Subscribe:

வியாழன், 20 ஜனவரி, 2011

நாம் எங்கே போகிறோம்...?

என்
இனிய சமுதாய சகோதரா...
உன்
ஆற்றல்மிகு சிந்தனைகள்
வீரியமிகு செயல்பாடுகள்...
தூய்மையான மார்க்கபணிகள்...
துடிப்பான உன் வேகம்...
மார்க்க
புறம்பான செயல்களை எல்லாம்
புறந்தள்ளிய உன் விவேகம்...
அடக்குமுறைகளை எல்லாம்
உடைதெறிந்து உரிமைவெல்ல
ஆர்பரிக்கும் போர்குணம்...
இளையவயதின் ஆசாபாசங்களை
இந்த உலக அற்ப சுகங்களை
துச்சமென தூக்கியெறிந்த
என்
இனிய சமுதாய சகோதரா...
இந்த
தியாகங்கள் எல்லாம் எதற்க்காக...
உன்
உழைப்பின் பகுதியை
உணர்வோடு வாரி வழங்கினாயே எதற்க்காக...
உன்
தலைமுறை தலைநிமிர்ந்து வாழத்தானே...
இல்லை
தலைவர்களை வாழவைப்பதற்கா...?
சமுதாய துரோகிகளை துவசம் செய்து
அதிகாரவர்க்கத்தின் அடிமைவிலங்கினை அறுத்தெறிந்தாயே
நீ
அமைப்புகளின் பெயரால்
அடிமைபட்டுக்கிடப்பதற்க்கா...?
பிளவுபட்டுக்கிடப்பதற்க்கா...?
சமீபகாலமாக
சங்பரிவார்களின் சத்தத்தை காணோமே
ஓ...
அவர்களின் வேலைகளை நீயே
சத்தமிட்டு செய்வதினாளா...?
சகோதரயுத்தம் புரிவதினாளா...?
என்
இனிய சமுதாய சகோதரா...
இந்து முன்னணிகளும்
பஜ்ரங்தளங்களும்
பாரதீய ஜனதாக்களும்
உன்னைப்போல
அருள்மறையின் வழிகாட்டுதல்
இல்லாதவர்கள்தானே...
மாநபி பெருமானின்
வாழ்க்கைப்பாடம் தெரியாதவர்கள்தானே...
வெவேறு பெயர்கள்
வெவேறு தலைமைகள்
வெவேறு கொடிகள்
இருந்தாலும் பார்த்தாயா
உன்னை வேரறுக்க வேண்டுமென்பதில்
தளராத ஒற்றுமையை...
என்
இனிய சமுதாய சகோதரா...
நாம் எங்கே போகிறோம்...?
நமது இலக்கு என்ன?
இலக்கில்லாத பயணம்
விளக்கில்லாத வீடல்லவா?

கருத்துகள் இல்லை: