கண்ணியமும் சங்கையுமிகு சமுதாய சொந்தங்களே...
அனைவர் மீதும் ஏக இறையவனின் சாந்தியும் சமாதானமும் பொழியபடட்டுமாக...
தமிழகத்தில் பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள்
சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுவது அனைவரும் அறிந்ததே...
இவர்களில் பலர் கடுமையான நோய்களுக்கு ஆளாகி வேதனைபட்டுவருவது மிக மிக வருததறிக்குறியது. சிறைத்துறை குறைந்தபட்ச மனிதாபிமானத்தையும் இவர்களுக்கு வழங்க மறுக்கிறது. பெரும் பொருளாதார சிரமங்களுக்கிடையே இவர்களுக்கான வழக்குகள் வாதிடப்பட்டு நீதிக்காக காத்திருக்கும் இம்மக்களுக்காக இவர்களின் அவல நிலையை அரசுக்கு எடுத்து சொல்லும் முகமாக "இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்" மாநிலம் தழுவிய ஒற்றைக்கொரிக்கை தொடர் பொதுக்கூட்டங்களை நடத்தி வருவதும் நீங்கள் அறிந்ததே.
சிறைபட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களுக்காக இஸ்லாமிய இயக்கங்கள் மட்டுமே வாதிட்டால் அது ஒரு சார்புநிலையாக அறியப்படும் ஆகவே இந்த அநீதி மாற்று சமூக மக்களாலும் கவனிக்கப்பட வேண்டும் மாற்று சமூக மக்களாலும் பேசப்பட்ட வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் இக்கூட்டங்கள் பல்வேறு தரப்பினரையும் அத்துடன் சிறைவாசிகளின் விடுதலைக்காக தொடர்ந்து போராடிவரும் இஸ்லாமிய அமைப்புகளையும் ஒரே போது மேடையில் விடுதலைக்கான முழக்கங்களை எழுப்பிட செய்துவருகிறது இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்.
முதலில் திருப்பூர் அடுத்து கோவை என மக்களை அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணமாக திரட்டியது இன்றைக்கு பலராலும் குறிப்பாக தமிழ் தேசிய தளத்தில் முக்கிய வாதக்கருவாக சிறைவாசிகளின் விடுதலை முன்னெடுக்கபடுகிறது. அதற்க்கான உதாரணம்தான் ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் வரும் மே 27 அன்று காஞ்சி மக்கள் மன்றத்தின் கிளை துவக்க விழா சிறைவாசிகள் விடுதலைக்கான கவன ஈர்ப்பு பொதுக்கூட்டமாக நடைபெறவுள்ளது.
அதற்கும் முன்னதாக வரும் மே 19 அன்று திருச்சியில் நடைபெறவுள்ள விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாட்டில் முன்னாள் மத்திய அமைச்சரும் லோக்ஜன சக்தி கட்சி தலைவருமான தோழர் ராம் விலாஸ் பாஸ்வான் அவர்கள் முன்னிலையில் சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்படவுள்ளது. மே 20 அன்று சென்னை மெரீனா கடற்கரையில் மே பதினேழு இயக்கம் நடத்தும் இலங்கை இன அழிப்பை நினைவுகூரும் நிகழ்விலும் இக்கோரிக்கை முன் மொழியபடவுள்ளது...
இவை எப்படி சாத்தியமானது ஆம் நமது சமூக மக்களின் எழுச்சியும் சிறைவாசிகளின் விடுதலை விசயத்தில் மக்கள் காட்டிடும் ஆர்வமும் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் அமைத்துவரும் பொது மேடையும்தான் காரணம். இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் சிறைவாசிகளின் நிலையை வெகுஜன மக்களும் பேசினால்தான் ஒரு விடியல் பிறக்கும் என எண்ணியது ஊடகங்கள் மற்றும் அதிகாரவர்க்கம் மேற்கொண்ட பிரச்சாரங்கள் அனைத்து சிறைவாசிகளையுமே தீவிரவாதிகளாக மதவாதிகளாகதான் மாற்று சமூக மக்களை அறிய செய்திருந்தது. அந்த முடைநாற்ற பிரச்சாரங்கள் இந்து முறியடிக்கப்பட்டுள்ளது. அரசியல் கலவாது அமைப்புகள் சாராது இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் முயற்சித்த இம்முயற்சி அல்லாஹுவின் அளப்பரிய கருணையினால் மாபெரும் வெற்றிகளை குவித்து வருகிறது. இருப்பினும் மக்களை திரட்டுவது பொதுக்கூட்டங்கள் நடத்துவது மட்டும் நமது வெற்றியல்ல என்றைக்கு சிறையில் வாடிடும் அப்பாவிகள் விடுதலையடைகிறார்களோ அதுதான் அன்றைக்குத்தான் நமது முழுமையான வெற்றி...
