Subscribe:

செவ்வாய், 25 ஜனவரி, 2011

கரும்புலியே கவலை இல்லாமல் கண்ணுறங்கு...


முத்துகுமரா-நீ
தமிழனின் வீரம்...தமிழினத்தின் மானம்...
தமிழீழத்தின் வானம்...என்றும்
தமிழனின் மனம் மறக்குமா உன் தியாகம்...

இதயம் இரும்பாலானோரை இளகவைக்க
உன்னையே நீ நெருப்பு பிழம்பாக்கினாய்...
கருகிய உன் உடலை காணவைத்து
எங்களை ரணமாக்கினாய்...

கண்முன்னே நம்மினம் கருவருக்கபட்டது கண்டு
கைபிசைந்து நின்ற எங்களை இதயம் பிசைய வைத்தவனே...
உணர்வு ஊனமுற்ற தமிழனையும்
எழுந்து நடக்க வைத்தவனே...

உன் உடலைத்தான் நாங்கள் இழந்திருக்கிறோம்
உன் உணர்வுகளை கனவுகளை லட்சியங்களை
லட்சக்கணக்கான முத்துகுமார்கள் ஏந்திநிற்கிறார்கள்...
லட்சிய முழக்கத்துடன் சேர்ந்திருக்கிறார்கள்...

முள்வேலி முகாமினிலே நம் தாய்
உணவில்லாமல் தவிக்கிறாள்...நம்
சகோதரி அழுதிடும் குழந்தைக்கு பால் இல்லாமல் தவிக்கிறாள்...
கவலைதோய்ந்த நம் சகோதரன் இயலாமையால் தவிக்கிறான்...


ஆட்டம்போடும் சிங்கள கூட்டத்திற்கு-நம்
சிங்ககூட்டம் அடிகொடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை
நாம் இழந்தது யுத்ததைதானே தவிர களத்தை இல்லை...
நிச்சயம் தமிழினம் வெல்லும்... தமிழ்ழீழம் மலரும்...
கரும்புலியே நீ கவலை இல்லாமல் கண்ணுறங்கு...
சிறுத்தைகளின் தலைவனிங்கே சிம்மசொப்பணமாய் சிங்களவனுக்கு
சீக்கிரம் விடியல் பிறக்கும் ஈழத்தில் தமிழன் கொடிபறக்கும்...
கரும்புலியே நீ கவலை இல்லாமல் கண்ணுறங்கு...

திங்கள், 24 ஜனவரி, 2011

ஜனவரி 28 ஆயக்குடி அதிரட்டும்...



ஜனவரி 28 சமுதாயதந்தை ஷஹீத் பழனிபாபா
அவர்கள் ஷஹீதான நாள்...
இந்நாளை ஒவ்வொரு ஆண்டும்
வஞ்சிக்கப்பட்ட சமூக மக்களின் அரசியல் எழுச்சி நாளாக
நடைமுறைபடுத்தி வருகிறது சகோதரர் கே.எம்.சரீப் அவர்கள்
தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி.
இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஜனவரி 28 அன்று
மக்கள் ஜனநாயக கட்சி ஷஹீத் பழனிபாபா அவர்களின்
நினைவேந்தல் நிகழ்ச்சியை வெகு விமர்சையாக ஏற்பாடு
செய்து வருகிறது.
வஞ்சிக்கப்பட்ட சமூக மக்களின் அரசியல் எழுச்சி நாளாக
கடைபிடிக்கப்படும் இந்நாளில் சிந்தனையை தூண்டும்
இரண்டு நூல்களையும் மக்கள் ஜனநாயக கட்சி வெளியிடுகிறது.

இந்நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
தோழர் சீமான் அவர்களும் பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியாவின்
அகில இந்திய துணைத்தலைவர் சகோதரர் முஹம்மது அலி ஜின்னா
ஆகியோர் உட்பட பல்வேறு சமுதாயங்களை சார்ந்த பிரபல தலைவர்கள்
கலந்துகொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்கள்...

நிகழ்விற்கு ஷஹீத் பழனிபாபா அவர்களின் தாய்மாமாவும்
மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில துணைத்தலைவருமான பெரியவர்
அப்துல் ரஹ்மான் (எ) சின்னதம்பி ராவுத்தர் அவர்கள்
தலைமை ஏற்கிறார்கள்.

கடந்த ஏழாண்டு காலமாக பெரும் சிரத்தைஎடுத்து பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசியல் கெடுபிடிகளுக்கு மத்தியில்
பல விமர்சனகளுக்கு மத்தியில் மனம் தளராமல் தொடர்ந்து
ஷஹீத் பழனிபாபா அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியை
வஞ்சிக்கப்பட்ட சமூக மக்களின் அரசியல் எழுச்சி நாளாக நடதிவருவதன் மூலமாக அனைத்துதரப்பு மக்கள் மத்தியிலும் தலைவர் ஷஹீத் பழனிபாபா
அவர்களின் புரட்சிகரமான சிந்தனைகளை விதைத்துவரும்
மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் சகோதரர் கே.எம்.சரீப் அவர்கள் நிறைவுரையாற்றுகிறார்.

சமுதாய சொந்தங்களே ஷஹீத் பழனிபாபா தனது வாழ்நாள் முழுவதையும்
சமுதாயத்திற்காக அர்ப்பணித்து பல்வேறு அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல்
இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு மட்டுமின்றி ஏனைய ஒடுக்கப்பட்ட குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்காகவும் சுமார் 238 சிறை சென்றவர்.
3 தேச பாதுகாப்பு சட்டம், 1 தடா சட்டமென பாய்ந்துவந்த பயங்கரவாத தடை சட்டங்களை தனது அறிவுகூர்மையால் உடைதெறிந்தவர்.

இன்றைய சமுதாய இளையர்களுக்கு அவரின் வீரியமிக்க சமுதாய செயல்களை கற்றுகொடுக்க வேண்டியது அவசியம்.அதற்காகவே இந்நிகழ்வு நடத்தபடுகிறது.இதில் அரசியல் இயக்கம் பாகுபாடில்லாமல் அனைவரும் பெரும் திரளாக கலந்துகொண்டு பாபா அவர்களின் சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க இன்ஷாஅல்லாஹ் தயாராவோம் ஜனவரி 28 புதுஆயக்குடி நோக்கி புறப்படுவோம்...


( நிகழ்ச்சி பற்றிய மேல் விபரங்களுக்கு மக்கள் ஜனநாயக கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் சகோதரர் A.K.N.ஷாஜஹான் அவர்களை 9865063734 என்கிற அலைபேசியில் தொடர்புகொள்ளலாம்)
ஆயக்குடி அதிரட்டும்... திண்டுக்கல் மாவட்டம் தினரட்டும்...
நன்றி;mjktn.blogspot.com

வியாழன், 20 ஜனவரி, 2011

நாம் எங்கே போகிறோம்...?

என்
இனிய சமுதாய சகோதரா...
உன்
ஆற்றல்மிகு சிந்தனைகள்
வீரியமிகு செயல்பாடுகள்...
தூய்மையான மார்க்கபணிகள்...
துடிப்பான உன் வேகம்...
மார்க்க
புறம்பான செயல்களை எல்லாம்
புறந்தள்ளிய உன் விவேகம்...
அடக்குமுறைகளை எல்லாம்
உடைதெறிந்து உரிமைவெல்ல
ஆர்பரிக்கும் போர்குணம்...
இளையவயதின் ஆசாபாசங்களை
இந்த உலக அற்ப சுகங்களை
துச்சமென தூக்கியெறிந்த
என்
இனிய சமுதாய சகோதரா...
இந்த
தியாகங்கள் எல்லாம் எதற்க்காக...
உன்
உழைப்பின் பகுதியை
உணர்வோடு வாரி வழங்கினாயே எதற்க்காக...
உன்
தலைமுறை தலைநிமிர்ந்து வாழத்தானே...
இல்லை
தலைவர்களை வாழவைப்பதற்கா...?
சமுதாய துரோகிகளை துவசம் செய்து
அதிகாரவர்க்கத்தின் அடிமைவிலங்கினை அறுத்தெறிந்தாயே
நீ
அமைப்புகளின் பெயரால்
அடிமைபட்டுக்கிடப்பதற்க்கா...?
பிளவுபட்டுக்கிடப்பதற்க்கா...?
சமீபகாலமாக
சங்பரிவார்களின் சத்தத்தை காணோமே
ஓ...
அவர்களின் வேலைகளை நீயே
சத்தமிட்டு செய்வதினாளா...?
சகோதரயுத்தம் புரிவதினாளா...?
என்
இனிய சமுதாய சகோதரா...
இந்து முன்னணிகளும்
பஜ்ரங்தளங்களும்
பாரதீய ஜனதாக்களும்
உன்னைப்போல
அருள்மறையின் வழிகாட்டுதல்
இல்லாதவர்கள்தானே...
மாநபி பெருமானின்
வாழ்க்கைப்பாடம் தெரியாதவர்கள்தானே...
வெவேறு பெயர்கள்
வெவேறு தலைமைகள்
வெவேறு கொடிகள்
இருந்தாலும் பார்த்தாயா
உன்னை வேரறுக்க வேண்டுமென்பதில்
தளராத ஒற்றுமையை...
என்
இனிய சமுதாய சகோதரா...
நாம் எங்கே போகிறோம்...?
நமது இலக்கு என்ன?
இலக்கில்லாத பயணம்
விளக்கில்லாத வீடல்லவா?

செவ்வாய், 18 ஜனவரி, 2011

தலைவா நீ ஒரு சகாப்தம்...


பழனிபாபா
உன்
பெயரை சொன்னாலே
எங்கள்
உதடுகளில் ஒட்டியுள்ள
உமிழ்நீரும் அனல் கக்கும்...
உணர்வற்றவனுக்கும்
உன்
பெச்சுகேட்டால் உயிர் துடிக்கும்...
வீரத்திற்கும் வீரம் கற்றுத்தந்த
விளைநிலம் நீ...
அடக்குமுறைகளையும் அடக்கிஆண்ட
மாவீரன் நீ...
அமைப்பாய் இல்லை அணிவகுக்க
படைகளும் இல்லை...
ஆனாலும் நீ
சாதித்தாய் எங்களுக்கு
ஜனநாயகத்தை போதித்தாய்...
சமுதாயத்தையே குடும்பமாக்கி
வாழ்ந்தவன் நீ...
சிறைகளை சிரித்த முகத்துடன்
வரவேற்றவன் நீ...
நீ நடத்திய பொதுக்கூட்டமெல்லாம்
எங்களுக்கு
பள்ளி பாடங்கள்...
தனிமனித ஆளுமையே
உன்
சிரம் இறைவனுக்கு தவிர
எவனுக்கும் தாழ்ந்தது இல்லை
நீ
எங்கள் தலைமுறைக்கான
வரலாறு...
ஆகையினால்தான்
மீண்டும் மீண்டும் உன்னை
வாசிக்கிறோம்...
உன்னைபோலவே
ஷஹீதை நேசிக்கிறோம்...
நீ
விதைத்து சென்ற விதைகள்
இன்ஷாஅல்லாஹ் முளைக்கும்
விருட்சமாய்...
என்றுமே
நீ
வாழ்வாய் எங்கள் மனங்களில்
சகாப்தமாய்....
என்றும் நீ கற்றுத்தந்த சமுதாய பாதையில்...
வேங்கை.சு.செ.இப்ராஹீம்

செவ்வாய், 11 ஜனவரி, 2011

இன்னாயிலாஹா வா இன்னாயிலைஹீ ராஜூவூன்...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நேற்று திங்கள் கிழமை காலை சுமார் பத்துமணியளவில்
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் இருந்து மகிழுந்து
மூலமாக ராமநாதபுரம் நோக்கி பயணம் மேற்கொண்டிருந்த
எனது நட்பிற்குரிய சகோதரர் எஸ்.பர்வீஸ் கான் அவர்களின்
தகப்பனார் ஹாஜி.செய்யது முகமது அவர்கள் எதிரே வந்த
வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே வபாத்தானார்கள்... (இன்னயிலாஹா...) என்கிற செய்தியறிந்து சொல்லொன்னா துயரம் அடைந்தேன்...

பார்பதற்கும் பழகுவதற்கும் இனிய மனிதரான அன்னார் அவர்களின் இழப்பு
நெஞ்சை கீறி பிளந்தது... அவர்களின் மறுமை வாழ்வுக்கு துஆ செய்யும் அதேவேளையில் சகோதரர் பர்வீஸ் கான் அவர்களை மட்டுமல்ல எங்கள் அனைவரையுமே தனது பிள்ளைகளாக வாஞ்சையோடு வழிநடத்திய அன்னார் அவர்களை பற்றிய நினைவுகளை இங்கு மனவேதனையோடு பதிகிறேன்...
போய் வாருங்கள் அத்தா போய் வாருங்கள்...
வெள்ளை உடையும் பிள்ளை நடையும்...
மலர்ந்த முகமும் புலர்ந்த மொழியும்...
அதிர்ந்து பேசாத அமைதியின் உருவும்...
நிமிர்ந்து பார்க்காத அடக்க நெறியும்...
ஒழுக்கமும் பாடம் கற்றுக்கொள்ள விரும்பும்
ஓவியமாய் வாழ்ந்தவரே...
ஈகை குணத்தில் ஈடில்லா கொடையுள்ளம்கொண்டு
காவியமாய் வாழ்ந்தவரே...
மார்க்கநெறிகளை மனதில் தாங்கி கடமைகளை
கணக்காய் முடித்திட்ட நிறைவுகண்டு
போய்விட்டீரோ....
எதார்த்தமாய் உம்மை இழந்திருந்தால் இறைவிதி
என பொறுத்திருப்போமே...
விபத்தால் உம்மை இழந்ததினால்தானே
வீறுகொண்டு அழுகின்றோம்...
பிறகின்றபோதே இறப்பையும் உணர்த்துகிறான் இறைவன்
பலகீன மனது ஏற்றுகொள்ள மறுக்கிறதே...
இளகிய மனம்படைத்த எங்கள் அத்தா
விபத்தின் வேதனையை நீங்கள் எப்படி தாங்கினீர்கள்...
நினைக்கும்போதே எங்கள் நெஞ்சம் வெடிக்கிறதே
எம்மையும் அறியாமல் கண்ணீர் வழிகிறதே...
நட்பிற்கு இலக்கணமாய் இரண்டு செல்வங்களை
பர்வீசாய் ஜாகீராய் தந்த எங்கள் அத்தா...
நிறைவுபெற்ற வாழ்க்கையின் நிறைவாய்
இறைவனின் அழைப்பை நீங்கள் ஏற்றுகொண்டீர்கள்...
நாங்கள் அழமாட்டோம் யாரையும் அழவிடமாட்டோம்
இனி எங்கள் துஆக்கள் எல்லாம் உங்கள் மறுமையின் வெற்றிக்காக...
போய் வாருங்கள் அத்தா போய் வாருங்கள்...
இன்று நீங்கள் இன்ஷாஅல்லாஹ் நாளை நாங்கள்
இறைவன் நாடினால் மீண்டும் மறுமையில் சந்திப்போம்...
உங்கள் மறுமையின் வெற்றிக்கு துஆக்களுடன்...
வேங்கை.சு.செ.இப்ராஹீம்
குடும்பத்தார் மற்றும் நண்பர்கள்

புதன், 5 ஜனவரி, 2011

ஜனவரி 28 வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களின் அரசியல் எழுச்சி ந...



ஜனவரி 28
தனிமனித ராணுவமாய்... வீரத்தின் விளைநிலமாய்... பாசிஸ்ட்டுகளின் சிம்ம சொப்பனமாய்...
வாழும் வரை மாவீரனாக வாழ்ந்து உறங்கி கிடந்த சமூகத்திற்கு உணர்வூட்டிய சமுதாய தந்தை ஷஹீத் பழனிபாபா அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள்...


Palani Baba
சமுதாயதந்தை ஷஹீத் பழனிபாபா அவர்களுடன்
தலைவர் கே.எம்.சரீப்
பழனிபாபா மறக்கபடகூடிய பெயரா..? நாம் வாழும் இந்த சமகாலத்தில் வாழ்ந்த தன்னிகரற்ற மாபெரும் தலைவர் பழனிபாபா... அந்த மாவீரனைi

மண்ணோடு மண்ணாக்கிவிட்டால் இந்த முஸ்லிம் சமுதாயத்தை
மண்டியிட வைத்துவிடலாம் என்று மனப்பால் குடித்த கயவர்கள்
கோடாலியால் குடலை கிழித்து கொலை செய்தார்கள்...

சாவை தன் சட்டைப்பைக்குள் வைத்துகொண்டு நடமாடிய எங்கள்
தலைவன் ஒரு காபீரின் கைகளால் நான் வெட்டுப்பட்டு சாகக்கூடிய
வாய்ப்பை எனக்கு தா என்று ஏக இறையவனிடம் கையேந்தி துஆ செய்தவர்...
அல்லாஹ் அவரின் துஆவை அங்கீகரித்து தனது அர்ஷின் நிழலில் இடம் கொடுத்துள்ளான்.

தலைவர் பாபா அடிக்கடி பல மேடைகளில் சொல்வார் என் கதையை முடித்துவிட்டால்
எனது சமுதாயத்தை வேரறுத்துவிடலாம் என் எண்ணிகொண்டிருக்கும் எத்தர்களே
ஒரு பழனிபாபாவை மட்டுமே அதுவும் என் இறைவன் நாடினால் வெட்டி சாய்க்கமுடியும்...
ஆனால் நான் புதைக்கப்படும் இடத்திலிருந்து ஓராயிரம் பழனிபாபாக்களை என் அல்லாஹு
முளைத்து எழச்செய்வான்...

ஆம் அந்த மாபெரும் தலைவனை அடுத்த தலைமுறைக்கும் அறிமுகபடுத்த வேண்டும்
என்கிற நோக்கோடு தலைவர் ஷஹீத் பழனிபாபா அவர்களின் லட்சியங்களை வென்றெடுக்க
உரிமைகள் மறுக்கபட்ட ஆண்ட சமுதாயத்தின் அடிமை விலங்கை உடைக்க... நமது தொப்புள்கொடி
உறவுகளான தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் பூரண விடுதலையை சுவைக்கசெய்ய புறப்பட்டிருக்கும்
ஜனநாயக ஆயுதம் "மக்கள் ஜனநாயக கட்சி" ஆண்டு தோறும் ஜனவரி 28ம் தேதியை
வஞ்சிக்கப்பட்ட சமூக மக்களின் அரசியல் எழுச்சி நாளாக நடைமுறை படுத்திவருகிறது.

ஷஹீத் பழனிபாபா அவர்கள் விதைககபட்டுள்ள புதுஆயக்குடியில் மக்கள் பிரளயம்
சங்கமிக்க வேண்டும்.
வஞ்சிக்கப்பட்டோர் வாழவேண்டும்... வாய்ப்பு மறுக்கப்பட்டோர் ஆழவேண்டும்...
என்கிற அடங்க மறுக்கும் ஆர்பரிப்பு உணர்வோடு அலைகடலும் வெட்கி தலைகுனியும்
வண்ணமாக மக்களின் ஆழிப்பேரலை ஆயக்குடியை சூழ வேண்டும் ஆட்சியாளர்களின்
அடிமனதுவரை உரிமை மறுக்கப்பட்ட சமூகங்கள் ஒன்றினைந்துவிட்டது கிலியை ஏற்படுத்த வேண்டும்...

ஆகவே சமுதாய மக்களே... சகோதர சமுதாய மக்களே... நாம் இணைய வேண்டும்
ஒன்றிணைந்து உரிமைகளை வெல்ல வேண்டுமென லட்சிய முழக்கங்களை தனது
வாழ் நாளெல்லாம் முழங்கிவந்த தலைவர் பழனிபாபா எனும் வீரம் விதைககபட்டுள்ள
வீரத்தின் விளைநிலமாம் பழனி புதுஆயக்குடி நோக்கி அணிவகுக்க தயாராகுங்கள்...

எல்லா எழுச்சிகரமான செயல்களுக்கும் பொருளாதாரம் ஒன்றே மிகப் பெரிய பின்னடைவு
வாகனங்களின் வாடகை பெட்ரோல் டீசல் விலை உயர்வால் விண்ணை முட்டுகிறது...
எத்தனையோ கட்சிகளின் பொதுகூட்டங்களுக்கு மாநாடுகளுக்கு வாரி வழங்கிடும் நீங்கள்
அடுத்த தலைமுறைக்கான தொலைநோக்கு வெற்றியை அடிபடையாககொண்டு நடத்தப்படும்
"வஞ்சிக்கப்பட்ட சமூக மக்களின் அரசியல் எழுச்சி நாள்" வெற்றிபெற உங்கள் கரங்களின்
உதவியை கருணையோடு நீளசெயுங்கள்...

உங்கள் உதவிகளை உங்கள் பங்களிப்பை
MAKKAL JANANAYAGA KATCHI - A/C. No. 388901010023108,
UNION BANK OF INDIA,
PUDUKKOTTAI, TAMILNADU 622001.
என்கிற வங்கி கணக்கிற்க்கோ அல்லது
K.M.SHARIFF
A/C No. 611401500433,
ICICI BANK LTD,
PUDUKKOTTAI 622001 TAMILNADU.
என்கிற வங்கி கணக்கிற்க்கோ அனுப்பி தாருங்கள் என அன்புடன் கேட்டுகொள்கிறது
மக்கள் ஜனநாயக கட்சி

"என் சமூக மக்களே ஒரு வேலை நான் மரணித்துவிட்டால் உங்களுடன்
நான் இல்லையென கலங்காதீர்கள்.... கவலை கொள்ளாதீர்கள் உங்களோடு
என்றுமே அல்லாஹு ரப்புலாலமீன் இருப்பான்" ஷஹீத் பழனிபாபா

எல்லோருக்கும் பொதுவான இறையவன் நாடினால்.. எழுச்சிகரமான ஜனவரி 28ல்
ஆயக்குடியில் சந்த்திப்போம்... உரிமையுடன் அழைக்கிறது...
மக்கள் ஜனநாயக கட்சி

திங்கள், 3 ஜனவரி, 2011

மடியில் கனமில்லை... அப்துல் ரஹ்மான்.எம்.பி. பிறைமேடை தலையங்கம்

பிரியமுள்ள பிறை நெஞ்சுக்கு! வல்ல இறைவனின் அளப்பரிய பேரருள் நம் அனைவர் மீதும் இலங்கட்டுமாக! சமுதாயத்தில் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமான பிரச்சினைகள் தீர்வுகளை நோக்கி ஏக்கத்தில் மூழ்கி இருப்பதை நாம் நன்கறிவோம். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில், ஒரே கோணத்தில் பார்க்க முடியவில்லையென்றாலும் அவைகளை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து, நிரந்தர தீர்வுகளைக் காண வேண்டிய பொறுப்பிலிருந்து எந்நிலையிலும் பின்வாங்காமல், தொடர்ந்து பணியாற்றி அதன் இலக்கை அடைவது என்பது நமது தாய்ச்சபை முஸ்லிம் லீகின் தொடர் வரலாறு. சமுதாயம் சந்திக்கும் இப்பிரச்சினைகளைக்கூட முன்னுரிமை தரப்பட வேண்டிய முறையைப் பின்பற்றியே எப்போதும் கையாள்கிறோம். அந்த வகையில் ஆங்காங்கே சிறு சிறு அத்தியாயங்களைக் கொண்ட முறையீடுகளைப் பெற்று அவைகளுக்கான தகுந்த பரிகாரங்களையும், தீர்வுகளையும் பெற்றாலும் சில முக்கியமான பிரச்சினைகளின் அம்சங்களையும், அவசியங்களையும் சொல்லிக் காட்டியே ஆகவேண்டும் எனத் தோன்றுகிறது. அண்மையில் நாம் சந்தித்த �கட்டாயத் திருமணச் சட்டம்� நமக்கு ஒரு பெரும் சவாலாக இருந்தது. இச்சட்டத்தின் பிடியிலிருந்து மீளுவதற்கும், நமக்கென்று பிரத்தியேகமாக சில சட்டமாற்றங்களைப் பெறுவதற்கும் நாம் எடுத்துக் கொண்ட பகீரத முயற்சிகளும், அறிவுப்பூர்வமான அணுகுமுறைகளும் ஏராளம். அவைகளையெல்லாம் நான் முன்பே எழுதிக் காட்டியிருக்கிறேன். மாண்புமிகு முதல்வரைச் சந்தித்தது; துணை முதல்வரைக் கேட்டுக் கொண்டது; சட்டத் துறை அமைச்சரோடு கலந்துரையாடல் செய்தது; சட்டத் துறை அதிகாரிகளோடு கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டது; தமிழ்நாடு அரசின் உள்துறை அமைச்சரைத் தொடர்பு கொண்டு அடிக்கடி நினைவூட்டிக் காரியம் ஆற்றச் செய்தது என்று ஏராளமான இடைவிடாத முயற்சிகள். அயரவில்லை; ஐயம் கொள்ளவில்லை; ஆர்ப்பரிக்கவில்லை; அமைதியாகச் சிந்தித்தோம், நிதானமாக அணுகினோம். சொல்ல வேண்டிய கருத்துக்களைச் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டியவர்களிடம் எடுத்துரைத்துக் காரியமாற்றினோம். நிறைவாக சென்ற 27.08.2010&ல் நாம் எதிர்பார்த்தபடி சட்டதிருத்தங்களைப் பெற்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டோம். அதன் விளைவுதான் ��காலம் காலமாக நம் நடைமுறையில் இருந்துவரும் ஜமாஅத் முறையிலான நிக்காஹ் பதிவே எந்த மாற்றமும் இல்லாமல் தொடரலாம்; அந்தப் பதிவிவில் பதியப்படும் தகவல்களே அரசுத் தகவல்களாகக் கொள்ளலாம்�� என்ற அறிவிப்பு அரசு ஆணையாக வெளிவந்தது. அல்ஹம்துலில்லாஹ். தொடர்ந்து சமச்சீர் கல்விப் பாடத் திட்டத்தில் நம் சமுதாயம் பெரும் ஏமாற்றத் திற்குள்ளானதன் வெளிப்பாடாக உருது மற்றும் அரபி மொழிப் பாடங்கள் இப்பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை அரசிடம் முன்வைத்தோம். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களோடு பலமுறை சந்தித்து உரையாடினோம். நமக்கே உரிய அதே அணுகுமுறை, அதே நடைமுறை, அதே செயல்முறை. அதன் உச்சகட்டமாக சென்ற 11.12.2010 அன்று சென்னையில் நாம் நடத்திய பிரம்மாண்டமான மாநில மாநாட்டில் முதல் கோரிக்கையாக எடுத்து வைத்தோம். கனிவோடும், இணக்கத்தோடும் நமது கருத்துக்களை உள்வாங்கிய மாண்புமிகு முதல்வர் அவர்கள் �உருது மற்றும் அரபி சிறுபான்மை மொழிப்பாடங்கள் சமச்சீர் கல்விப் பாடத் திட்டத்தில் சேர்க்கப்படும்� என்கிற உறுதிமொழியை லட்சோபலட்ச மக்கள் வெள்ளத்தில் பிரகடனப்படுத்தினார். அதைத் தொடர்ந்து நான்கே நாட்களில் 15.12.2010 அன்று அரசு ஆணையும் வெளியாகியது. அந்த அரசு ஆணையின் வாசகத்தில் �இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் வைக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று�� என்று குறிப்பிட்டே நம்மை பெருமைப்படுத்தியிருப்பது நம் சமுதாயத்தைப் பெருமைப்படுத்தியதாகவே பொருள். நம் தாய்ச்சபை முஸ்லிம் லீக் வேறு; சமுதாயம் வேறு என்று யாராலும் எந்த காலத்திலும் பிரித்துப் பார்க்க முடியாத உயரிய லட்சியம் அரசாங்க ஆணையிலும் பிரதிபலிக்கிறது என்றால் & என் பாசமிகு பிறைநெஞ்சே! யாருக்குண்டு இந்த தகுதியும் தகைமையும்? எவருக்குண்டு இந்த சங்கையும் சிறப்பும்? எந்த அமைப்புக்குண்டு இந்த கண்ணியமும் கரிசனமும்? உன் உயிரும் உதிரமும் சமுதாயச் சிந்தனையால், உணர்வுத் துடிப்பாய்ப் பிரதிபலிக்கும் முஸ்லிம் லீக் என்கிற தாய்ச்சபை பேரியக்கம் மட்டும்தானே சாதித்திட இயலும்! எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. இதிலே நமக்கு ஆணவம் இல்லை; அகம்பாவம் இல்லை; முஸ்லிம் லீக் என்ன செய்தது? என்ன செய்கிறது? என்று கேட்பவர்களுக்கு மட்டுமே இந்த கேள்வி. உயிரணைய பிரச்சினைகள் என்று சமுதாயம் சந்திக்கிறபோது ஓடி மறைந்து கொள்வதும் அல்லது வெளிரங்கத்தில் போராடுவதைப்போல பாசாங்கு செய்து தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிகைகளுக்கும் சினிமா பாணியில் விளம்பரம் செய்து தங்களது தொடர் வசூல்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதும்தான் மற்றவர்களுக்கு வாடிக்கை. இத்தகைய சுயநலப் போக்கில் நமக்கு என்றைக்குமே உடன்பாடு கிடையாது. கண்ணியமிக்க காயிதெ மில்லத் அவர்கள் காலந்தொட்டு, சிந்தனைச் செம்மல் சிராஜுல் மில்லத், இன்றைய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்கள் வரை நமக்கு வழிகாட்டிய நெறிமுறைகளும், செறிவூட்டிய சிந்தனைகளும் நேரிய பண்பாட்டு உணர்வுகள்; இஸ்லாமிய ஒழுக்கச் சட்டங்கள்; விழுமிய மார்க்க மாண்புகள். இவற்றிலிருந்து கிஞ்சிற்றும் மாறாமல், மறையாமல் இருப்பதால்தான் வல்ல அல்லாஹ் இவை போன்ற சாத்தியங்களை சத்திய வழிமுறையாக நம் பேரியக்கத்திற்கு வழங்குகிறான். சட்டரீதியாக, அரசியல் ரீதியாகப் பெற முடிந்த இத்தகைய இரண்டு தீர்வுகளையும் �சமுதாயப் பணிகள் ஆற்றுகிறோம்� என்று விளம்பரம் தேடுகிற எந்த அமைப்பாவது நடத்திக் காட்டிட இயலுமா? வல்ல அல்லாஹ்வின்மீது முழுமையாய் நம்பிக்கை வைத்தவர்களாகச் செயல்பட்ட நாம் இதனைப் பெற முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ். நல்ல சிந்தனையாளர்கள், சிறந்த பார்வையுடையவர்கள், சான்றோர்கள், ஆன்றோர்கள் அத்தனை பேரும் தயக்கமின்றி போற்றுகிறார்கள்; பாராட்டுகிறார்கள். துஆ செய்கிறார்கள். மாஷா அல்லாஹ். நாம் ஆற்றியிருக்கும் பணிகளின் வரிசை நீளமானது. ஒரே இதழில் வரிசைப்படுத்த இயலாது என்பதால் தொடர்ந்து எழுகிறேன். இன்ஷா அல்லாஹ். பிறைநெஞ்சே! பணிகள் ஏராளம் உள்ளன; மடியில் கனம் இல்லை & நம் பயணம் தொடர்கிறது. பிடியில் தளர்வு இல்லை & நம் முழக்கம் ஓங்குகிறது. என்றும் உன்னோடுதான்...
நன்றி; பிறைமேடை

மாஷாஅல்லாஹ்

ஏக இறைவனின் இனிய பெயர்போற்றி...
அன்பிற்கும் நட்பிற்கும் இனிய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின்
அனைத்து நிர்வாகிகளுக்கும் தங்கள் சமுதாய சகோதரன் வேங்கை இப்ராஹீம்
எழுதுகிறேன்...

அஸ்ஸலாமு அலைக்கும் (வறஹ்...)
நலம் நலமே விளைய துஆ செய்தவனாக தொடர்கிறேன்...
அல்ஹம்துலில்லாஹ் தமிழக பாப்புலர் பிரண்டின் தலைவராக
செயலாற்றிய கண்ணியத்திற்குரிய சகோதரர் முகமது அலி ஜின்னா
அவர்கள் தேசிய துணைத்தலைவராகவும், புதிய மாநில தலைவராக
சகோதரர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்களும் தேர்வு செய்யபட்டிருப்பது
அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்...

மேலும் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து நிர்வாகிகளின்
பணிகளும் சிறப்படைய கருணையாளன் அல்லாஹுவை கரமேந்தி
பிராத்திக்கிறேன்...

சமுதாயம் சவால்மிக்க காலகட்டத்தில் இருக்கும் இத்தருணத்தில்
பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் சீரிய வீரியமிக்க களப்பணி
அவசியம் தேவை.

அன்புடனும் நட்புடனும்...
உங்கள் சமுதாய சகோதரன்
வேங்கை.சு.செ.இப்ராஹீம்

டாக்டர் ரெனீஃபிற்கு ஜாமீன்: உச்சநீதிமன்றம் உறுதிச்செய்தது!!!

புதுடெல்லி,ஜன.3:கேரள மாநிலம் முவாற்றுப்புழாவில் நபியவர்களை அவமதித்த பேராசிரியரின் கை வெட்டப்பட்ட வழக்கில் கைதுச் செய்யப்பட்ட டாக்டர் ரெனீஃபிற்கு கேரள உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை உச்சநீதிமன்றம் உறுதிச்செய்தது.

நீதிபதிகளான மார்கண்டேய கட்ஜு, ஞான் சுதா மிஷ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இத்தீர்ப்பை அளித்துள்ளது.
தாக்குதல் நடத்திய ஒருவருக்கு சிகிட்சை அளித்ததன் காரணமாக டாக்டர் ரெனீஃபிற்கு ஜாமீன் வழங்காமலிருக்க முடியாது. ரெனீஃபும் அவருடைய மனைவியும் மருத்துவர்களாவர். அவருடைய தந்தையும் டாக்டராவார் எனக் கூறிய உச்சநீதிமன்றம் ரெனீஃப் பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் எஸ்.டி.பி.ஐ உறுப்பினர் எனவும், பேராசிரியர் கை வெட்டப்பட்ட வழக்கில் சதித்திட்டத்தில் பங்கேற்றார் என போலீஸ் கூறியவாதத்தை நிராகரித்தது.
சதித்திட்டம் தீட்டியதுத் தொடர்பாக விசாரணையின்போது பரிசீலிக்க வேண்டிய விஷயமாகும். ஆதலால், தற்பொழுது ஜாமீன் வழங்காமலிருக்க முடியாது.
பாப்புலர் ஃப்ரண்ட் சட்டரீதியாக பதிவுச் செய்யப்பட்ட இயக்கமாகும், அது தடைச் செய்யப்பட்டதல்ல. எஸ்.டி.பி.ஐயோ தேர்தல் கமிஷனில் முறையாக பதிவுச் செய்துள்ளது. இந்த அமைப்புகளில் உறுப்பினராக செயல்படுவதால் ஜாமீன் அனுமதிக்காமலிருக்க முடியாது. இவ்வாறு உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்