக காங்கிரஸ் அணிக்கு எதிராவே ஒட்டுகேட்கபோகிறோம். இந்த வார்த்தைகள்


ஆரம்ப கல்வி பயிலும் ஐந்துவயது பிள்ளைக்கும் நகைப்பைத்தான் தந்தது.



அதன் பிறகு காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளில் மட்டுமே பரப்புரை செய்து காங்கிரசை நாம் தமிழர் கட்சி வீழ்த்தும் என்றார். அதன்படி தேர்தல் பரப்புரையும் மேற்கொண்டார். அவரது ஈழதமிழ் மக்களின் நிலைகுறித்த


விளக்கமும் தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் பட்டுவரும் அவலமும் நிச்சயமாக மக்களை காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்க தூண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை...


தேர்தல் பரப்புரையின் இறுதிகட்டத்தில் பெரியாரின் பேரன் என தன்னை அடையாளபடுத்திய சீமான் ஈழ மக்களின் அணைத்து துயரங்களுக்கும் காரணமான காங்கிரசையும் அதன் கூட்டணியையும் வீழ்த்தியே தீருவேன் என வீரம் பேசிய சீமான் பரப்புரையினூடே நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தியா நாட்டின் அசிங்க அடையாளமான நரேந்திரமோடியை வானளாவ புகழ்ந்துள்ளார். ஏப்ரல் 24 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் தனது நேர்காணலிலும் அவர் மோடியை பாராட்ட தவறவில்லை. கடந்த சில காலமாக தமிழக முஸ்லிம் அமைப்புகளின் நிகழ்வுகளில் கலந்துகொண்டு குஜராத் கலவரத்தையும் அங்கு முஸ்லிம்கள் கருவருக்கப்பட்டதையும் பேசிவந்த சீமான் திடீரென மோடிக்கு பாசவலை வீசுவதுதான் நமக்கு சந்தேகத்தை வலுக்க செய்கிறது.



நரேந்திரமோடி மிருகங்களைவிட கேவலமான பிறவி என்பதை நாடே அறியும். அவன் தாய் பாலுக்குப் பதிலாக மனித மாமிசத்தை தின்று வளந்தவன் என்பதை குஜராத்தில் நடந்த கலவரங்களின்போது மோடி திடமாகவே பதிவு செய்தான்.



மோடியின் ஆட்சியில் குஜராத் பலவகைகளிலும் முன்னேறி உள்ளதாம் இருக்கலாம் ஆனால் அந்த முன்னேற்றத்தில் அடித்தளத்தில் முஸ்லிம்கள் கொன்று புதைக்கப்பட்ட உண்மையை சீமானுக்கு யாரும் சொல்லவில்லையா...?



சாயிராஹ் என்கிற நிறைமாத கர்பிணியான என் சகோதரி மோடியின் வகையறாக்களால் ஈவிரக்கம் இல்லாமல் கற்பழிக்கப்பட்டு அவளது வயிற்றைகீறி உள்ளே உயிர்வாழ்ந்த சிசுவை வெளியில் எடுத்து எரியும் நெருப்பில் எரிந்து மகிழ்ந்தார்களே... அந்த நயவஞ்சகன் மோடியையா பெரியாரின் பேரன் புகழ்வது...!!!



இந்திய நாட்டின் உச்சநீதிமன்றம் மோடியை நவீன நீரோ மன்னன் என வர்ணித்ததே ரோமாபுரி நகரம் பற்றி எரிந்துகொண்டிருந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துகொண்டிருந்தானாம் அந்த வேலையைத்தான் மோடி


குஜராத்தில் மூவாயிரம் அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டபோது பல லட்சகணக்கான முஸ்லிம்களின் சொத்துகள் சூறையாடபட்டபோது செய்துகொண்டிருந்தான் என இந்திய உச்சநீதிமன்றம் சொன்னது அந்த மோடியைத்தான்...




இராமன் என்கிற ஆடு மாடுகளை மேய்ப்பதை தொழிலாக கொண்ட தலித் சமூக சகோதரன் சற்று இளைப்பாற ஒரு கூரைகொட்டகையில் அமர்ந்தான் அந்த கொட்டகை மேல்சாதிகாரனுக்கு சொந்தமானது என்கிற ஒரே காரணத்திற்க்காக சகோதரன் இராமன் கட்டிவைக்கப்பட்டு கல்லால் அடித்துக்கொல்லப்பட்டதும் குஜராத்தில்தான் இதே மோடியின் ஆட்சிகாலத்தில்தான் இப்படியாக மக்கள் நேசிக்கும் மோடியைத்தான்


இலங்கையில் புலிகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட துயரங்களுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் என சொன்ன சீமான் புகழ்ந்துள்ளார்.



சீமான் அவர்களே ஏன் இந்த கொள்கை பின்னடைவு... ஏன் இந்த முரண்பாடு... ராஜபக்சே எந்தளவிற்கு கொடுமைகாரனோ அதைவிட ஆயிரம் மடங்கு கொடுமைகாரன் நரேந்திரமோடி அவனை தவிர உதாரணம் காட்ட உங்களுக்கு வேறு முதலமைச்சரே கிடைக்கவில்லையா...?




ஒரு வாதத்திற்கு நரேந்திரமோடியை மண்ணை நேசிக்கும் தலைவன் என்பதை ஏற்றுகொள்வதாக வைத்துகொண்டு உங்களிடம் ஒன்றை கேட்கிறேன் முஸ்லிம்களை வேரறுத்து மோடி மண்ணையும் மக்களையும் நேசிக்கும் தலைவன் என்றால்... எங்கே சிங்கள மக்களின் உரிமைகள் பங்கிடபட்டுவிடுமோ என அஞ்சி நமது தமிழ் சொந்தங்களை வெடிகுண்டுகளின் கோரபசிக்கு இரையாக்கி வெற்றிகளிப்பில் திளைத்துள்ள


அயோக்கியன் ராஜபக்சேவை சிங்கள மண்ணையும் சிங்கள மக்களையும் நேசிக்கும் மகத்தான தலைவன் என யாரும் சொனால் பொங்கிவரும் உங்கள் ரத்தம் சுண்டிவிடுமா...?



சீமான் அவர்களே உங்கள் பின்னால் எந்த சுயநல சிந்தனையும் இல்லாமல் தமிழர்களின் வாழ்வியல் மாற்றத்திற்காக அணிவகுக்கும் உங்கள் அன்பு நாம் தமிழர்களுக்கு நீங்கள் எந்த பாதையை காட்டப் போகிறீர்கள்... உங்களிடம் இருந்து வீரியமான தமிழ் தேசியத்தை அரசியல் மாற்றுகளத்தை எதிர்பார்க்கும் தமிழர்களில் நானும் ஒருவன்...




நரேந்திரமோடி என்கிற ஒற்றைவரி நீங்கள் தமிழனுக்காக சிறைபட்டு தமிழர்களின் மனதில் அமர்ந்திருந்த சிம்மாசனத்தை அசைக்கவே செய்துள்ளது...












கருத்துகள் இல்லை: