சட்டமன்ற தேர்தல் கூப்பிடும் தூரத்தில் இருக்கும் நிலையில்
ஆளுங்கட்சி முதல் உதிரிக்கட்சிகள் வரை தேர்தல் காய்ச்சல்
தொற்றிகொண்டிருக்கிறது.
வழக்கம் போல இந்த தேர்தலிலும் முஸ்லிம் இயக்கங்கள்
அதிமுக திமுக என இரு அணிகளை நோக்கியும் நகர்ந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் பெரும் முயற்சிகளில் இறங்கியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்
தொல்.திருமாவளவன் அம்முயற்சியில் சிறிதளவும் பின்வாங்காத முடிவில் இருக்கிறார்.
சிறுத்தைகள் பெரும் இரட்டை இலக்க தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் கணிசமாக இருக்கவேண்டும் என்கிற உல் முயற்சியில் இறங்கியுள்ள விசிகவின் மாநில பொருலாளர் சகோதரர் எம்.என் முகமது யூசுப் அவர்கள் பிப்ரவரி 24 தேதியிட்ட "தமிழக அரசியல்" வார இதழுக்கு அளித்திருந்த பேட்டியின் தொகுப்பு இங்கே...
தமிழகத்தில் காயிதே மில்லத், பழனிபாபா ஆகியோருக்கு பிறகு முஸ்லிம்களுக்கான கருத்தியல் மற்றும் களத்தியல் ரீதியிலான சிறந்த தலைமை இதுவரை கிடைக்காதது துரதிஷ்டமான விசயம்.
இந்திய அளவில் முஸ்லிம்கள் இன்று சிறுபான்மைகள் என்கிற நிலையை
தாண்டி அரசியல் அதிகாரத்தால் புறக்கணிக்கப்பட்ட நிலையில்தான் வாழ்ந்து வருகிறார்கள்.முஸ்லிம்சமூகத்தில் பல வணிகர்கள் பெரும் செல்வதோடு வாழ்ந்துவரும் நிலையை வைத்து அந்த சமூகத்தின் ஒட்டுமொத்த நிலையையும் கணித்துவிடகூடாது.
இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்துவரும் அணைத்து அடக்குமுறைகளையும் முஸ்லிம் சமுதாய மக்களும் அனுபவித்து வருகிறார்கள்.ஆனால் அவர்களின் வாக்கு வங்கியை மட்டும் பயன்படுதிகொள்ளும் பலர் அவர்களின் வாழ்வியலை முன்னேற்றவில்லை என்பதே மறுக்கமுடியாத உண்மை...
கேள்வி: தமிழகத்தில் முஸ்லிம்லீக், தமுமுக,தவ்ஹீத் ஜமாஅத் போன்ற அமைப்புகள் செயல்படுகின்றதே...
பதில்:இந்த அமைப்புகள் அனைத்துமே தாங்களே முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் என்று தங்களை முன்னிலைபடுதிகொண்டு ஆரம்பிக்கப்பட்டன.ஆனால் அவைகள் காலபோக்கில் திராவிட கட்சிகளின் அடிவருடிகளாக மாறிவிட்டன.
மேலும் அவவமைப்புகள் முஸ்லிம் மக்களை வாழ்வியல் ரீதியாக முன்னெடுத்து செல்லாமல் மார்கவியலே அரசியல் என சொல்லி குழப்பமும் குதர்க்கமும் செய்து வருகின்றன.மார்க்கம் என்பது இஸ்லாமிய மக்களின் தத்துவ ரீதியான கொள்கை. அரசியல் என்பது அவர்க்களின் அடிபடை தேவைகளை பூர்த்தி செய்ய அதிகாரத்தை கையிலெடுக்கும் வழிமுறை.
ஆனால் முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என தங்களை அறிவித்துகொண்டு புறப்பட்ட இயக்கங்கள் வெறும் மார்க்க அரசியலை செய்து முஸ்லிம் சமூக மக்களுக்கு தேவையான இட ஒதுக்கீடு போன்ற விசயங்களில் கோட்டை விட்டுவிட்டன.
இதுபோன்ற முஸ்லிம்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு தீர்க்கமான பார்வை இல்லாமல்... தேர்தலுக்கு தேர்தல் அவர்களை திராவிட கட்சிகளிடம்
அடகு வைக்கின்றன.
அதேபோல திராவிட கட்சிகளில் உள்ள முஸ்லிம் பிரதிநிதிகளும் கட்சி எல்லைகளை தாண்டி முஸ்லிம் சமூகத்திற்கு அதுவும் செய்ய முன்வருவதில்லை...
பற்றாக்குறைக்கு இப்போது ஆர் எஸ் எஸின் அடுத்தவார்ப்பான விஜயகாந்த் வந்திருக்கிறார்.தனது திரைப்படங்கள் மூலமாக முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்கிற கருத்தை வெகுஜன மக்களிடம் விதைக்க முற்படுபவர். இவர்களை போன்றவர்களின் பின்னால் முஸ்லிம் இளையர்கள் செல்வது மிகப்பெரிய பின்னடைவையே ஏற்படுத்தும்.
கேள்வி:அப்படி பார்த்தால் விசிக தற்போது திமுக கூட்டணியில்தானே இருக்கிறது?
இது தேர்தலுக்கான கூட்டணி முழு அளவில் கொள்கை ரீதியான கூட்டணி அல்ல.2011 ஆண்டை விடுதலை சிறுத்தைகளின் அங்கீகாரம் பெரும் ஆண்டாக அறிவித்துள்ள எங்கள் தலைவர் திருமாவளன்... 2016 ம் ஆண்டை தாழ்த்தப்பட்டோர் முஸ்லிம்கள் ஆண்டாக அறிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் சந்தேக வழக்குகளில் சிறைகளை அடைக்கப்பட்டார்கள் தாழ்த்தபட்டோருடனான ஒருங்கிணைப்பிற்கு பிறகு சமீப ஆண்டுகாலமாக இந்த பாதிப்பு குறைந்து வருகிறது.எனவே தாழ்த்தப்பட்டோர் முஸ்லிம்கள் ஒருங்கிணைப்பு முழுமையானால் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் முஸ்லிம்கள் ஆகிய இரு புறக்கணிக்கப்பட்ட இனங்களும் புது பலம்பெரும்...
அதற்க்கான களப்பணிகளை தற்போது விசிக செய்து வருகிறது. இதை உணர்ந்து முஸ்லிம் மக்கள் வரும் தேர்தலில் கடமையாற்ற வேண்டும் என்று முடித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருலாளர் எம்.என்.யூசுப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக