செவ்வாய், 15 பிப்ரவரி, 2011
Dr.ஆபிதீனின் “சிகரங்கள் அழைக்கின்றன,சிறகுகளை விரியுங்கள்” புத்தக வெளியிடு...
இளையான்குடியில் 'டைம் டிரஸ்ட்' சார்பில் கடந்த மாதம் 16,17 ஆகிய தேதிகளில், வளரும் சமுதாயத்தை வல்லமைமிக்க சமுதாயமாக மாற்ற அடிப்படைத் தேவையான கல்வியின் மகத்துவத்தை பறைசாற்றும் விதமாக கல்வித் திருவிழா-2011 நிகழ்ச்சி நடைபெற்றது. கல்வித்திருவிழாவின் போது மாணவர்களுக்கு கல்வியாளர்களின் ஊக்கமிகுந்த உரைகளை வழங்குகின்ற அதே வேளையில் கல்வி விழிப்புணர்வு ஊட்டும் மேற்படிப்பு குறித்த தகவல்கள் அடங்கிய புத்தகம் ஒன்றையும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்க டைம் டிரஸ்ட் விரும்பியது. பேராசிரியர் டாக்டர் ஆபிதீன் அவர்களின் உதவியால் ”சிகரங்கள் அழைக்கின்றன சிறகுகளை விரியுங்கள்” என்ற தலைப்பில் உயர் கல்விக்கான வழிகாட்டும் புத்தகம் ஒன்று சிறப்பாக தொகுத்து வெளியிடப்பட்டது. 240 பக்கங்களைக் கொண்ட இந்த கல்வி மலரில் பல்வேறு வகையான படிப்புகள் குறித்த விபரங்கள் தெளிவாகவும் ஆழமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.மாணவர்களின் மனநிலை, ஆர்வம், குடும்ப சூழல் மற்றும் பொருளாதார பின்னணியின் அடிப்படையில் மாணவர்களுக்கு அறிமுகம் இல்லாத நூற்றுக்கணக்கான படிப்புகள் பற்றிய விபரங்கள் மிகவும் அற்புதமாக அலசப்பட்டுள்ளது. இந்தப்புத்தகம் ஆயிரம் பிரதிகள் தயார் செய்து இளையான்குடி சுற்றுவட்டார அணைத்து 102 மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. இதற்கான செலவை இளையான்குடி சுளியங்கச்சி மர்ஹூம் உதுமான் அவர்களின் குடும்பத்தினர் முழுமையாக ஏற்றுக்கொண்டனர்.
இந்த சிறப்புமிகு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி கல்வித் திருவிழாவின் முதல் நாள் 16ந்தேதி மாலை 6:30 மணிக்கு இளையான்குடி P.H.தெரு மற்றும் காதர் பிச்சை தெருவில் பொது மக்கள், ஜமாத்தார்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. புத்தகத்தை சுளிங்கச்சி மர்ஹூம் உதுமான் அவர்களின் மகள் ஹாஜியானி டாக்டர். ஹயர்நிஷா அவர்கள் வெளியிட முதல் பிரதியினை இளையான்குடி மேலப்பள்ளிவாசல் டிரஸ்டி ஜனாப். அப்துல் சத்தார் அவர்களும், அதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் சலீம் அவர்களும் பெற்றுக் கொண்டனர்.புத்தகத்தின் சிறப்புகள் குறித்து இளையான்குடி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜனாப். .ஜான்முகம்மது பேசினார். புத்தகத்தை பெற்றுப்படித்த மாணவர்கள் அனைவரும் இந்தப் புத்தகத்தில் மேற்படிப்பு குறித்த பல்வேறு வகையான தகவல்கள் மிகசிறப்பாக விளக்கப்பட்டுள்ளது என்றும் இதனை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்த டைம் டிரஸ்ட் நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.பேராசிரியர் ஆபிதீன் படைப்பில் வெளியான 13-வது புத்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக