Subscribe:

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

"க‌ச‌ப்பாக‌ இருப்பினும்,பிறர் அதிருப்தியிற்றாலும் உண்மையே பேசுங்க‌ள்"

க‌ச‌ப்பாக‌ இருப்பினும்,பிறர் அதிருப்தியிற்றாலும் உண்மையே பேசுங்க‌ள்"
ஆனாலும்.....
மனிதர்கள் பெரும்பாலும்சுயநலவாதிகளாக இருப்பர்,
நியாயமின்றி நடப்பர்ஆனாலும் அவர்களை மன்னியுங்கள்

நீங்கள் வெற்றியடையும்போது,
சில பொய்யான நண்பர்களையும்உண்மையான
எதிரிகளையும்
சம்பாதிப்பீர்கள்ஆனாலும்
வெற்றிக்காகப் போராடுங்கள்

நீங்கள் நேர்மையாகவும்வெளிப்படையாகவும் இருந்தால்,
மனிதர்கள் உங்களை
ஏமாற்றலாம்ஆனாலும்
நேர்மையாகவும்வெளிப்படையாகவும் இருங்கள்

நீங்கள் பல வருடங்கள்சிரமப்பட்டுக் கட்டியதை,
ஒருவர் ஒரே நொடியில் அழித்து
விடலாம்ஆனாலும் முயற்சியைக் கைவிடாதீர்கள்

நீங்கள் மகிழ்ச்சியுடனும்நிம்மதியுடனும் இருந்தால்,
மனிதர்கள் உங்கள்மீது பொறாமை கொள்ளலாம்ஆனாலும்
மகிழ்ச்சியாய் இருங்கள்

நீங்கள் பிறர் முன்னேற ஏணியாய்இருங்கள்,
ஏறியபின் அவர்கள் உங்களை எட்டி உதைக்கலாம்ஆனாலும்
பிறருக்கு ஏணியாய் இருந்து உதவுங்கள்

நீங்கள் ஒருவருக்குக் கடன்கொடுத்து உதவும்போது,
அதை அவர் திரும்பக் கொடுக்காமலே போகலாம்ஆனாலும் சிரமத்திலிருப்பவர்களுக்குகடன் கொடுத்து உதவுங்கள்

நீங்கள் இன்று செய்த உதவியை,மனிதர்கள்
நாளை மறந்துவிடலாம்ஆனாலும் மற்றவர்களுக்கு உதவிசெய்யுங்கள்
உங்களிடம் இருப்பதில் சிறந்ததைமற்றவர்களுக்கு அளியுங்கள்,
அது எப்போதும் போதாமலே போகலாம்ஆனாலும்
மற்றவர்களுக்கு சிறந்ததையே அளியுங்கள் கடைசியில் பாருங்கள்,
எல்லாமே உங்களுக்கும் இறைவனுக்கும் இடையில்தான்உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் அல்ல..!

நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?(புனித குர்ஆன் 55:60)

அணு முதல் அண்டசாராசரம் வரை அனைத்தும் வல்ல நாயன் அல்லாஹ்வைத் துதிக்கின்றன. பிரபஞ்சம் இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றன. எனவே அவற்றிடத்தில் எந்தக் குலப்பத்தையும் காண முடியாது. ஆனால் மனிதன் இறைவனுக்கு மாறுசெய்பவனாகவே உள்ளான். எனவேதான் அவன் வாழும் இடமெல்லாம் குழப்பம் விளைகின்றது. இயற்கை மனிதனை இஸ்லாத்தின் பால் அழைக்கின்றது. இஸ்லாம் அவனை இறைவனிடத்தில் கொண்டு செல்கின்றது.
நாவைப் பேணுக! உண்மை பேசுக! அல்லாஹ், “இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119

நேர்மையாக பேசுக! ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
அழகானதைப் பேசுக! பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83

கனிவாகப் பேசுக! உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். 4:8

நியாயமாகப் பேசுக! நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் நியாயமே பேசுங்கள். 6:152

அன்பாகப் பேசுக! அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36

வீண் பேச்சை தவிர்த்துடுக! நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68 பொய் பேசாதீர்! உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் – நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116புறம் பேசாதீர்! உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 49:12

ஆதாரமின்றி பேசாதீர்! யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும். 40:35

அவதூறு பேசாதீர்! எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; 24:23

கருத்துகள் இல்லை: