Subscribe:

புதன், 9 மே, 2012

சகோதரர் சுவைர் மீரான் அவர்களுக்கு...

அன்பிற்கினிய சமுதாய சொந்தங்களுக்கு இனிய ஸலாம்... துஆ...

நான் கீற்று இணையதளத்தில் எழுதி இருந்த "பள்ளிவாசல் இடிப்பும்... ராஜபக்சேவின் கொழுப்பும்"
என்கிற கட்டுரைக்கு மறுப்பளித்து ஜப்னா முஸ்லிம் {www.jefnamuslim.com} என்கிற இணையத்தின் 
வழியாக சகோதரர் சுவைர் மீரான் என்பவர் பதிவிட்டு இருக்கிறார்,,, அவரது பதிவில் 
புலிகள் இயக்கம் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திய இழப்ப்புகள் என்கிற பெயரில் என்னை கடுமையான 
வார்த்தைகளால் தாக்கி எழுதி இருக்கிறார்... 

தாக்கப்பட்டது இறைவனின் இல்லம்... ஒரு முஸ்லிமாக உலகில் எங்கு முஸ்லிம்களுக்கு அநீதி இலைக்கபட்டாளும் எம்மை போன்றோரின் இதயம் கனப்பது இயற்க்கை... அந்த அடிப்படையில் 
இலங்கையில் சிறுபான்மை இனமாக வாழக்கூடிய எம்மக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாவும் 
வாழவேண்டுமென நினைப்பது தவாறான செயலாக இருக்க முடியாது... தம்புள்ள பள்ளிவாசல் 
தாக்குதல் சம்பவத்திற்கு தமிழகத்தில் கண்டங்களை பதிவு செய்த அனைவரையும் நீலிக்கண்ணீர் 
வடிக்கும் முதலைகள் என்கிறார் சகோதரர்... தமிழகத்தில் இருக்கக்கூடிய இஸ்லாமிய இயக்கங்கள் 
ஆரம்பகாலங்களில் எத்துனை அடக்குமுறைகளை சந்தித்து அரசுகளின் பொய் வழக்குகளை சந்தித்து
சிறைவாசங்களை சந்தித்து இன்றைக்கு சமுதாய உரிமைகளுக்கு சட்டம் இயற்றப்படும் அவைகளிலும் தடம் பதித்துள்ளார்கள் என்பது எல்லாம் தெரிந்த கட்டுரையாளருக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை... அப்படிப்பட்ட போராளிகளை இவர் நீலிகண்ணீர் வடிக்கும் முதலைகள் என்கிறார்... 

நான் பெயர்தாங்கி முஸ்லிமா இல்லை பெயருக்குறிய முஸ்லிமா என்பதை பற்றிய ஆராச்சியிலும் ஈடுபட்டுள்ளார்... மகிழ்ச்சி... 

சகோதரா... உங்கள் நாட்டு அதிபரின் உருவபொம்மை எரிக்கபட்டதும் கொடி எரிக்கப்பட்டதும் உங்களுக்கு வருத்தமளிக்களாம் ஆனால் இடிக்கப்பட்டது நமது இறையவனின் இல்லம் அந்த சம்பவத்திற்கு முன்னாள் நீங்கள் குறிபிட்டுள்ள சம்பவங்கள் எமக்கு பெரிதாக தெரியவில்லை... 

புலிகளை ஒழிக்கிறோம் என்கிற பெயரில் அங்குள்ள தமிழர்களை முழுமையாக கொண்டோலித்த கொடுமை வேறு யாருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான் எம்மை போன்றவர்களின் விருப்பம்... 
உங்களுடைய வார்த்தைகளுக்கு முழுமையாக எம்மால் பதில் அழிக்க முடியும் ஆனால் அதில் எம் சமூகத்தின் மரியாதை அடங்கியுள்ளது... நீங்கள் எப்படி ஒரு நாட்டில் சிறுபான்மைகளாக வாழ்கிறீர்களோ அதேபோல்தான் நாங்களும் இந்திய நாட்டில் சிறுபன்மைகளாக வாழ்கிறோம் எண்ணூறு ஆண்டுகாலம் இந்நாட்டை ஆண்ட எம்மக்கள் இன்றைக்கும் அடிப்படை உரிமைகளுக்காக போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்... இந்நிலை எமது அண்டையில்  வாழக்கூடியவர்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான் எமது நோக்கம்... பழையவற்ற தோண்டிக் கொண்டிருந்தால் பலன் எதுவும் கிடைக்கபோவதில்லை... 

மேலும் சகோதரர் சுவைர் மீரான் என்னை புலிகளின் ஆதரவாளன் இல்லை இல்லை புலிகளின் இயக்கத்தை சார்ந்தவனாகவே அடையாளபடுத்திட முனைந்துள்ளார்... சகோதரா... நாங்கள் வாதிடுவது வாழ்க்கையை இழந்துவிட்ட தமிழ் மக்களுக்காக புலிகளுக்காக அல்ல என்பதை இதை போன்று இன்னும் ஆயிரமாயிரம் கட்டுரைகள் வெளியிட்டாலும் உங்களால் மறைக்கமுடியாது... 

நான் எனது கட்டுரையில் பல பொய்களை சொல்லியிருக்கிறேன் எனகுறிபிடும் சகோதரர் எனது கட்டுரையின் முழுமையான வடிவத்தை முழுதுமாக படிக்காமல் அவசரகோலத்தில் பதில் கொடுத்துள்ளார்... அதைபற்றிய கவலைகள் எமக்கில்லை... காரணம் இதை போன்று எவ்வளவோ விமர்சனங்களை கண்டவர்கள் நாங்கள்... 

இறுதியாக சகோதரருக்கு நான் சொல்லிகொள்வது தமிழகத்தில் நாங்கள் தமிழ் உறவுகளுடன் இணைந்து களமாடககூடிய இனிமையான காலமிது அதன்மூலமாக தமிழ் மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வலிமையான உறவை மேம்படுத்திட முனையும் எம்மை எந்த சக்திகளாலும் முடக்கிவிட முடியாது... உண்மையான நேர்மையான அனைத்து காரியங்களுக்கும் அல்லாஹு நிச்சயமாக வெற்றியை தருவான்... 

வஸ்ஸலாம் 
துஆக்களுடன்...
வேங்கை.சு.செ.இப்ராஹீம் 


1 கருத்து:

முகவை-எஸ் .எஸ்.அப்துல்லாஹ் சொன்னது…

ஸ்ரீலங்கா வரலாற்று நோக்கில் அங்கு வாழும் மக்கள் அரபுக்களின் வணிக நடவடிக்கைகள் மூலம் இஸ்லாத்தை ஏற்றனர். தமிழக முஸ்லிம்களுக்கும் அதே வரலாறுதான் என்றாலும் இந்திய தமிழர்களிடம் தமிழ் பண்பாடும் கலாச்சாரமும் இணைந்தே இருந்தது. லங்காவில் வாழும் முஸ்லிம்களிடம் அதை காண்பதற்கு இல்லை.
தமிழக முஸ்லிம்கள் இஸ்லாம் கூறும் சில தனித்துவ பண்புகளை பேணினாலும் பிற இனத்து மக்களை பேதம் பிரித்தது இல்லை.மாமன், மச்சான்,சித்தப்பன் என்றே இன்றளவும் உறவு கொண்டாடுகிறார்கள் என்றாலும் அவர்களுடன் திருமண சம்பந்தங்கள் கொண்டாடுவதில்லை.
தாய் நாட்டின் கலாச்சாரத்தை தமிழக முஸ்லிம்களைப்போல் லங்காவில் உள்ளதா?
சிங்கலவர்களுடனும் உறவு இல்லை.தமிழர்களிடமும் தொடர்பு இல்லை,அரசிடமும் மதிப்பு இல்லை.
எதிகாலத்தில் அங்கு இப்படி ஒரு சமுதாயம் இருந்தது என வரலாற்றிலே கூட காண முடியுமா என்பது சந்தேகம்.
அதை எண்ணித்தான் தமிழகத்திலே நாம் அவர்களுக்காக குரல் கொடுக்கின்றோம்.வரும்காலத்தில் லங்காவில் உள்ள மசூதிகள் எல்லாம் புத்த மடாலயங்களைஇடித்து உருவாக்கப்பட்டது என்று உங்களையெல்லாம் ராஜபக்சே
விரட்டினான் என்றால் சீனா செல்லமுடியாது,அரபுநாடுகளும்உங்களை அரவணைக்காது.தமிழகம்தான் வரவேண்டும்.இந்தியாவிற்கெதிரான சினாவின் சதிவிளையாட்டாக கூட இருக்கலாம்.
இதை முன்னுதாரம் காட்டி இந்தியாவில் உள்ள மசூதிகள் எல்லாம் இந்துகோயில்கள் மீது கட்டப்பட்டது என்று இந்துத்துவ தீவிவாதம் லங்கா பாளிவாசல் இடிப்பை முன்னுதாரம் காட்டுமே ?பிறநாடுகளில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் ,அவர்களின் வழிபாட்டு உரிமைக்கும் ஆபத்துவருமே ?எங்கு உலகில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டாலும் எங்கு மசூதிகள் இடிக்கப்பட்டாலும் குரல்கொடுப்போம் எங்கள் ஈமான் பலமானது,தடுமாற்றம் இல்லாதது நாளைய சமூகம் விடுதலையும்,அச்சமும் இன்றி வாழ இன்றே நாங்கள் வழிவகை செய்கிறோம் அதை சோரம் போகும் உங்களால் அல்ல எந்த சக்தியாலும் அது சைத்தான்கள் அல்லது அதன் தகப்பன் இபிலீசாலும் உடைக்க இயலாது. என்று உரக்க சொல்லிக்கொள்கிறோம்.