என் இனிய சகோதர சொந்தங்களே...
நம் அனைவர் மீதும் ஏக இறையவனின் சாந்தியும் சமாதானமும்
பொழியபடட்டுமாக...
இன்று (31.03.2011) எனது வாழ்க்கை துணையாக
ரோஸ்மின் பேகத்தை அல்லாஹ் இணைத்த 17 ம் ஆண்டின் துவக்கம்...
அல்ஹம்துலில்லாஹ்...
அன்பான மனைவியையும் அறிவான பிள்ளை செல்வங்களையும்
எனக்களித்த அளப்பரிய கருணையாளன் அல்லாஹுவுக்கே நன்றிகள் அனைத்தும்...
வாழ்கையில் பல ஏற்றங்கள் எதிர்பாராத வீழ்ச்சிகள்....
நான் துவண்டுபோகாமல் என் துணையிருக்கும் மனைவி...
எதிர்பார்ப்புகள் நிரம்ப உள்ள மழலை பருவத்திலும் எனக்காக
எதையும் எதிர்பார்க்காமல் அன்பு பாராட்டும் என் அருமை செல்வங்கள்...
அமீருல் முஜாஹிதீன் (15), சுல்தான் ரிபாசுதீன் (11) அப்ரின் ஷமீராஹ் (6)
இந்த வேளையிலே கடந்தகால சம்பவங்களை நினைவுகூறி அல்லாஹுவிற்க்கு
நன்றிகூற கடமைபட்டுள்ளேன்...
விரக்தியின் விளிம்பில் நான் நின்ற போது...
எதிர்பார்த்தவர்கள் எல்லாம் எனக்கு ஏமாற்றத்தை தந்தபோது...
கண்ணுக்கு தெரியாத வகையில் எனக்கு எனதருமை சகோதர சொந்தங்கள்
சிலர் மூலமாக நம்பிக்கை கொடுத்தான் என் இறைவன்... அல்லாஹு அக்பர்
இதயநோயால் அவதியுற்று அனுமதிக்கபட்டேன் மருத்துவமனையில்
சிகிச்சைக்கு பணமில்லை... லட்சங்களில் பணம் வேண்டும் என்றனர்...
லட்சியங்களை மட்டுமே சேர்த்துவைத்த நான் லட்சங்களை சேர்க்க தவறிவிட்டேன்...
எதிர்பாராமல் கிடைக்கபெற்ற இனிய வாழ்வையும் என் திட்டமிடல் இல்லாத செயலால்
நானே இழந்துவிட்டேன்... மருத்துவமனையின் படுக்கை மரணத்தை என் கண்களில்
நிழலாட செய்தது... மரணம் என்றிருந்தாலும் வரபோகிற ஓன்று... அதை எதிர்பார்த்துதானே
இந்த அற்பமான வாழ்க்கை...
ஆனாலும்
என் அன்பு மனைவி எனதருமை குழந்தைகளுக்கு இந்த உலக வாழ்க்கைக்கு
தேவையான எதையுமே சேர்த்து வைக்கவில்லையே... எனக்கு பின்னால்
என் மனைவி மக்கள் அனாதைகள் ஆகிவிடுவார்களே... என்னையும் அறியாமல்
என் விழிகளில் கண்ணீர் சுனாமியாக சுழன்று வடிந்தது... செய்வதறியாது
என் மனைவி கைகளில் முகம்புதைத்து கதறினாள்...
கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவளிக்கும் கருணையாளன் அல்லாஹுவின்
ஆழகடலைவிட ஆழமான அன்பை இரக்கத்தை உணர்வுபூர்வமாக உணர்த்தினான்...
எதார்த்தமாக நான் அனுமதிக்கபட்டிருந்த மருத்துவமனைக்கு வந்திருந்த நண்பர்
என் நிலையை எனது மரியாதைக்கும் நட்பிற்கும் உரிய சகோதரர் ஒருவருக்கு
தெரியபடுத்தினார்...
என்ன அற்புதம் அடுத்த சில நிமிடங்களில் நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
என் இறைவனுக்காக ஏற்றுக்கொண்ட பொதுவாழ்க்கை எனக்கு தந்த சொந்தங்கள்
திரளாக வந்துவிட்டனர்... அல்ஹம்துலில்லாஹ்...
அவர் அனைவரும் மருத்துவரிடம் எங்கள் வேங்கை எங்களுக்கு வேண்டும்
பணத்தை பற்றிய கவலை இல்லை உடணடியாக சிகிச்சை செய்யுங்கள் நாங்கள்
பணத்தோடு வருகிறோம் என்றனர்... மேற்சிகிசைக்கு மதுரைக்குத்தான் அழைத்துசெல்ல
வேண்டும் என்ற மருத்துவர் அதுவும் சில மணி நேரங்களில் கொண்டுசெல்ல வேண்டும்
என்றார். அதற்க்கான ஏற்பாடுகளை உடணடியாக மேற்கொண்டு நான் மதுரைக்கு
அழைத்து செல்லப்பட்டு மீனாட்சி மிஷின் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்பட்டேன்.
முதலுதவிகள் செய்து மறுநாள் காலையில் இருதய சிகிச்சை மேற்கொண்டார்கள்...
அல்லாஹ் பெரியவன்... அல்லாஹ் பெரியவன்... அல்லாஹ் பெரியவன்...
என் மனைவியின் கதறல்... என் பிள்ளைகளின் கண்ணீர்... என் நட்பு உறவுகளின் துஆக்கள்...
அல்லாஹ் என்னை எளிதாக குணமாக்கினான்... அறுவை சிகிச்சை இல்லாமல்
ஆஞ்சியோகிராம் சிகிச்சை மூலமாகவே எனது இரத்தகுழாய் அடைப்புகள் நீக்கப்பட்டது...
சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பியதும் எனது மின்னஞ்சல் வரவுகளை பார்த்தேன்...
மாஷாஅல்லாஹ் எனக்காக உலகெங்கிலும் என் சகோதர சொந்தங்கள் ஜாதி மதங்களுக்கு
அப்பாற்பட்டு துஆ செய்திருந்த அன்பைகண்டு இப்போதும் என் கண்களில் கண்ணீர் துளிகள்...
ஆம்
அல்லாஹ் நான் செய்யவேண்டிய பணிகள் தேடவேண்டிய பாவமன்னிப்புகள்
இன்னும் அதிகமாக இருப்பதனாலேயே என்னை குணமாக்கினான்... அதை உணர்ந்தவனாக
என் கடந்த 36 ஆண்டுகால பயணப்பாதையை மாற்றி பயணிக்க துவங்கி உள்ளேன்...
என் இறைவா...
உன்னால் படைக்கப்பட்ட பலகீனமான மனிதபிறவி நான் என் மனதறிந்து
எந்த பாவமான காரியங்களும் செய்யவில்லை என்றாலும் என்னையும்
அறியாமல் ஏதேனும் பாவங்கள் செய்திருந்தால் என்னுடைய கடந்தகால நன்மையான
காரியங்களின் பலனை அதிகரித்து பாவ செயல்களின் தண்டனையிலிருந்து
எனக்கு பாவமன்னிப்பு வழங்கு...
என் வாழ்க்கை துணையான நாள் முதல் எந்த சுகத்தையும் சுவாசிக்காத என் மனைவிக்கு
நான் நல்ல கணவனாக... எனக்கு பிள்ளைகளாய் பிறந்து என்னை முழு மனிதனாக்கிய
எனதருமை செல்வங்களுக்கு நல்ல தகப்பனாக... என்னை இன்றளவும் மரியாதையோடும்
மனிதநேயதோடும் நட்பு பாராட்டும் என் சமுதாய சொந்தங்களுக்கு நல்ல சேவகனாக...
உன் அன்பை பெரும் ஹலாலான வாழ்க்கையை எனக்கு கொடு...
எனக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி... என்னால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட
சங்கடங்கள் இவற்றை எல்லாம் சுலபமாக நிவர்த்தி செய்யும் மனவலிமையையும்
உடல்வலிமையையும் தந்தருள்வாயாக...
என் சமூகத்திற்கு தூய்மையான சேவைகள் செய்து என் மரணத்திற்குப் பிறகும்
எனக்காக மற்றவர்கள் உன்னிடம் துஆ கேட்கும் அற்புதமான வாழ்வை தந்தருள்வாயாக...
என் மார்கதிற்க்காக என் மக்களின் முன்னேற்றத்திற்க்காக களமாடும் வேளையிலே...
உரிமைகளை வென்றெடுக்கும் மூர்க்கமான பயணபாதையிலே... எனக்கு ஷஹீதை தந்தருள்வாயாக...
சமுதாய சொந்தங்களே...
எனக்காகவும் என் மனைவி மக்களுக்காகவும் இறையவனிடம் துஆ செய்யுங்கள்...
நானும் என் மனைவி மக்களும் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தினருக்காகவும்
துஆ செய்கிறோம்...
உரிமையுடன் உங்கள் துஆக்களை விரும்பும்...
உங்கள் சமுதாய சகோதரன்
வேங்கை.சு.செ.இப்ராஹீம்
5 கருத்துகள்:
அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர் வேங்கை அவர்களே. மிக குறிகிய காலமாக தங்களை இந்த தளத்தில் சந்திக்க நேர்ந்தபோதும், தங்களின் எழுத்துக்களை படித்தபோதும் தங்களுக்குள் இப்படி ஒரு வேதனையும் அதன் மீட்சியும் இருந்தது தெரியாது. தங்களின் தொடர்ந்த நலத்துக்கும் தங்கள் மனைவி மக்களின் நல்வாழ்வுக்கும் நானும் எனது குடும்பத்தினரும் துபையிலிருந்து துஆ செய்கிறோம்.
இப்ராஹிம் அன்சாரி.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் வேங்கை அவர்களே உங்களுக்கும் உங்களுடைய மனைவி மக்களுக்கும் அல்லாஹ் நீடித்த ஆயுளையும் நிறைவற்ற செல்வத்தையும் கொடுப்பானாக என்று ஏக இறைவனை பிராத்திக்கின்றோம்.
அ.முஹம்மது பரக்கத்துல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் வேங்கை அவர்களே உங்களுக்கும் உங்களுடைய மனைவி மக்களுக்கும் அல்லாஹ் நீடித்த ஆயுளையும் நிறைவற்ற செல்வத்தையும் கொடுப்பானாக என்று ஏக இறைவனை பிராத்திக்கின்றோம்.
அ.முஹம்மது பரக்கத்துல்லாஹ்
நலமும் வளமும் சூழ
வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.
ஆளூர் ஷாநவாஸ்.
நலமும் வளமும் சூழ வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.
ஆளூர் ஷாநவாஸ்.
கருத்துரையிடுக