சமுதாய சொந்தங்களே... இதோ மற்றவர்கள் சிறைவாசிகளின் விடுதலைக்காக போராட களம்கண்டுவிட்டார்கள் அதற்காக துவங்கியவர்கள் முடங்கிவிடக்கூடாது. ஆகையினால்தான் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் தொடர்ந்து கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இதுவரை நடத்துள்ள திருப்பூர் கோவை ஆகிய பொதுக்கூட்டங்களுக்கு இயக்கத்தின் நிர்வாகிகள் எவரிடமும் பணம் வசூலிக்கவில்லை அவர்களாகவே சொந்த பணத்தை வைத்துதான் நிகழ்வுகளை நடத்தினார்கள்... இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் உமர்கயான் மரியாதைக்குறிய வகையில் வழக்கறிஞர் தொழில் செய்து வருபவர் பொருளாதாரத்தில் பெரிய ஜாம்புவாநெல்லாம் இல்லை. அதேபோல்தான் தோழர் நாசதீன் அண்ணன் வீரர் அப்துல்லாஹ் தம்பி சதீஸ் போன்றவர்களும் இப்படிப்பட்ட பொருளாதார இக்கட்டான சூழலில் தொடர் பொதுக்கூட்டங்களையும் விட்டுவிட முடியாத கட்டாயம் இவர்களுக்கு உண்டு.
மேற் சொல்லப்பட்ட கூட்டங்களுக்கு அடுத்து மேலப்பாளையம்,இராமநாதபுரம்,திருச்சி என நமது செயல் திட்டம் நீண்ட பட்டியலாக இருக்கிறது சிறைவாசிகளின் விடுதலைக்காக நாம் அல்லாஹுவின் உதவியுடன் எத்தகைய தியாகங்களையும் செய்திட தயாராக இருக்கிறோம்.ஆனால் பெரும் சவாலாக முன்னிற்கும் பொருளாதாரத்திற்கு என்ன செய்வது?
அன்பு சொந்தங்களே... நான் என் சிறிய வயது முதல் பல்வேறு அமைப்புகளில் பயணித்தவன் இருப்பினும் ஒரு போதும் நான் யாரிடமும் பண வசூலுக்காக சென்று நின்றதில்லை என் சக்திக்கு தக்கவாறு உதவிகளை செய்துவிட்டு இருந்துவிடுவேன். வறுமையின் காரணமாக மருத்துவ உதவிகள் வேண்டுவோருக்கு என் நண்பர்கள் மூலமாக உதவி கிடக்க முயற்சித்து இருக்கிறேன்.
ஆனால் இன்று முதன் முறையாக உங்களிடம் நமது சமுதாய சொந்தங்களின் விடுதலைக்காக உதவி கேட்கிறேன். பொருளாதார சிரமத்தால் இப்போராட்டம் தடைபட்டுவிடுமோ என்கிற அச்சம் என்னை மட்டுமல்லாது தம்பி உமர்கயான் போன்றவர்களுக்கும் வந்துவிட்டத்தை என்னால் உணர முடிகிறது. தொடர் கூட்டங்களுக்கு திட்டமிட்டபோதே நாம் ஒரு விசயத்தில் தெளிவாக இருந்தோம் யாரிடமும் குறிப்பாக சிறைவாசிகள் சம்மந்தபட்டவர்களிடம் இருந்து ஒரு ரூபாய் கூட பெறக்கூடாது என்பதில் இதுவரை அல்லாஹு அந்த திட்டத்தில் இருந்து அம்மை அடிபிரள செய்யவில்லை.இனி மேலும் இந்த கண்ணியத்தை நீட்டித்து தர வேண்டும்.
சாதாரணமாக மிக எளிமையாக ஒரு பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமானாலும் குறைந்தபட்சம் ரூபாய் 50 செலவாகிறது இந்நிலையில் நாம் செல்ல வேண்டிய தூரங்கள் இன்னும் அதிகமாக இருக்கிறது இப்போராட்டம் எவரையும் முன்னிலைபடுத்தவோ எந்த இயக்கத்தையும் வளர்க்கவோ இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. முழுக்க முழுக்க அப்பாவிகளின் விடுதலை மட்டுமே ஒரே குறிக்கோள்.ஆகவே மனிதநேய சமுதாய சொந்தங்களே சிறைபட்டுள்ள நமது சொந்தங்களை மீட்க்க உங்களிடம் உரிமையுடன் உதவிகோருகிறேன். உங்களால் தரப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் உரிய கணக்குகள் ஆதாரங்களுடன் காண்பிக்கப்படும். அல்லாஹ் கண்காணிக்கிறான் என்கிற அச்சத்துடன் அவை செலவிடப்படும். சமுதாயத்திற்காக நன்மைக்காக அளவில்லாமல் உதவிடும் நீங்கள் வாழ்க்கையை தேடிக்கொண்டிருக்கும் நமது சொந்தங்களின் விடியலுக்காகவும் உதவிடுவீர்கள் என நம்புகிறேன்.
அல்லாஹுவிர்க்காக உதவிடுங்கள் அல்லாஹ் ஈருலகிலும் நமக்கான வெற்றிகளை தருவான்...
உங்களின் பங்களிப்பை இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்க நிர்வாகிகளை 0091-9944112879, 0091-9944713816 ஆகிய அலைபேசிகளில் தொடர்புகொண்டு பதிவிடவும்...
உண்மையுடனும்...உணர்வுடனும்....உரிமையுடனும்... உங்களின் உதவிக்காக
என்றும் உங்கள் சகோதரன்
வேங்கை.சு.செ.இப்ராஹீம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக